Mutur JMI

𝙅𝙪𝙣𝙖𝙞𝙙 𝙈𝙤𝙝𝙖𝙢𝙚𝙙 𝙄𝙝𝙨𝙝𝙖𝙣 𝐀𝐮𝐭𝐡𝐨𝐫 | 𝐏𝐮𝐛𝐥𝐢𝐬𝐡𝐞𝐫 | 𝐖𝐫𝐢𝐭𝐞𝐫 | 𝐅𝐫𝐞𝐞𝐥𝐚𝐧𝐜𝐞 𝐉𝐨𝐮𝐫𝐧𝐚𝐥𝐢𝐬𝐭 👉 𝙒𝙚𝙗𝙨𝙞𝙩𝙚 – www.jmi-mutur.com 👉 𝙈𝙖𝙞𝙡 – ihshanjm@gmail.com 👉 𝙁𝙖𝙘𝙚𝙗𝙤𝙤𝙠 – Ihshan J.M.I Mohamed - www.facebook.com/JMI.Ihshan 👉 𝙁𝙗 𝙥𝙖𝙜𝙚 Professional - Mutur JMI – www.facebook.com/IhshanJMI Personal - Ihshan JMI – www.facebook.com/MuturJMI 👉 𝙄𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢 – Ihshan JMI - www.instagram.com/ihshan_jmi 👉 Contact 0771020030

Business

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, November 26, 2018

சேவல் முட்டையிடுமா (Wind Egg)

Related imageமுட்டைகள் சாப்பிடுவதை தவிர அது எவ்வாறு தோற்றம் பெற்றது என்பதை பற்றி நாம் ஒருபோதும் சிந்திப்பது கிடையாது. முள்ளந்தண்டிலி மற்றும் முள்ளந்தண்டுலி என்ற இரு வகுப்பிலும் முட்டையிடும் பண்பு இருந்து வருகிறது. அவற்றில் புறக்கருக்கட்டல் மற்றும் அகக்கருக்கட்டல் கொண்ட இருவகை உண்டு. பரிணாம வளர்ச்சியில் முளையூட்டிகளுக்கு முன்னிடத்தில் இடம்பெறும் நபர்களே பறவைகள் (Aves). பறவைகள் தெளிவான ஆண், பெண் பால் இயல்பை காட்டும். பறவைகளை பொறுத்தவரையில் பொதுவாக பறக்கும் இயல்பு கொண்டது. இதற்காக கூர்ப்பில் உடலியல் ஒழுங்கமைப்புகள் சில மாற்றமுற்று விருத்தியடைந்தது. அவ்வகையில் அவற்றின் கருவுற்ற முட்டையும் ஒன்றாகும்.

பறவைகள் ஏன் முட்டை இடவேண்டும்? 
பரிணாமத்தில் இந்த வசதி தேர்ந்தெடுக்கப்பட்டதால் எனக் கொள்ளலாமா?. கூர்ப்பில் முட்டை ஈனும் முறை ஒரு விருத்தியுற்ற செயற்பாடாக காணமுடிகிறது. கரு உருவாகி வளர்ந்து பிறக்கும் வரையில் அதனைக் கருப்பையில் தாங்கிக்கொண்டு பறக்க இயலாது என்பதால், வெளியில் முட்டையாக இட்டு அதனை அடைகாத்து குஞ்சாகப் பொறிப்பது வசதியெனக் கண்டு கொண்டது அதிசயம்தான்.

கோழிக்குஞ்சு எந்த கருவில் இருந்து இருவாகிறது?
(வெள்ளைக்கரு / மஞ்சள் கரு) 
சரி, கோழிக்குஞ்சு உருவாவது வெள்ளைக் கருவில் இருந்தா அல்லது மஞ்சள் கருவில் இருந்தா என்ற கேள்விக்குப் பதில் இரண்டிலும் இருந்து இல்லை. இரண்டும் கோழிக்குஞ்சின் கரு உருவாகி வளரத் தேவையான சக்திகளை சேமித்து வைக்கும் பொருட்களே. குஞ்சி வளர வளர தேவையான சக்தியை மஞ்சள்,வெண் கருவில் இருந்து பெறுகிறது.
Related image
முட்டையின் அமைப்பை
வெளிச்சுவற்றில் இருந்து துவங்குவோம். வெளியில் இருக்கும் ஓடானது கால்சியம் கார்பனேட் (Calcium Carbonate - சுண்ணாம்பு) என்ற வேதிப்பொருளினால் உண்டானது. இதில் மிக நுண்ணிய துளைகள் (ஏறக்குறைய 7000 அளவிற்கு) இருக்கும். எல்லாப் பொருட்களையும் உள்ளே அனுமதிக்காது, வெளியேயும் விடாது. இதனால் இவற்றை தேர்ந்து புகவிடும்/ஒருபங்கு புகவிடும் மென்சவ்வு (Semi-permeable) என்பர். இந்தத் துளைகள் வழியேதான் காற்று உள்ளே சென்று வரும்.
அதற்கடுத்து இரண்டு சவ்வுக்கள் உள்ளன. அவற்றை வெளியடுக்குச் சவ்வு (Outer Shell Membrane) என்றும் உள்ளடுக்குச் சவ்வு (Inner Shell Membrane) என்றும் சொல்வர். இவற்றிற்கு இடையேயான இடைவெளிதான் காற்றுப் பை.

அதற்குப் பின் துவங்குவதுதான் நாம் வெள்ளைக்கரு (Albumin) என்றழைப்பது. இதுவும் இரண்டடுக்காகக் காணப்படும். மேலடுக்கில் சற்று இளகி கிட்டத்தட்ட நீர்ம நிலையில் மெல்லியதாக இருக்கும். அது உள்நோக்கிச் செல்லச் செல்லச் சற்றுக் கடினமாகி இரண்டாம் அடுக்கில் கெட்டியாக இருக்கும். இந்த வெள்ளைக் கருவானது 90 சதவீதம் தண்ணீரும் 10 சதவீதம் புரதங்களும் கொண்டது. சில மினரல்கள், குளுக்கோஸ் மற்றும் வைட்டமின்களும் கொண்டிருக்கும். கொழுப்பு இல்லவே இல்லை என்று சொல்லலாம். இதுவே முட்டையின் மூன்றில் இரண்டு பங்கு எடையைக் (வெளி ஓட்டினைச் சேர்க்காமல்) கொண்டது.

அடுத்து இருப்பதுதான் முட்டையின் மஞ்சள்கரு (Yolk). இதுவே கோழிக்குஞ்சாக உருவெடுக்கும் என்று தவறாக நம்பப்படுகின்றது. மாறாக, கோழிக்குஞ்சு உருவாவதற்கு உணவாக இருப்பதே இதுவாகும். இந்த மஞ்சள் கருவானது அசைந்து சிதைந்து விடாமல் இரண்டு சுருள் பட்டைகளால் (Chalazae) வெள்ளைக்கருவோடு பிணைக்கப்பட்டிருக்கும். இதுவே கோழிக்குஞ்சு உருவாவதற்கான உணவு என்பதால், இதில் பெருமளவு வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் கொண்டிருக்கும். கொழுப்புச் சத்தும் நிறைந்திருக்கும்.
Related image
அடுத்து, அந்த மஞ்சள் கருவில் சளி (mucus) போன்று ஒன்று ஒட்டி இருப்பதை நம்மில் பெரும்பாலார் பார்த்திருக்கலாம். சில சமயம் ஒரு சிறு சிவப்பு புள்ளியும் அதில் தெரியும். அதுதான் கோழிக்குஞ்சின் கரு (Embryo). அதுவே கோழிக்குஞ்சாக வளர்ச்சி பெறப்போகின்றது. மனிதக்கரு எப்படி தொப்புள்கொடி (Umbilical Cord) மூலம் தாயின் கருப்பையோடு இணைக்கப்பட்டுள்ளதோ, அது போன்று ஒரு கொடி மஞ்சள் கருவோடு இணைக்கப்பட்டிருக்கும்.

முட்டை எப்படி உருவாகின்றது?
மனிதப் பெண்களைப் போலவே, கோழியானது தனக்குள் நிறைய குருவுறாத சினை முட்டைகளைக் கொண்டுள்ளது. பருவம் வந்தவுடன் மனிதப்பெண்ணின் கருமுட்டையோடு ஆணின் விந்தணு சேராவிட்டால், முதிர்வடைந்த முட்டை உதிரப்போக்காக வெளியேறிவிடும். ஆனால், கோழியானது சேவலோடு சேர்ந்தாலும், சேராவிட்டாலும், முட்டையானது முழுவடிவம் பெற்று வெளியே வந்துவிடும். ஒரே ஒரு வேறுபாடு. அம்முட்டையில் இருந்து கோழிக்குஞ்சு வராது.

ஒருவேளை சேவலோடு உறவு கொண்ட கோழி, சேவலின் விந்தணுவை ஏறத்தாழ ஒரு வாரம் வரையில் தனக்குள் வைத்திருந்து தான் இடும் முட்டையின் கருவோடு சேர்த்து உயிருண்டாக்கும் (கிட்டத்தட்ட 10) முட்டைகளை இட முடியும்.
Image result for Chicken egg
முன்பே சொன்னது போல் கோழியானது தன் கருவகத்திற்குள் முதிர்வடையாத முட்டைகளைக் கொண்டிருக்கும். முட்டைகளின் எண்ணிக்கை மரபு சார்ந்தும், அக்கோழி வளர்க்கப்பட்ட விதமும் சார்ந்ததாகும்.

அந்த முதிர்வடையாத கருமுட்டையானது 6mm விட்டம் அளவிற்கு வளர்ச்சியடைந்து கொண்டே வரும். கோழியும் பருவமெய்தியவுடன், அந்த வளர்ச்சி மிக வேகமாக நிகழ்ந்து ஒரு நாளைக்கு 6mm என்ற அளவில் வளரத் துவங்கி ஏழு நாட்களில் முழுமையடையும் மஞ்சள்கருவோடு. முதிர்ந்த கருவானது கருவிழைக்குழாய் (Follicle) வழியாக வெளித்தள்ளப்படும். கருக்குழாய் (Oviduct) வழியே மெதுமெதுவே பயணிக்கும். கருக்குழாயின் வளையங்கள் சுருங்கி விரிந்து (peristaltic waves) அம்முட்டையின் பயணத்தை எளிதாக்கும்.

கருப்பைக்குள் தள்ளப்பட்டு அங்கு முட்டையின் ஓடு மேலே உருவாகும். இப்பொழுது முட்டை வெளிவரத் தயார் நிலையில் உள்ளது. அதற்கு முன்னர், அந்த ஓட்டிற்கான நிறமி சேர்க்கப்படுகின்றது. இந்த வெளியோடு முட்டையை கிருமிகள் தாக்காவண்ணம் பாதுகாக்கின்றது. இது வெளியேறுவதற்கு வசதியாக இளகிய நிலையிலேயே இருக்கும்.இனி மெதுமெதுவே முட்டையானது கோழியின் குதம் வழியே வெளித்தள்ளப்படுகின்றது. முட்டையில் வெளிக்காற்று பட்டதும், வெப்பநிலை காரணமாக வெளியோடானது இறுகி கெட்டியாகிவிடும். அதே நேரத்தில் உள்ளே இருக்கும் பகுதியானது சற்றே தன் இயல்பில் இருந்து சுருங்கும்.அப்பொழுது வெளிப்புறச் சவ்விற்கும் உட்புறச் சவ்விற்கும் இடையே ஒரு வெற்றிடம் ஏற்படும். அதனை நிரப்ப வெளிக்காற்று, வெளியோட்டின் நுண்ணிய துளைகள் வழியாக உள்ளே சென்றுவிடும்.

Image result for Chicken eggமுட்டைக்குள் கோழிக்குஞ்சு சுவாசிக்குமா?
என்றால் ஆம்
முட்டையிலிருந்து வெளிவரும் மூன்று நாட்களுக்கு முன் முழுமையான உருவம் பெற்ற கோழிக்குஞ்சானது உள்ளடுக்குச் சவ்வினைத் தன் அலகால் கிழித்து முதல் சுவாசத்தை மேற்கொள்ளும்.

ஆண் பெண் தீர்மானம் 
பாலூட்டிகளில் ஆண் Heterozygous (XY) பெண் homozygous (XX) என இருக்கும். அதாவது ஆண் X, Y என இரண்டு குரோமோசோம்களைக் கொண்டிருக்கும். ஆனால் பறவைகளில் அப்படி இல்லை.பறவைகளில் பெண் Heterozygous (ZW) ஆண் homozygous(ZZ) என இருக்கும். அதாவது பெண் X,  என இரண்டு குரோமோசோம்களைக் கொண்டிருக்கும். ஆக, கோழியே தன் குஞ்சு ஆணா பெண்ணா என்பதைத் தீர்மானித்துவிடும்.

சமயங்களில் ஒரே முட்டைக்குள் இரண்டு மஞ்சள் கருக்கள் இருக்கும். இது கருமுட்டை வெளிவரும் வேகத்தையும், சுழற்சி முறையில் ஏற்படும் தவற்றினாலும் ஏற்படும்.
Image result for Wind Egg
சேவல் முட்டை 
வெகு அபூர்வமாக மஞ்சள் கருவே இல்லாமலும் முட்டை இருக்கும். அதனை  Wind Egg என்று சொல்வார்கள். இது பெரும்பாலும் கோழியின் முதல் முட்டையிடும் முயற்சியில் ஏற்படும். முட்டையிடும் திறன் முழுமையடையாத நிலையில் கருமுட்டை வெளிவராமலேயே வெள்ளைக்கருவை உருவாக்கி வெளியோடைச் சேர்த்து முட்டை வெளிவந்து விடும். இதனை சேவல் போட்ட முட்டை என்றும் தவறாகச் சொல்வார்கள்.

தேடல் வலைதளங்கள்
https://en.wikipedia.org/wiki/Egg
https://en.wikipedia.org/wiki/Chicken
https://en.wikipedia.org/wiki/Yolk
https://animals.mom.me/eggs-form-inside-chicken-7248.html
https://www.chowhound.com/food-news/54729/whats-the-difference-between-fertilized-and-unfertilized-eggs/
https://www.mypetchicken.com/backyard-chickens/chicken-help/At-what-age-do-hens-start-laying-eggs-H41.aspx

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages