
முதலில் ஈரம் என்ற சொல்லை பற்றி பார்ப்போம்.
ஈரம் என்ற சொல் நடைமுறை மொழி வழக்காற்றியலில் நீர் உள்ளடக்கம் கொண்ட ஒரு பொருளை சார்ந்து இருக்கும். தமிழில் பொதுவாக ஈரம் என்ற சொல் பரவலாக வெவ்வேறு நிலைபாடுகளிற்கு பயன்படுத்தப்பட்டாலும் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் அறிவியல் நிலைப்பாட்டை ஒத்த சார்பு நிலை சொற்களை கொண்டு விளக்கினால் சற்று இலகுவாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.
நீர் கொண்ட உள்ளடக்கத்திற்கு ஈரம், ஈரப்பதன், தண்ணி தன்மை, என்று தமிழ் கூறுவார்கள். ஆனால் ஆங்கிலத்தில் Wet (ஈரம்), Moisture (ஈரப்பதன்), Relative Humidity (சார் ஈரப்பதன்), Water Activity (தண்ணீர் உள்ளடக்கப் பெறுமானம்) பயன்படுகிறது. ஆங்கிலத்தில் பயன்படும் ஒவ்வொரு சொற்களும் ஒவ்வொரு நீர் உள்ளடகத்தை குறிப்பாக சுட்டிக்காட்ட பயன்படுகிறது.

ஈரம் என்ற சொல் எங்கே பயன்படுகிறது என்றால் பொதுவாக திண்ம திரவியங்களிற்கே உபயோகிக்கப்படும். திரவ உள்ளடக்கங்களிற்கு ஈரம் என்ற சொற்பிரயோகம் நடைமுறையில் பயன்படுத்த முடியாது. உதாரணமாக நாங்கள் கூறுவது போல சூழல்/காற்று இன்று ஈரப்பதனாக உள்ளது, துணி ஈரமாக உள்ளது போன்று. ஆகவே எமது கேள்வியான தண்ணீர் ஏன் ஈரமாகவுள்ளது என்ற வினா நடைமுறைக்கு தவறானது. ஆனாலும் அறிவியல் ரீதியாக வினாவில் சற்று உண்மை தன்மை நிலவத்தான் செய்கின்றது.
நியமம் என்ற ஒன்றை பற்றி நீங்கள் அறிந்து இருப்பீர்கள். உதாரணமாக நெருப்பு சுடும் என்பது போல நீர் ஈரம். ஒரு நியமமான காட்டியை கொண்டு எவ்வேறு வரையறை செய்ய முடியும் என்பதில் சிக்கல் உண்டு. ஈரம் என்றாலே நீர் தான் நியமமாக பயன்படுத்தும் போது எவ்வாறு நீரை ஈரம் என்று வரையறை செய்வது?
ஆங்கில சொற்களான Wet என்பது பொதுவாக திண்மத்திற்கு பயன்படும் சொல். அதுபோல Moisture content என்பது குறிப்பாக திண்ம நிலை பொருட்களிற்கும் Relative Humidity வாயு உள்ளடக்கத்திற்கும் Water Activity திண்மம், திரவம், வாயு என்ற மூன்று நிலைகளிற்கும் பயன்படுகின்றது. இதில் இருந்து தண்ணீர் என்பதற்கு இங்கே பொருத்தமான வார்த்தை பிரயோகம் Water Activity (நீர் உள்ளடக்கப் பெறுமானம்) என்பதே.

மேற்பரப்பு இழுவிசை (Surface Tension) கருத்தில் கொண்டுதான் ஒரு பொருள் ஈரப்தன் தீர்மானம் செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில் நீர் மூலக்கூறும் குறித்த தொடுகையில் உள்ள மற்ற மூலக்கூறையும் கொண்டே ஒரு பொருள் ஈரமா இல்லை உலர்ந்ததா என்று தீர்மானிக்கப்படுகிறது. அந்தவகையில் விஞ்ஞானிகளிடத்தில் நீர் ஈரமா என்பதில் கருத்து முரண்பாடு இன்றளவும் நிலவுகின்றது. காரணம் ஈரம் என்ற சொல்லிற்கு அறிவியல் ரீதியாக வழங்கப்பட்ட வரைவிலக்கம். ஆனால் Ice cube (திண்ம நீர் கட்டி/ பனிக்கட்டி) உலர்ந்த ஒருபொருள் என்பது உறுதியானது.
தேடல் வலைதளங்கள்
https://www.debate.org/opinions/is-water-wet
https://www.youtube.com/watch?v=s-Dh51C04ic
https://www.theguardian.com/notesandqueries/query/0,5753,-1725,00.html
http://info.zehnderamerica.com/blog/absolute-vs.-relative-humidity-whats-the-difference
https://en.wikipedia.org/wiki/Water_activity
https://en.wikipedia.org/wiki/Moisture
No comments:
Post a Comment