பொதுவாக தமிழ் சினிமாவில் அன்றுதொடக்கம் இன்றுவரை காணும் மிக்கப்பெரும் பொய் பித்தலாட்டமே விஞ்ஞானத்தின் எந்தவொரு விதிகளும் குறிப்பாக உந்தக்காப்பு விதி, சக்திக்காப்பு விதிக்கு ஒழுகாத சண்டை காட்சி மற்றும் ஏனைய திரைப்பட சுவாரசிய காட்சி அமைப்பு. கற்பனைக்கு ஒரு எல்லை வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் பிரபல நடிகர்களின் (சரத்குமார், விஜயகாந்த், சூரியா, விஜய், விகாரம் .... etc) திரைப்படங்களில் இவ்வாறான தர்கவியல் (logical) பிறழ்வுகளை அதிகம் அவதானிக்க முடிகின்றது.
ஆனாலும் கொலிவூட் திரைப்படங்களில் மீ கற்பனை திறன் செல்வாக்கு அதிக தாக்கத்தை உண்டாக்கிய போதும் சில ஏற்கத்தகு லொஜிக் ஆதிக்கம் குறைப்பாடில்லை எனலாம். அந்தவகையில் Top Ten Part -2 ஆனா இப்பதிவில் இடம்பெறும் இரண்டு திரைப்படங்கள் Oblivion and National Treasure இடம்பிடித்துள்ளது.
No 23 - Oblivion
Joseph Kosinski தயாரிப்பில் 2013 இல் வெளியான ஒரு அதீத கற்பனை திறன் கொண்ட திரைப்படம் என்று கூறலாம். திரைப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான கதாநாயகன் Tom Cruise நடித்துள்ளார். கோலிவுட் சினிமாவில் நடிகர் தரப்படுத்தலில் முதல் பத்தினுள் உள்ளடங்கும் கதாநாயகன் இவன். ஆனாலும் இதுவரை எந்தவொரு ஒஸ்கார் விருதையும் பெறவில்லை என்பது ஒரு கவலைக்குரிய விடயம்.
சரி தலைப்பிற்கு வருவோம். Oblivion திரைப்படம் 2077 இவ்வுலகில் உள்ள மனித சனத்தொகையின் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டது. குறிப்பாக சந்திரன் அழிவுற்றதன் தாக்கம், சூழல் மாசடைவு காரணமாகவும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாகவும் மற்றும் அனுவாயித போர் காரணமாகவும் மனித வாழ்க்கை கேள்விக்குறியாகின்றது. இதனால் பூமியில் பல்வேறு பாகங்களில் அந்த குறித்த சூழல் தொகுதியை அவதானிக்கவும் அந்த சூழலில் உண்டாகும் சூழலியல் மாற்றம் குறித்து ஆய்வு செய்ய ஆண் பெண் ஜோடி விஞ்ஞானிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்கள். அவ்வாறானதொரு பணியை மேற்கொள்பவரே திரைப்பட கதாநாயகன்.

திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்படும் வாகனங்கள், ஆயுதங்கள், தொடர்பாடல் முறை மற்றும் சூழலியல் காட்சி அமைப்பு உண்மையில் அலாதியான கற்பனை திறனை வழங்குவதோடு மட்டுமன்றி உண்மையில் எதிர்காலத்தில் இவ்வாறான கண்டுபிடிப்புக்கள் தோற்றம் பெறலாம் என்பதனையும் எதிர்வுகூறுகின்றது. திரைப்படத்தின் சுவாரஸ்யமான கட்டம் என்னவென்றால் உலகில் இருக்கும் மனிதர்கள் அனைவருமே கதாநாயகன், கதாநாயகி அவர்களே. அதாவது இவர்கள் இருவரின் குளோனிங் அமைப்புதான் உலகம் முழுதும் உள்ள அனைவரும். இதன் பின்னர் முடிவு அற்புதமாக வடிமைத்துள்ளார் திரைப்பட தயாரிப்பாளர். Joseph Kosinski பொருத்தமட்டில் எனது Top Ten வரிசையில் 5 இடத்தை பெரும் திரைபடத்தை வடிவமைத்தவர் ஆவர். ஒப்லிவியன் திரைப்படத்தின் வெற்றி எந்த அளவிற்கு என்றால் tv game கூட உருவாக்கப்பட்டுள்ளது.
No 23 -National Treasure
கொலிவூட் ரசிகர்கள் Nicolas Cage பற்றி அரியதோர் இருக்க வாய்ப்பில்லை. அந்த அளவிற்கு முக்கிய வரலாற்று கதைகள் மற்றும் மாந்திரீக கதைகளை உலகிற்கு வழங்கியவர். அவ்வகையில் அமெரிக்க வரலாற்றில் இன்றளவும் நம்பப்பட்டு வருகின்ற ஒரு புதையலின் கருவை அடிப்படையக்கொண்டதே இத்திரைப்படம். குறிப்பாக வரலாற்று ஆவணங்கள் மற்றும் சான்றுகளை அடிப்படையாக்கொண்டு அரச குடும்ப பின்னணியை கொண்ட ஒரு பரம்பரையின் பூர்வீக சொத்தோ குறித்த புதையல். இப்புதையலை கண்டுபிடிக்க பரம்பரை பரம்பரையாக முயற்சி செய்து தோற்றுபோனார்கள் திரைப்பட கதாநாயகன் குடும்பம். ஆனாலும் கதாநாயகன் குறித்த புதையலை அடைந்து உலகிற்கு எவ்வாறு சமர்பிக்கிறான் என்பதை காட்டிலும் புதையலை அடைய ஒவ்வொரு இரகசிய தொடர் சைகையை (க்ழு) எவ்வாறு கண்டுபிடிக்கிறான் என்பதில் உண்டாகும் ஒருவகை எதிர்பார்ப்பு உண்மையில் இத்திரைப்படம் பார்பவர்களுக்கு ஒருவகை ஆர்வத்தை உண்டாக்கி திரைக்கதைக்குள்ளே மூழ்கடிக்க செய்துவிடும். அந்த அளவிற்கு விறுவிறுப்பை உண்டாக்கிவிடும் கதை நகர்வு.

பல்வேறு வரலாற்று உண்மைகள், நம்பிக்கைகளை பொதிந்து வரும் இத்திரைப்படம் 2004 இல் வெளியானது. குறித்த இப்படத்திற்கு கிடைக்கப்பெற்ற உலகளாவிய வரவேற்பு இதனை இரண்டாம் பாகம் தயாரிக்க தூண்டுகோலாக அமைந்தது. இதனால் 2007 இல் இதன் தொடர்ச்சி National Treasure: Book of Secrets என்ற பெயரில் வெளியானது. இதுவும் அமெரிக்காவின் முக்கிய இரகசிய குறிப்புகள் கொண்ட நூலில் உள்ளடக்கத்தை கொண்டு நகர்கின்றது. பாகம் இரண்டு பாகம் ஒன்றைவிட சற்று சுவாரசியம் குறைவுதான். இருந்தபோதும் உங்களுக்கு எவ்வாறு என்று எனக்கு தெரியாது... பாகம் இரண்டில் பாகம் மூன்றிற்கான அடித்தளம் இடப்பட்டுள்ளது ஒருவகை எதிர்பார்ப்பை ரசிகர்களுக்கு இன்றளவும் தாகத்தை உண்டாக்கி இருப்பது இதன் விசேட அம்சம்.
Download link
No comments:
Post a Comment