
சைக்கோ கில்லரின் டயறிக் குறிப்புகள்
2016ம் ஆண்டு வெளியான அனுராக் காஷ்யப்பின் ராம் ராகவ் 2.0 பார்த்த போது கூட இந்தளவுக்கு எக்சைட்டிங் மோடில் நான் இருக்கவில்லை. ஆனால் அண்மையில் வெளியான இயக்குனர் ராம் குமாரின் ராட்சசன் பார்த்த போது அப்படியே எக்சைட்டிங்கின் ஷார்ப் டெலிவரியில் கிளீன் போல்டாகி எகிறிப் போய் ஒரு ஓரமாய் போய் விழுந்தேன்.
தமிழில் தற்போதைய எக்ஸிஸ்டிங் எவரேஜ் ஹீரோக்களில் மற்றவர்களை விட விஷ்னு எனக்கு என்றைக்கும் முதலிடம்…அவரது வெண்ணிலாக் கபடிக் குழு, மற்றும் ஜீவா போன்ற படங்களை ரசித்து ருசித்திருக்கின்றேன். தமிழ் சினிமா சரியாகப் பயன்படுத்தாத பயன்படுத்த மறுக்கின்ற யதாரத்தத்துக்கு நெருக்கமான ஹீரோ அவர். வெண்ணிலாக் கபடிக்குழு, ஜீவா கதாநாயகன் மற்றும் வேளைன்னு வந்தா வெள்ளக்காரன் போன்ற படங்களில் பார்த்த விஷ்னு தன்னை அப்படியே மாற்றிக் கொண்டு ஃபுல் ட்ரான்ஸ்ஃபோர்மேசனில் இருக்கின்றார் ராட்சசனில்.
மனசில் நிற்கின்ற மாதிரி அதுவும் இந்த வருஷத்தின் மொஸ்ட் டெரிஃபிக் ஜோனரில் கில்லியடித்திருக்கின்றார் விஷ்ணு. ராட்சசன் வெளியானதிலிருந்து படம் பற்றிய பொஸிட்டிவ் பார்வைகள் வந்து கொண்டிருக்கின்ற நிலையில் உடனேயே படத்தைப்பார்க்க வேண்டுமென்ற அவா மனசக்குள்ளே கிளர்ந்து எழுந்து அலைந்து திரிந்தாலும் அன்றாட பிஸி ஷெட்யூல் என்கின்ற ராட்சசன் அதற்கு இடம் தரவில்லை. இன்றுதான் ராட்சசனை சந்திக்க முடிந்தது என்னால். சைக்கோ கிரைம் த்ரில்லர் கதைக் களம்…சைக்கோ சீரியல் கில்லர் கதையை ஆரம்பத்திலிருந்தே அலுக்காமல் ரசிகனை நுனிக்கதிரைக்கு கொண்டு வருகின்ற அசாத்திய திரைக்கதையாலும் திரை மொழியாலும் அப்ளவுஸ் அள்ளுகின்றார் இயக்குனர் ராம்குமார்.
முண்டாசுப்பட்டி படம் மூலம் கவனத்தை ஈரத்த இயக்குனர். முழுக்க முழுக்க கொமடி மோடில் முண்டாசுப்பட்டியைத் தந்த அதே ராம்குமார் அதிலிருந்த முற்றிலுமாக விலகி நூறு வீத க்ரைம் திரில்லரை தந்திருப்பது…..அதுவும் என்றைக்கும் பேசப்படுகின்ற மாதிரியான ஒரு படைப்பை தந்திருப்பது அவர் மீதான நம்பிக்கைகையை அதிகப்படுத்துகின்றது. ராட்சசனின் ஒவ்வொரு ஃபிரேமிலும் திகில்….உறைய வைக்கும் அச்சம்…பயம் பீதி என்று உணர்ச்சிக் கலவைகள் கிளைமேக்ஸ் வரை நம்மைச் சுற்றி ஹல்லோவிங் நடனமாடிக் கொண்டிருக்கின்றன.
பாடசாலை சிறுமிகளை கடத்திச் சென்று கொடூரமாகக் கொலை செய்து கர்ண கொடூரமாகக் கொல்லப்பட்டு சிதைக்கப்பட்பட சிறுமிகளின் உடலையும் அதற்குப் பக்கத்திலே அச்சத்தை ஏற்படுத்தும் விதமான உருவங்களைக் கொண்ட பொம்மைகளின் தலைகளையும் விட்டுச் செல்லுகின்ற அந்த சைக்கோ சீரியல் கில்லர் யாரென்று தெரியாமல் படத்தோடு நாம் செய்கின்ற ஐக்கிமிகு ட்ராவல் ஹிட்ச்கொட்ச்சின் கிலி.
சீரியல் கில்லிங் என்று படம் சென்று கொண்டிருக்கின்ற போது பெண் பிள்ளைகள் படிக்கின்ற பாடசாலைகளில் மாணவிகளின் படிப்புப் பலவீனத்தை தெரிந்து கொண்டு அதனைப் பயன்படுத்தி அவர்களை பாலியல் ரீதியில் வேட்டையாடுகின்ற செக்ஸ் பேர்வேட் ஆசிரியர்கள் பற்றிய காட்சிகள் பகீர். படத்துக்குத் தேவையான காட்சிகளவை. கடைசி வரைக்கும் கொலைகாரன் யாரென்பது யூகிக்க முடியாத சஸ்பென்ஸ் என்பதுதான் இங்கு மேட்டர். படத்தின் பல இடங்களில் பின்னணி இசை மட்டுமே பேசி மிரட்டுவது கூஸ்பம்மிங் மயிர்க்கூச்சு.
இயக்குனர் ராம்குமாரின் அற்புதமான திரைக்கதை ரசிகனை கடைசி கட்ட காட்சி வரை இரத்த உறைவோடு வைத்திருக்கின்றது. கொலைகாரன் யாரென்று துல்லியமாக ஊகிக்க முடியாதளவுக்கு அமைக்கப்பட்டிருக்கின்ற திரைக்கதைக்கு இன்னுமொரு தடவை அவருக்கு அப்ளவுஸ்.
இந்த ராட்சசன் நிச்சயமாக விஷ்ணுவின் ஃபில்ம் கெரியரில் ஒரு டேர்னிங் பொயின்ட். கையக் கொடுங்க விஷ்ணு உங்களுக்கென்று தமிழ் ஃபில்ம் இன்டர்ஸ்ட்ரியில் ஒரு குஷன் கதிரை வெயிட்டிங்ப்பா. பொதுவாக பேய்ப்படங்கள் மற்றும் கிரைம் திரில்லர் படங்களில் படத்தின் காட்சிகள் ஏற்படுத்துகின்ற திகிலை விட பின்னணி இசை மட்டுமே அந்த பயத்தை ஏற்படுத்தும். அந்த மாதிரியான நிறையப்படங்கயைப்பார்த்து அலுத்துப் போயிருக்கின்ற ரசிக பெருமக்களுக்கு ராட்சசன் நிச்சயமாக காட்சிகளூடே இரத்தத்தை சற்று உறைய வைக்கும். காட்சிகளோடு சேர்ந்த ஜிப்ரானின் பின்னணி இசை உறைந்து கொண்டிருக்கின்ற இரத்தத்தை டீ ஃபிரீஸருக்குள்ளே கொண்டு போய் வைத்து விடுகின்றது. வெல் டன் ஜிப்ரான். உங்களது மற்றப் படங்களில் அதிர்கின்ற பின்னணி இசையை விட இந்தப்படத்தில் மிரட்டியிருக்கின்ற உங்களது பின்னணி இசையை ரொம்ப ரொம்ப ரசித்தேன்.
ராட்சசன் படம் முடிந்த பின்னரும் காதுகளுக்குள்ளே மெல்லிய இசையை மீட்டிக் கொண்டிருக்கின்றான். அந்த இசையே போதுமாக இருக்கின்றது அந்த ராட்சசன் நம்மையும் கடத்திக் கொண்டு போக பின்னால் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றானோ என்று.
முகநூல் - Sabarullah Caseem
No comments:
Post a Comment