
இயற்கை அன்னையின் வியத்தகு அழகியல் விடையங்கள் நிரம்பியுள்ளது. ஆனால் அவை எப்போதும் காண்பது கடினம். அவ்வாறானவற்றில் வானவில் தோற்றப்பாடும் ஒன்றாகும். ஒளி முறிவு காரணமாக் இயற்கையாக நிகழும் இவ்வழகியல் நிகழ்வு பார்ப்பவர் கண்ணிற்கும் சரி மனதிற்கும் சரி மகிழ்வை அளிக்கவல்லது.
ஒளி முறிவு
ஒளியானது ஒருவகை மின்காந்த அலையாகும். இவை பயணிக்க ஊடகம் (வளி/நீர்/கண்ணாடி) தேவையன்று. இருந்தபோதும் இவை ஊடகத்தினூடு பயணிக்கும் போது ஊடகத்தின் தன்மையை பொறுத்து வேகம் மாற்றமடையும். பொதுவாக வெற்றிடத்தில் ஒளியின் வேகம் 3,00,000 km/s ஆகும். அதுபோல கண்ணாடியில் - 197,368 km/s நீரில் 225,564 km/s பயணிக்க கூடியது.

ஒளி ஒரு ஊடகத்தில் இருந்து மறு ஊடகத்திற்கு பயணிக்கும் போது உண்டாகும் வேக மாற்றம் காரணமாகவும் ஊடகத்தின் தன்மை காரணமாக ஒளிகற்றை ஒளி பிரிகை நிலைக்கு உள்ளாகும். குறிப்பாக ஒளிப்பிரிகைக்கு வெள்ளொளிகளே உற்படுகின்றது. வெள்ளொளி (White Light) என்பது உதாரணமாக சூரியனில் இருந்து வெளியாகும் ஒளிக்கு ஒப்பானது. வெள்ளொளி ஒளிப்பிரிகை உண்டாகும் போது அவை ஏழு முக்கிய நிறங்களான சிவப்பு, செம்மஞ்சள், மஞ்சள், பச்சை, நீலம், கருநீலம், ஊதா (red, orange, yellow, green, blue, indigo, violet - VIBGYOR) போன்றவாக பிரிகையடையும். இதனை நாம் திறிசியம் (Spectrum) என்று அழைப்போம். குறிப்பாக ஒளிப்பிரிகை உண்டாக இரு வேறுபட்ட அடர்த்தி உடைய ஊடங்கள் தொடர்பு பட்டு அதூடாக ஒளியான பயணிக்க வேண்டும்.
ஒளி முறிவும், தெறிப்பும்
இரண்டு வேறுபட்ட ஒளியால் அடர்த்தியுள்ள ஊடங்களினுடாக ஒளிபயணிக்கும் போது ஒளி முறிவு உண்டாகின்றது. ஆனால் ஒளித்தெறிப்பானது ஒரு ஊடக்தினுள்ளே மீண்டும் பயணிப்பது. ஒளித்தெறிப்பு நிலையின் போது ஒளிப்பிரிகை உண்டாகமாட்டாது. நிறப்பிரிகையின் போது ஒளி முறிவின் முறிவு கோணத்திற்கு ஏற்றால் போல் ஒளிதிரிசியத்தில் நிற பட்டிகை ஒழுங்கு படுத்தப்படும். இதன்போது சிவப்பு மேலேயும் ஊதா கீழேயும் ஒழுங்குபடுத்தப்படும். ஒளிமுறிவில் முறிவுச்சுட்டி (Index) அதிக செல்வாக்கு செலுத்தும். முறிவுச்சுட்டி கூடிய ஊடகத்தில் உள்ளக தெறிப்பு (முழுவுட்தெறிப்பு) உண்டாகும். வானில் காணப்படும் நீர்த்துளிகளில் ஒளிக்கீற்று முழுவுட்தெறிப்பு நிலைக்கு உள்ளவதான் ஊடாகவே வானவில் தோற்றம் பெறுகின்றது.
வானவில்

பொதுவாக ஈரப்பதன் உயர்வாக உள்ள நிலையில் சூரிய ஒளி காரணமாக உண்டாகும் பண்ணிற பட்டிகை அமைப்பு வானவில். நீர் துளிகளில் உண்டாகும் ஒளிப்பிரிகை காரணமாக அதற்கு எதிர்திசையில் உண்டாகும். பொதுவாக வானவில் அரைவட்ட வில் போலவே காட்சி தரும். ஆனாலும் அவை முழு வட்ட அமைப்பிலே திறம் பெறுகின்றது. வானவில் ஒரு பகுதியில் காட்சி தருவது மறுபகுதியில் காட்சி தராமல் இருக்கும். இதற்கான காரணம் பார்வை கோணதில் ஏற்படுகின்ற மாற்றம். குறிப்பாக நீர்த்துளிகளின் அமைப்பு மற்றும் பருமன் வேறுபாடு என்பன வானவில்லின் அளவையும் கோணத்தையும் தீர்மானிக்கும்.

இரட்டை வானவில் நிகழ்வு சற்று அரிதாகவே நிகழ்கிறது. இதற்கான காரணம் இரட்டை ஒளி பிரிகை மற்றும் படுகதிரின் கோண வீச்சும்.
வானவில் ஆனது சாதாரண இயற்கை சூழலிலும் இடம்பெறுகின்றது.
தேவையான காரணிகள்
ஒளிச்செறிவு போதியளவு காணப்படல் வேண்டும்.
சூரியன் குறித்த கோணத்தில் (கிழக்கு/ மேற்கில்) காணப்படவேண்டும்.
குறித்த சூழலில் நீர்த்துளி/ பனி/ மூடுபனி/ ஈரப்பதன் சாதாரண சூழ்நிலையை விட உயர்வாக இருத்தல் வேண்டும்.
தேடல் வலைதளங்கள்
https://www.metoffice.gov.uk/learning/optics/rainbows/how-are-rainbows-formed
https://en.wikipedia.org/wiki/Rainbow
https://sciencestruck.com/how-do-rainbows-form
No comments:
Post a Comment