
===============
கடந்த சில வாரங்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் இந்தியாவில் நடைபெற்ற சம்பவமொன்றை வாசிக்க கிடைத்தது.Busஇல் நின்ற நிலையில் பயணம் செய்து கொண்டிருந்த கல்லூரி மாணவிக்கு எதிர்பாராதவிதமாய் மாதவிடாய்(Menses) ஏற்பட்டு அவளது வெளியாடைகளிலும் இரத்த கசிவு ஏற்பட அவ்விடத்தில் சிரமத்தை எதிர்கொள்ள நேரிட்டது.இதை அவதானித்த அறிமுகமில்லாத இளைஞன் அவள் அருகில் வந்து ‘உனது நிலமை நன்கு புரிகிறது.என்னை உன் சகோதரனாக நினைத்து எனது Overcoatஐ சுற்றி அணிந்து கொள்’ என கூறி அதை வழங்கி பிரயாண முடிவில் எவ்வித மேலதிக அறிமுகமும் இன்றி இறங்கினான்.கல்லூரி மாணவி Overcoatஐ அணிந்து எவ்வித சிரமும் இன்றி வீடு சென்று தனது தாயிடம் நடந்த விடயங்களை முழுமையாக கூறினாள்.யாரிடம் நன்றி கூறுவதென்று தெரியாத தாய் தனது நன்றியை சமூக வலைத்தளங்களில் இவ்வாறு பதிவிட்டார்.’Selfie மோகத்தால் உயிருக்கு போராடுகின்றன வேளைகளிலும் Photo,Video என அலைகின்ற இக்காலத்தில் இவ்வாரன எதிர்பாராதவிதமாக எதிர்பாராத இடங்களில் ஏற்படும் மாதவிடாயை கூட Cameraகளில் சிக்கிவிடலாம் என்ற பயத்துடன் தான் பெண் சமூதாயம் வாழ்கிறோம்.இளைஞர்களை பற்றி பல தவறான எண்ணங்கள் நிறைந்த இக்காலத்தில் இவ்வாரான ஆண்மகனை பெற்ற தாயையும்,இளைஞனையும் நன்றியுடன் நினைவு கூறுகிறேன்.’
எமது வீடு தொடங்கி அயலவர்கள்,உறவினர்கள்,பாடசாலை/கல்லூரி,தொழில் செய்யும் இடம்,பொது இடங்கள் என எமது வாழ்க்கை சக்கரத்தில் தினம் தினம் பல்வேறு வடிவில் பல பெண்களை பல இடங்களில் சந்திக்கிறோம்.ஆரம்ப காலங்களில் வீடுகளில் முடங்கி கிடந்த பெண்கள் தற்போது ஆண்களுக்கு சமனாக சகல துறைகளிலும் காண முடிகிறது. மாதவிடாய் நாற்களில்(Menstrual Days)பொதுவாக பெண்கள் Physically,Mentally வலிமை குறைந்தவர்களாக காணப்படுகிறார்கள்.மாதவிடாய் சம்பந்தமான எந்தவித அடிப்படை அறிவுமில்லாமல் பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்காமல் பெண்களை வெறும் சடங்களாக பார்க்கும் பல ஆண்களும் இக்காலங்களில் இல்லாமல் இல்லை.பெண்களுக்கும் மாதவிடாய் சம்பந்தமான பல விடயங்களை இக்கட்டுரை தெளிவுபடுத்தும் என நினைக்கிறேன்.

கருப்பையில் பெண் XX நிறமூர்த்ததிற்குறிய முளையவியல் விருத்தி நடைபெறுகின்றன காலங்களிலேயே பெண் குழந்தையின் சூலகங்களில்(Ovaries) பல million எண்ணிக்கையிலான முட்டை/சினைகளின் ஆரம்ப நிலைகள்(Primary Oocytes) உருவாக்கப்படும்.இது ஆண்களின் விந்து உருவாக்கத்திலிருந்து (Spermatogenesis)முற்றிலும் வேறுபட்ட வளர்ச்சியாகும்.மேற்படி Primary Oocytes குழந்தை கிடைத்து ஒரு வருடத்திற்கிடையில் 1 தொடக்கம் 2 மில்லியனாக குறைவடைந்து காணப்படும்.பருவ வயதை அடையும்போது(Menarche/Puberty) 4 இலட்சங்களாக குறைவடைந்து நிரந்தரமாக மாதவிடாய் நிறுத்தப்படும் காலத்தில்(Menopause) இவை எவற்றையும் சூலகத்தில் காண முடியாது.
மாதவிடாய் சக்கரம்(Menstrual Cycle)
—————————————————
பெண் பருவ வயதை அடைதல்(Puberty/Menarche):ஓமோன்களின் செயல்பாட்டினால் 11 தொடக்கம் 14வயதுக்கிடையில் உற்புற,வெளிப்புற இனப்பெருக்க தொகுதிகளில் பல வளர்ச்சிகள்/மாற்றங்கள் நடைபெறும்.இதன்போது பெண்ணிணால் அணுபவிக்கப்படும் முதலாவது மாதவிடாய் நிகழ்வானது அந்த பெண்ணின் பருவமடைதலை குறித்து நிற்கிறது.இவ்வயது எல்லையை விட குறைவாக சிலருக்கு எட்டு வயதில் கூட முதலாவது மாதவிடாய் அணுபவத்தை ஏற்படுத்தலாம்.இது சாதாரணமாக கருதினாலும் இக்காலங்களில் பல்வேறுபட்ட உணவுப்பொருட்கள் குறிப்பாக Boiler Chicken போன்றவற்றில் உள்ள செயற்கை ஓமோன்கள்(Artificial Hormones)மிக சிறிய பருவ வயதில் பருவமடைய செய்வதோடு பிற்காலங்களில் மாதவிடாய் சக்கரத்தில் பல கோளாறுகளையும் ஏற்படுத்துகின்றன.

சராசரி மாதவிடாய் சக்கரம் 28 நாற்களாக இருந்தபோதும் 21 தொடக்கம் 45 நாற்கள் வரையும் சாதரணமாகவே கருதப்படுகிறது.மாதவிடாய் சக்கரமானது பருவ வயதை அடைந்த முதல் Menopause(நிரந்தரமாக மாதவிடாய் நிறுத்தப்படும் வயது) வரை தொடரும்.Menopause சராசரியாக 45 தொடக்கம் 55 வயதாக கருதப்படுகிறது.
மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அறிகுறிகள்(Menstrual Symptoms)
—————————————————
- வயிறு,இடுப்பு, கீழ் முதுகு வலி(Abdomen,Pelvic and Lower Back Pain)
-மார்புகளில் வீக்கம்,வலி ஏற்படல்(swelling and soreness of Breasts)
-நிலைமாறும்/எளிதில் கோபம் கொள்ளும் மனநிலை(Mood Swing/Irritability)
-தலையிடி,உடல் நோவு(Headache,Body Pain)
- உடல் சோர்வு/உடலில் சக்தியின்மை(Fatigue/Lethargy )
-உணவில் விருப்பமின்மை(Loss Of Appetite),குமட்டல்(Nausea)
-முகத்தில் பருக்கள் ஏற்படல்(Acne)
மேற்படி அறிகுறிகள் பலருக்கு மாதவிடாய் ஏற்படுவதற்கு சில நாள்களுக்கு முன்னதாகவே ஆரம்பித்து விடும்.இது Premenstrual Symptoms என அழைக்கப்படும்.ஏறத்தாழ 80%மான பெண்கள் இந்த அணுபவத்தை பெறுகிறார்கள்.
மாதவிடாய் வலி(Menstrual Pain):
-----------------------------------------------------
கருக்கட்டல் நிகழாத விடத்து கருப்பையின் உற்சுவரின் சிதைவடைந்த இழையங்கள்,இரத்தம்/உறைந்த இரத்த கலங்களை கருப்பையிலிருந்து வெளியேற்றுவதற்காக கருப்பை சுருங்கும் போது ஏற்படும் வலியாகும்.அநேக பெண்களுக்கு சாதாரண வலி தொடக்கம் நடுத்தரம்(Mild to Moderate Pain) வரையில் அமையும்.இவை சாதாரண வலி நிவாரணி Paracetamol அல்லது பெண்கள் மாதவிடாய் காலங்களில் வலிக்கு அதிகம் பயன்படுத்தும் ‘Ponstan/Mefanamic Acid’ மாத்திரைக்கு குறைவடையும்.10%பெண்களுக்கு தாங்க முடியாத அதி வலியாக(Severe Pain)காணப்படும்.இது பிரசவ வலியை ஒத்ததாக அல்லது அதைவிட சற்று கூடுதலாக அமையலாம்.
Menstrual Bleeding/Period
——————————————-
சராசரியாக .2-7 நாற்கள் வரையாகும்.இதன் அளவு 10- 85 மில்லி லீற்றர் ஆகும்(சராசரியாக 35ml ஆக கருதப்படுகிறது).மாதவிடாயின்போது வெளியேற்றப்படுகின்ற இரத்ததின் அளவானது ஒரு நாளில் நனைக்கப்படுகின்ற(Soaked)Tampon/Vaginal Padகளின் எண்ணிக்கையை பொருத்து தீர்மானிக்கப்படும்.

1)Spotting:ஒரு சில துளிகளாக அமையும்.நாளொன்றுக்கு ஒரு Pad போதுமாக அமையும்.
2)Very Light Bleeding:நாளொன்றுக்கு குறைந்த அகத்துறிஞ்சும்(Absorbent)தன்மையுடைய குறைந்தது இரு Pads மாற்றப்பட வேண்டும்.
3)Light Bleeding:சாதாரண அகத்துறிஞ்சும் தன்மையுடைய 3 Pads மாற்றப்படல் வேண்டும்.
4)Moderate Bleeding:ஒவ்வெரு மூன்று/நான்கு மணித்தியாலத்திற்கு ஒரு தடவை சாதாரண அகத்துறிஞ்சும் தன்மையுடைய Pads மாற்றப்படல் வேண்டும்.
5)Heavy Bleeding:ஒவ்வெரு மூன்று/நான்கு மணித்தியாலத்திற்கு ஒரு தடவை சிறந்த அகத்துறிஞ்சும் தன்மையுடைய Pads மாற்றப்படல் வேண்டும்.
6)Very Heavy Bleeding:ஒவ்வெரு/இரண்டு மணித்தியாலத்திற்கு ஒரு தடவை சிறந்த அகத்துறிஞ்சும் தன்மையுடைய Pads மாற்றப்படல் வேண்டும்.
மாதவிடாயும் ஆரோக்கியமும்(Menstruation&Health)
———————————————-
மாதவிடாய் காலங்களில் பெண்கள் மற்றைய நாற்களை விட தமது ஆரோக்கியத்தில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.ஆரோக்கியம் என சொல்லுகின்ற போது தமது உடலை சுகாதாரமாக/சுத்தமாக பேணுவதும் அதிக ஆரோக்கியமான உணவுகளை உண்ணுவதுமாகும்.
இக்காலங்களிலும் சமயம்,கலாச்சாரம் என்ற ரீதியில் பெண்கள் மாதவிடாய் காலங்களில் பல விடயங்களில் ஒதுக்கப்படுவதை காண முடிகிறது.மாதவிடாய் காலங்களில் பெண் உடலாலும் உள்ளத்தினாலும் நலிவடைந்துள்ள நிலையில் சுத்தம் பேணாத நிலையில் அதிக கிருமி தாக்கத்திற்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகம்.இந்நாற்களில் தினம்தோறும் உடல் பூராக சுத்தப்படுத்துவதோடு உடைகளையும் ,Padsகளையும் மேலேயுள்ள அறிவுரைக்கமைய அடிக்கடி மாற்ற வேண்டும்.World Menstrual Hygiene Dayஆக May மாதம் 28ஆம் திகதி அதிக விழிப்புணர்வு வழங்கப்படுகிறது.
பின்வரும் சந்தர்ப்பங்களில் அவசியம் வைத்திய ஆலோசனை பெறப்பட வேண்டும்.
—————————
-வயது 15 அல்லது 16ஐ அடைந்தும் பருவமடையாமல் இருத்தல்.
-மாதவிடாய் 15 நாற்களை விட அதிகமாக இருத்தல்.
-அதிகளவான மாதவிடாய் இரத்தம் வெளியாகுதல்(Heavy Bleeding)
-அதிக நோவு(Severe Pain)
-குறைவான,நீண்ட மாதவிடாய் சக்கரங்கள்(Short and longed Menstrual Cycle)-21 நாற்களுக்கு குறைவாகவும் 45 நாற்களுக்கு கூடுதலாகவும் அமைதல்.
-மாதவிடாய் சக்கரங்களுக்கிடையில் இரத்தம் வெளியாதல்(Bleeding between Menstrual Cycle)
-வழமையாக எதிர்பார்க்கும் தினங்களில் மாதவிடாய் ஏற்படாது இருத்தல்(Period Stop Suddenly) /கர்ப்பிணியாக(Pregnancy)
இருக்கலாம் என சந்தேகித்தல்.
-மாதவிடாய் இரத்தமானது Bright /Light Red அல்லது Brown தவிர்ந்த வேறு கலராக இருத்தல்,மோசமான வாடை(Bad Smell)
-55 வயதையும் தாண்டியும் மாதவிடாய் ஏற்படல்.
_****மாதவிடாய் நிரந்தமாக நிறுத்தப்பட்ட பின்னரும் இரத்தம் வெளியாகுதல்(Post Menopausal Bleeding)
மாதவிடாய் காலங்களில் பெண்கள் Physically,Mentally வலிமை குறைவாக காணப்படுவதால் பல்வேறு சந்தர்ப்பத்தில் இன்னொருவரது உதவிகளை எதிர்பார்க்க நேரிடலாம்.
இதில் குறிப்பாக கணவன் தனக்கு அதிகம் வேலை/சுமை கொடுக்காமல் இருப்பதையும்,
வீட்டு வேலைகளில் பங்கு கொள்வதிலும் விரும்புவாள்.இதுபோல் மற்றைய நாற்களை விட கணவனிடமிருந்து அதிகம் அன்பை எதிர்பார்த்திருப்பாள்.ஆனால் சில ஆண்கள் இவ்வாரான நிலையில் கூட அவர்களின் உணர்வுக்கு மதிப்பு வழங்காமல் சுயநலவாதிகளாக செயல்படுகின்றனர்.ஒவ்வொரு கணவனும் தன் மனைவியை நன்கு பார்த்துக் கொள்ள வேண்டிய நாட்கள் இவை.ஆனால், சில வீடுகளில் அப்போது அருவருப்பு பார்வை எட்டிப் பார்க்கும். இது எவ்வளவு கொடுமையான செயல்பாடு என்பது பெண்களுக்கு மட்டும் தான் தெரியும்.
முக்கியமாக திருமணம் செய்துக் கொள்ள போகும் ஆண்கள், மாதவிடாய் காலத்தில் தங்கள் எதிர்கால மனைவியை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
சாதரண காயங்களில் சில நிமிடங்கள் வடிகின்ற இரத்தங்கள் எவ்வளவு அசௌகரியமாக அமைகின்ற போது நாள் கணக்கில் வலியுடன் ஏற்படுகின்ற மாதவிடாய் எவ்வாறு என சிந்திக்கும்போது இவற்றை உணர முடியும்.அலுவலகம்/பாடசாலை/கல்லூரிகளில் தமது தோழியிடம் Menstrual Period என சொன்னாலும் ஆண்களிடம் ‘தலை வலி,சுகமில்லை ‘ போன்ற பதங்களை பாவிப்பது வழமை.இதை வைத்து ஆண்கள் புரிந்துகொண்டு அவர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
வறுமையினால் மாதவிடாய் காலங்களில் Padsகளை பாவிக்க முடியாமல் இன்னும் பழைய துணிகளை பாவிக்கும் பெண்களும் நம் சமூகத்தில் இக்காலத்திலும் இல்லாமல் இல்லை.இதனால் இக்காலங்களில் இவற்றுடன் எவ்வளவு அசௌகரியங்களுடன் காலத்தை கடத்த வேண்டிவரும்.ஆண்கள் புகைப்பிடித்தல்,மதுபான பாவணை என எவ்வளவு வீண்விரயம் செய்கின்றதை பார்க்கும் போது தமது வீடுகளில் மனைவி/சகோதரி/மகள்களின் இவற்றுக்கான செலவு மிக குறைவே.
"மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள்; நீர் கூறும்: “அது (ஓர் உபாதையான) தீட்டு ஆகும்; ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள்; அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்; அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள்; பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்; இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்.” (அல்குர்ஆன் 2:222)
நன்றி
Dr. A.H. Subiyan,
MBBS(SL),Diploma in Psychology (SL),
General Scope Physician ,
Doha Health Care Group,
Qatar.
No comments:
Post a Comment