
அதாவது சுமார் 2400 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றைக் கொண்டுள்ள இக்குறித்த கணிதவியல் தொடர்பானது ஆரம்பகாலத்து பெரும் விஞ்ஞானிகள் மூலம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது. உதராணமாக கொப்லர், பைதகரஸ், லியானாடோ டார்வின்ஷி போன்றோர்களை குறிப்பிடமுடியும்.

கோல்டன் ரேசியோ (The Golden Ratio) என்று அழைக்கப்படும் இக்கணிதச்செய்கை ஒரு படைப்பின் நேர்த்தியை ஒப்பீடு செய்யப்பயன்படுகின்றது. ஓவியம், சிற்பம், கலைப்பொருள் மற்றும் இன்னோரென்ன துறைகளில் இக்கணித முறை கையாளப்படுகின்றது.
மேலும் கோல்டன் ரேசியோ தற்போது உலகில் பெரும் வரவேற்புக்குரிய கணிதவியல் தொடர்பாக கருதப்படுகின்றது. இக்கணிதச்செய்கை தொழிநுட்பம், உயிரியல் ஆய்வுகளை ஒப்பிடவும் பயன்படுகின்றது.
எமது பூமியின் மத்திய இழிவுப்புள்ளி குறித்தும் இக்கணிதச் செய்கை கச்சிதமாக பொருந்துகின்றது. இங்கு பூமியின் அட்சரேகை (Latitude), தீர்க்கரேகை (Longitude) என்பன கொண்டு கணிக்கப்பட்டுள்ளது.

“கஃபா எனும் வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்; இப்ராஹீம் நின்ற இடத்தை - மகாமு இப்ராஹீமை தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக் கொள்ளுங்கள்”. இன்னும் “என் வீட்டைச் சுற்றி வருப வர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்கவேண்டும்” (அல்-குர்ஆன் 2:125)
இதனால் தான் முஸ்லிம்கள் நாங்கள் பூமியின் மையத்தை அடிப்படையாகக்கொண்ட திசையை வரை யறை செய்து தொழுது வருகின்றோம். ஆகவே உலகில் உள்ள முஸ்லிம்கள் அனைவரினதும் தொழும் திசை கஃபாவை நோக்கியதாகவே இருக்கும்.
No comments:
Post a Comment