
மேலும் தோலானது உணர்வுகளை தானாக உணர்ந்துகொள்ளும் இயல்புடையது என்று அண்மைய ஆய்வுகள் நிரூபிக்கின்றது. இது பற்றிய தரவுகளை தாய்லாந்து சியாங்மாய் பல்கலைக்கழக உடலியல் துறை தலைவரான பேராசிரியர் தகாடட் தெஜாஸன் என்பவர் மேற்கொண்ட ஆய்வில் வெளியிட்டார்.

இருந்தபோதும் அவரால் ஏற்கமுடியாது போனது. காரணம் மிக நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவை எவ்வாறு கூறுவது என்று அவர் கேட்ட போது அவருக்கு வழங்கப்பட்ட அல்-குர்ஆன் வசனம் அவருக்கு விடையளித்தது.
“யார் நம்முடைய புனித வேத வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்; அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம்” (அல்-குர்ஆன் 4:56)

அத்துடன் இப்புத்தகம் சுமார் 1400 ஆண்டுக ளுக்கு முன்னர் இதுபற்றி கூறியிருக்க வேண்டுமாயின் நிச்சயம் இது இறைவனின் வார்த்தைகளே அன்றி வேறில்லை என்று கூறி புனிதமிக்க மார்க்கமான இஸ்லாத்தில் நுழைந்து கொண்டார். இதனை இவர் சவூதியில் நடைபெற்ற எட்டாவது திருக்குர்ஆன் மற்றும் சுன்னாஹ்வின் அறிவியல் அத்தாட்சி என்ற மாநாட்டில் மக்கள் மத்தியில் பகிரங்கமாக தானாகவே முன்வந்து தெரிவித்துக் கொண்டார்.
அல்-குர்ஆன் 4:56 வசனமானது பயன்படுத்தும் அரபு வார்த்தை “நலிஜத்” என்பதாகும். இதன் பொருள் முதிர்ச்சியடைதல் ஆகும். இங்கு இச்சொல் கூறப்பட மிகவும் தேவையாகவே உள்ளது. காரணம் தீ மூலம் ஏற்படும் தீக்காயங்களை மூன்று வகையாக்கலாம்.
கொப்புள தீக்காயம் (Second degree burn)
உள்ளக தீக்காயம் (Third degree burn)
முதல் இரு வகை தீ காயங்களில் வலியுணர் வாங்கிகள் அழிவடையமாட்டது. மாறாக மூன்றாவது நிலையில் வலியுணர் வாங்கிகள் பாதிப்படைந்தோ அல்லது அழிவடைந்தோ வலியுணரும் தன்மையை இழக்கும். இதனால் ஒரு உள்ளக தீக்காயம் ஏற்பட்ட நபருக்கு காயம் ஏற்பட்ட இடத்தில் காயம் குணமுற்ற பின்னர் வேறுவகை வலி உணர்வுகளை உணர முடியாது. நலிஜத் என்ற சொல் பயன்படுத்த மற்றுமொரு காரணமும் உண்டு. அதாவது வலியுணர் வாங்கிகள் மேற்தோலின் கீழ்மட்டத்தில் காணப்படும். அத்துடன் சிறிய உரசல்களில், சிறியவகையான தீ காயங்களின் மூலமாக இவை இழக்கப்படமாட்டது.

நரகில் (Hell) உள்ள ஒருவரின் உடல் தீயில் கருகும் போது அவரால் வலியுணர்வை எவ்வாறு உணரமுடியும். இதனால் தண்டனையை தொடர்ந்து வழங்குமுகமாக இறைவன் புதியதொரு தோலை அந்த பாவிக்கு வழங்குகின்றான். இவ்விடத்தில் புனித அல்-குர்ஆன் பயன்படு த்தும் சொல்லாட்சி முறைமையும் மிகவும் சிறப்பாக அமைவதை எம்மால் அவதானிக்க முடிகிறது.
No comments:
Post a Comment