
அந்தவகையில் சில உயிரினங்கள் தங்களிற்கு இசைவு இல்லாத மற்றும் தகாத சூழல் நிலைமைகளான குளிர், வெப்பம், பனி, வறட்சி போன்ற சூழலியல் மாற்றங்களின் போது குறித்த காலத்தை கடந்து உயிர்வாழ சில சூழல்சார் நடத்தை கோலங்களையும் மற்றும் இசைவாக்கங்களையும் காண்பிக்கும். அவ்வாறான ஒருசில நடத்தைகளில் உயிரங்கியின் உறங்குநிலை செயற்பாடும் உள்ளடங்கும்.

உறங்குநிலை
உறங்குநிலை என்பது சூழல் மாற்றத்தில் ஈடுகொடுக்க முடியாமல் குறித்த அங்கியானது குறித்த சூழலில் நிலையானதும், பாதுகாப்பானதுமான ஒரு இருப்பிடத்தை தேர்வு செய்து தனது உடலியல் உயிரியல் செயற்பாடுகளை (உடல் அனுசேபம்) மந்தமாக காண்பிக்கும் நிலையை குறிப்பதாகும். அனுசேபம் என்று கூறும்போது சுவாசம், போசனை உள்ளெடுத்தல், இனப்பெருக்கம், இரை கௌவல், கழிவகற்றல், வளர்ச்சி, உருதுணர்ச்சி மற்றும் அசைவு போன்றன உள்ளடங்கும். ஆனாலும் இவை சுவாச செயற்பாட்டை தொடர்ந்த வண்ணமே இருக்கும்.
குறிப்பாக உறங்கு நிலையின் போது குறித்த அங்கி உணவு, நீர் போன்றவற்றை உள்ளெடுக்க மாட்டது. இருந்தபோது இவை சாதாரண இயக்கமிகு காலங்களில் உண்ட மேலதிக உணவில் இருந்து சேமிப்பாக உடலில் கொழுப்பு, அல்லது வேறு வடிவில் சேமித்து வைத்திருக்கும். பின்னர் சேமிப்பாக உடலில் சேமித்து வைக்கப்பட்ட சேமிப்பு பதார்த்தங்களை பகுப்பு செய்வதன் மூலமாக தனக்கு தேவையான சக்தி, மற்றும் நீரை பெற்றுக்கொள்கின்றது.


எவ்வாறான உயிரினங்கள் காண்பிக்கும்
நத்தை, தவளை, சில மீன்கள், கரடி, வெளவால், முள்ளம்பன்றி, சில பாம்பு வகைகள், எலி, தேவாங்கு மற்றும் சில ஊனுண்ணி விலங்கு.
உறங்குநிலை வகைகள்
குறிப்பாக உறங்குநிலை பருவகாலங்களை கொண்டே வகைபடுத்தப்படுகின்றது. சிலவற்றில் நடத்தை பண்பை கொண்டு. அந்தவகையில் Aestivation என்பது கோடைகால உறக்கம் என்றும் Hibernation குளிர்கால உறக்கம் என்றும் வகைபடுத்தப்படும். இவற்றுக்கு மேலாக Diapause, Torpor, Brumation என்ற வகைகளும் உண்டு.

இது சில முதுகெலும்பிலிகளின் (invertebrates) சூழலைப்பொறுத்து அமையும் ஒரு நிலை. குறிப்பாக வறண்ட வெப்பமான காலங்களில். தோட்டத்து நத்தை மற்றும் சில புழுக்கள், அபூர்வமாக வேறு சில உயிரினங்கள், நுரையீரல் மீன் (Lung Fish) போன்றவற்றிற்கும் இது நிகழும்.
Hibernation
குளிர்காலத்தில் ஏற்படும் உணவுத் தட்டுப்பாடுகளாலும், அதிகக் குளிரில் இருந்து தங்களைக் காத்துக்கொள்ளவும் முன்னேற்பாடாக குளிர்கால உறக்கத்திற்குச் சில பாலூட்டிகள் தங்களைத் தயார்படுத்திக்கொள்ளும். வெப்பகாலங்களில் அதிக உணவை உட்கொண்டு அவற்றை கொழுப்பாக உடலில் சேர்த்துக்கொண்டு, குளிர்காலத்தில் பாதுகாப்பான ஓரிடத்தில் போய், தங்களது இதயத்துடிப்பு, உடல்வெப்பநிலை, இயக்கச் செயல்பாடுகள் எல்லாவற்றையும் குறைத்துக்கொண்டு உறங்கத் துவங்கிவிடும். பார்ப்பதற்கு இறந்துவிட்டதைப் போன்று தோன்றினாலும், அவற்றில் வளர்சிதை மாற்றங்கள் மிக மெதுவாக நடந்துகொண்டுதான் இருக்கும்.

பூச்சிவகைகளின் முன்கூட்டித் தீர்மானிக்கப்படும் வளர்சிதைகுறைவுநிலை இது. இலையுதிர் காலத்திற்கும் இளவேனிற்காலத்திற்கும் இடையே இது நிகழும். Roe Deer எனப்படும் பாலூட்டி மானினத்தின் கருப்பையில் கருமுட்டை சென்று சினைப்பிடிப்பது கூட தடுக்கப்பட்டு, உரிய காலம் பார்த்து அனுமதிக்கப்படும்.
Brumation
இது ஊர்வன விலங்கினங்களில் நிகழும். குளிர்கால உறக்கம் போன்றதே ஆயினும், இவைகள் இடையில் நீர் அருந்துவதற்காக உறக்கத்தில் இருந்து விழிக்கும்.
Torpor
இந்நிகழ்வானது குறுகிய கால இடைவெளியில் உடல் வெப்பநிலை மந்தநிலைக்கு மாற்றமுறும். இதனால் உடலியல் செயற்பாடு குறைவடையும். குறிப்பாக வெளவால்கள் இச்செயற்பாட்டை காண்பிக்கும். பகல் பொழுதுகளில் Torpor நிலையிலும் இராத்திரியில் சாதாரண நிலையிலும் காணப்படும். இதனால் சக்தி இழப்பு தடுக்கப்படும்.

வேறு உயிரங்கி
விலங்குகள் மாத்திரம்தான் உறங்குநிலையை காண்பிக்குமா என்றால் இல்லை என்று கூறலாம். சில தாவரங்கள், நுண்ணங்கிகள், வித்துகள் மற்றும் சிறிய ஈரளுறுத் தாவரங்கள் (பாசிகள்) கூட காண்பிக்கும். இவற்றில் நுண்ணங்கிகள் நடத்தை விந்தை மிகுந்தது. அதாவது உயிர்வாழ சாதகமற்ற சூழல் உருவாகும் போது அவை வித்திகள் (Spores) என்ற நிலைக்கு மாறும். இதன்போது தொழிற்பாடு அற்ற தன்மையை காட்டும். பின்னர் சாதக சூழல் நிலவும் போது மீண்டும் தொழிற்பாடு நிலைக்கு உயிர்பாகும்.
தேடல் வலைதளங்கள்
http://www.newworldencyclopedia.org/entry/Dormancy
https://en.wikipedia.org/wiki/Hibernation
https://en.wikipedia.org/wiki/Dormancy
https://siamagazin.com/african-lungfish-the-fish-that-lives-on-land-without-food-or-water/
https://www.bode-science-center.com/center/hygiene-measures/spore-forming-bacteria.html
No comments:
Post a Comment