
#ஒரே_சமயத்தில் முகநூலில் இருக்கும் #அனைத்து_நண்பர்களையும் நட்புப்பட்டியலில் இருந்து #நீக்குவது_எப்படி?
(இச்செயல்பாடை மேற்கொண்டால், அதனை உங்கள் சொந்த அபாயநேர்வில் இதனை மேற்கொள்கின்றீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.)
ஒரு சமயம், மீண்டும் நண்பர்கள் பட்டியலை சுழியத்தில் இருந்து துவங்க வேண்டும் என்ற படுபயங்கரமான விருப்பத்தின் உந்துதலில் நான் முயற்சித்த வழிகளைத் தருகிறேன்.
அநேகமான வேலை வெட்டி இல்லாதது Facebook இல் குந்திக்கொண்டு கருத்து சொல்லிக்கொண்டும் மற்றவர்கள் மானத்தில் விளையாடிக்கொண்டும் இவற்றுக்கு அப்பால் மேதாவி தனத்தை காண்பித்துக்கொண்டு அலையும். இவைகளை ஆரம்பத்தில் இனங்காண்பது கடினம். ஆனாலும் இவை தெரியாமல் நாம் நண்பர் பட்டியலில் இணைத்து விடுவோம்,
இவ்வாறான லூசுகள் அண்மைக்காலங்களில் சற்று அதிகம் தான். இருந்தும் சில நல்லுள்ளங்கள் மற்றும் அறிவு, அறநெறி சார் பதிவுகள் பதிவேற்கும் அன்பர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
-----------------------------------------------------------
அதற்கு முன் இங்கே பயன்படுத்தியுள்ள சில சொற்களுக்கான ஆங்கில நிகர்ச்சொற்களைச் சொல்லி விடுகிறேன்.
சுழியம் - Zero
உலவி - Browser
நீட்சி - Extension
உரலி - URL (Universal Resource Locator)
பட்டி - Tab
சொடுக்குதல் - Click
உறுதிப்படுத்தல் - Confirmation
மூன்றாம் தரப்பு மென்செயலி - Third Party Application
தரவுகளின் அபாய நிகழ்வு - Data Risk
தற்காலிக முடக்கம் - Temporary De-activation
முடக்குதல் - Disable
நீக்குதல் - Remove
அபாயநேர்வு - Risk
ஆன்சி (ANSI) ஆங்கில எழுத்துகள் - ANSI (American National Standards Institute)
-----------------------------------------------------------------------------------------------------
Toolkit for Facebook என்றொரு க்ரோம் உலவிக்கான நீட்சி இருப்பதாக அறிந்தேன். அதனைப் பெறுவதற்கான உரலியை முதற்பின்னிடுகையில் தருகிறேன். மற்றொரு வழியிலும் அதனைப் பெறுவது எப்படி என்று தெரிவிக்கிறேன். க்ரோம் உலவியைத் திறந்து கொள்ளுங்கள். வலது மேற்புறத்தில் காணப்படும் மூன்று நேர்புள்ளிகளைச் சொடுக்குங்கள். அதில் More tools என்பதன் கீழ் Extensions என்பதைத் தேர்ந்தெடுங்கள்.
Extensions என்பதற்கான பக்கம் புதிய பட்டியில் திறக்கப்படும். அப்பக்கத்தின் அடியில் Get more extensions என்று ஒன்று இருக்கும். அதனைச் சொடுக்குங்கள். Search the store என்றும் தேடுதல் பெட்டிக்குள் toolkit for facebook என்று தட்டச்சு செய்து Enter கொடுங்கள். இப்பொழுது Toolkit For Facebook என்று காட்டப்படும் பட்டியில் +Add to Chrome என்ற பொத்தானைச் சொடுக்கி இந்நீட்சியினை உலவியில் சேர்த்து விடுங்கள்.
அடுத்து உங்கள் முகநூல் கணக்கில் உள் நுழையுங்கள். அதன் பின்னர் உலவியில் வலது மேற்புறத்தில் காணப்படும் FST என்றா நீலநிற பொத்தானைச் சொடுக்குங்கள். அதில் Removal Tools என்பதைத் தேர்ந்தெடுங்கள். அதில் Unfriend All Facebook Friends என்ற பொத்தானைச் சொடுக்குங்கள். காட்டப்படும் சிறுதிரையில் Unfriend All Friends என்ற பொத்தானைச் சொடுக்குங்கள்.
முதல் முறையாக ஒரு உறுதிப்படுத்தல் கேட்கப்படும். OK என்ற பொத்தானைச் சொடுக்குங்கள். இரண்டாம் முறையும் ஒரு உறுதிப்படுத்தல் கேட்கும். அதற்கும் OK என்ற பொத்தானைச் சொடுக்குங்கள். இப்பொழுது நீங்கள் மனிதர்தான் என்பதை உறுதிப்படுத்த இரண்டு எண்களைக் காட்டி அதன் கூட்டுத்தொகையினைத் தட்டச்சுச் செய்யக் கேட்கும். சரியான விடையினைத் தட்டச்சு செய்து OK என்ற பொத்தானைச் சொடுக்குங்கள். இறுதியாக ஒரு உறுதிப்படுத்தல் கேட்கும். அதற்கும் OK என்ற பொத்தானைச் சொடுக்குங்கள்.
இனிப் பின்னால் சாய்ந்து தளர்வாக அமருங்கள் அல்லது வேறு வேலைகளைப் பார்க்கப் போங்கள். உங்கள் நண்பர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அது நேரம் எடுக்கும். எனக்கு ஒரு நொடிக்கு ஒரு நண்பர் வீதம் நீக்குவதாகச் செய்தி காட்டியது. ஆனால், அது அத்தனை சரியாக நீக்கம் செய்யவில்லை.
எனவே, என் அடுத்த தேடுதலில் மூன்றாம் தரப்பு மென்செயலி ஒன்று இருப்பது தெரிந்தது. இதுவும் க்ரோம் உலவியின் நீட்சிதான், பெயர் Friend Remover PRO. இதனைப் பெறுவதற்கான உரலியை இரண்டாம் பின்னிடுகையில் தருகிறேன். இதில் நம் தரவுகளின் அபாய நிகழ்வு வாய்ப்பு அதிகம் என்றாலும், துணிந்து பயன்படுத்தினேன். மேற்சொன்ன மாதிரியே இந்த நீட்சியையும் க்ரோம் உலவியில் இணைத்துக் கொள்ளலாம்.
உலவியின் வலது மேற்புறத்தில் ஒரு ஆள் உருவத்தில் (-) குறியோடு நீலநிறத்தில் காணப்படும் பொத்தானைச் சொடுக்கினால், புதிய பட்டியில் ஒரு பக்கம் திறக்கப்படும். அதில் நம் நட்புப்பட்டியலில் உள்ள அனைத்து நண்பர்களின் பெயரும் காட்டப்படும். நீக்கம் செய்யப்படவேண்டியவர்களை நாம் தெரிந்தெடுக்கலாம். அல்லது Select All என்று கொடுத்து அனைவரையும் தேர்ந்தெடுக்கலாம். அதன் பின் Remove All என்று வலதுபுறத்தில் காட்டப்படும் பொத்தானை அழுத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரையும் நீக்கி விடும்.இதில் அனைவரையும் என்று குறிப்பிட்டாலும், அனைவரையும் அது நீக்கவில்லை. என் யூகத்தின்படி, வரிசையாக நீக்கிக் கொண்டு வரும்பொழுது, தன் கணக்கைத் தற்காலிகமாக முடக்கி வைத்திருப்பவரின் பெயர் வந்தால் அத்தோடு நின்று விடுகிறது என்று நினைக்கிறேன்.
அதே போன்று ஆன்சி (ANSI) ஆங்கில எழுத்துகளைத் தவிர வேறு எழுத்துகளில் பெயர் வைத்திருந்தாலும் அதனை நீக்குவதில்லை. அத்தோடு நின்று விடுகிறது என்று நினைக்கிறேன். அப்படி தற்காலிக முடக்கம் செய்தவர்களையும், ஆன்சி (ANSI) ஆங்கில எழுத்துகள் அல்லாத பெயர்களையும் நானே தன்முயற்சியில் நீக்கினேன். அதன் பின்னர் இதே நீட்சியைப் பயன்படுத்தி மீண்டும் முயற்சி செய்து அனைவரையும் நீக்கினேன்.
அதன் பின்னர் இரண்டு நீட்சிகளையும் முடக்கி விட்டேன். நீங்கள் விரும்பினால் நீக்கம் கூட செய்து கொள்ளலாம்.
அவ்வளவு
No comments:
Post a Comment