
என்னங்க சொல்றிங்க... வானத்திற்கு கலர் இல்லையா???
குழப்பாம கொஞ்சம் தெளிவாக சொல்லுங்க பாப்பம்....
சரி பாப்போம் வானம் என்ன நிறம், கடல் என்ன நிறம் என்பதை.
உங்களுக்கே தெரியும் வெள்லொளி (White Light) நிறப்பிரிகை உண்டாகினால் ஒளித் திரிசியம் என்று அழைக்கப்படும் அந்த வானவில் நிறங்களான 7 நிறங்களாக பிரிகை அடையும். சிவப்பு, செம்மஞ்சள், மஞ்சள், பச்சை, நீலம், கருநீலம், ஊதா என்று சுருக்கமாக கூறப்படும் VIBGYOR அவையாகும். இவற்றில் நீல ஒளிக்கற்றை பொறுத்தவரையில் சற்று கண்ணிற்கு உணர்திறன் கூடிய ஒளியலையாகும். அந்தவகையில் ஒளிக்கற்றை பிரிகையின் மூலம் தெரிப்படையும் ஒளி காரணமாகவே ஒரு பொருளின் நிறத்தை எம்மால் உணர முடிகிறது. அவ்வாறே தெரிப்படையும் ஒளிக்கற்றையின் பிரதிபலிப்பே கடல் மற்றும் வானத்தின் நீல நிற தோற்றப்பாடு.
கடல் நீரின் நிறத்தை வானின் வெளிச்சம், தண்ணீரில் கரைந்துள்ள துணிக்கைகளின் அடர்த்தி, கடலின் ஆழம், பார்வையாளரின் பார்வைக் கோணம் போன்றவை தீர்மானிப்பதாய் அமையும். குறிப்பாக நாங்களே அன்றாட வாழ்வில் அவதானித்து இருப்போம். ஆழம் குறைந்த நீர் தடாகங்கள் மற்றும் குட்டைகள் நீலநிறமாக காட்சி தராது. நீல நிறம் தண்ணீரில் தெரிய ஆகக்குறைந்தது 10 அடிக்கு மேற்பட்டதாக ஆழம் இருத்தல் அவசியம்.

இவற்றுக்கு மேலாக நீரினுள் உள்நுழையும் ஒளிக்கீற்றின் பிரிகையினை பொறுத்து உள்ளகத்தின் நீரில் நிறப்படை உண்டாகும். பொதுவாக மீடிறன் கூடிய கதிர் அதிக ஆழத்திற்கு உள்நுளையக்கூடியாதாக இருக்கும். அவ்வகையில் நீலநிறம் சற்று ஏனைய கதிர்களை விட உள்நுழையும் தகவு அதிகம்.
இது பற்றி வாசிக்க
http://www.mutur-jmi.com/2018/09/internal-waves-of-deep-sea.htm
lhttp://www.mutur-jmi.com/2018/11/rainbow.html
“அல்லது (அவர்களின் நிலை) ஆழ்கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும்; அதனை ஓர் அலை மூடுகிறது. அதற்கு மேல் மற்றோர் அலை; அதற்கும் மேல் மேகம். (இப்படி) பல இருள்கள். சில சிலவற்றுக்கு மேல் இருக்கின்றன” (அல்-குர்ஆன் 24:40)

சூரியனின் ஒளி வளிமண்டலத்தில் நுழையும்போது, அதில் கலந்துள்ள பெரும்பாலான நிறங்கள் எந்த இடையீடும் இல்லாமல் பூமியின் மேற்பரப்பை வந்தடைந்து விடுகின்றன. ஆனால் நீல நிற ஒளி, வளிமண்டலத்தில் உள்ள துகள்களின் அலைநீளத்தை ஒத்திருப்பதால், அது எல்லா திசைகளிலும் சிதறடிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 100 கிலோமீட்டர் நீளம் கொண்ட வளிமண்டத்தில் உள்ள ஒவ்வொரு நுண்ணிய துகளிலும் நீலநிற ஒளி மோதிச் சிதறடிக்கப்பட்டு, கடைசியாக நம் கண்களை வந்தடையும் வரை துகள்களில் மோதிக் கொண்டே இருக்கிறது. இந்தக் காரணத்தால், வானத்தை எந்தப் பக்கத்தில் இருந்து நாம் பார்த்தாலும் அது நீல நிறமாகவே தெரியும்.
நமது பார்வை ஆழமடைய ஆழமடைய வானம் அடர்நீலமாகத் தெரியும். அதனால்தான் தொடுவானப் பகுதியும், நம் தலைக்கு மேலே உள்ள பகுதியும் அடர்நீலமாகத் தெரிகின்றன. நீலநிறத்தை விடவும் அலைநீளம் குறைவான ஊதா, கருநீலம் ஆகிய நிறங்கள் அதிகமாகச் சிதறடிக்கப்பட்டாலும்கூட, குறிப்பிட்ட சில நிறக் கதிர்களை பார்ப்பதற்கான உணர்திறன் நமது கண்களில் குறைவாக இருப்பதால், நீல நிறமே பார்வையில் ஆதிக்கம் செலுத்துகிறது.
அந்திநேரத்தில் அல்லது அதிகாலை வேளைகளில் சூரியன் மிகவும் தொலைவிலும், குறிப்பிட்ட அச்சில் சாய்ந்தும் இருப்பதால், சிதறடிக்கப்படும் நீலநிற ஒளி வேறு திசைக்குச் சென்றுவிடுகிறது. அப்போது வானம் மஞ்சள் அல்லது செம்மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஆகவே நாம் அண்டவெளிக்கு சென்றால் வானத்தின் நிறம் என்னவாக இருக்கும் என்று உங்களுக்கு குழப்பம் வரலாம். ஒன்றும் குலம்பவேண்டிய அவசியம் இல்லை. விண்வெளிக்கு சென்றால் அங்கே முழுமையாக இருளாகத்தான் காண்பீர்கள். எவ்வாறு இரவு வானை நாம் காண்கிறோமோ அதுபோல... காரணம் சூரிய ஒளியினை விட்டு நாம் தொலைதூரம் இருப்போம்.
தேடல் வலைதளங்கள்
https://en.wikipedia.org/wiki/Ocean_color
https://www.scientificamerican.com/article/why-does-the-ocean-appear/
https://science.nasa.gov/earth-science/oceanography/living-ocean/ocean-color
http://babutheseeker.blogspot.com/2015/01/blog-post_29.html
http://www.bbc.co.uk/earth/story/201505226-is-the-sea-really-blue
https://www.universetoday.com/74020/what-color-is-the-sky/
http://math.ucr.edu/home/baez/physics/General/BlueSky/blue_sky.html
No comments:
Post a Comment