சரி அவரைப்பற்றிய சுய வரலாற்றை சொல்வதல்ல எனக்கு ஐடியா (அதுக்கு எக்கச்சக்க நீளமான போஸ்ட் எழுதனும்), நோலனை பொறுத்தவரை சினிமா என்பது ஒரு கலை என்பதையும் தாண்டி அவரின் நாடி நரம்புகளில் புடைத்து நிற்கும் ஓர் விசித்திர 'செல்' என்றே சொல்ல வேண்டும்.
சினிமா துறைக்கே சம்மந்தம் இல்லாத இயந்திரவியல் பொறியியலாளர் இவர் எவ்வாறு இவ்வளவு சாதனை படைத்தார் என்றால் அவரின் அறிவியல் அறிவுதான் காரணம். குறும்படத்தில் அறிமுகமாகி உலகின் தலைசிறந்த சினிமா தயாரிப்பாளன் வரிசையில் முதன்மைகளில் இடம்பெற்றார்.
இவரின் படைப்புக்களில் Aliens, Inception, Installer, Terminator, Memento என்பன திரைப்படத்திற்கு ஒரு புதுவகை பரிமாணத்தை வழங்கியது எனலாம். அத்தோடு ஒவ்வொரு திரைப்படத்திலும் அறிவியல் உலகின் மயக்கமான வரலாற்று உண்மை அல்லது அறிவியல் உண்மையை எளிமையான வடிவில் விபரிப்பது தனித்துவ பாங்கு என்றும் கூறலாம். இவ்வாறு அமையப்பெற்ற திரைப்படங்களில் Time travel, Black hole, Science Magic, Dreams போன்றவற்றை கொண்டு கதையின் நகர்வு அமைவது சாமானியனின் புரிதலுக்கு சற்று சங்கடத்தையும் சலனத்தையும் உண்டாக்கும்.
அது அவரின் அசாத்தியமான திரைப்படங்களை, பார்த்தவர்களுக்குத் தெரியும், மண்டை காய்ந்து போய் ரிலாக்ஸ் எடுக்கலாம்னு ஒரு படம் பார்க்க யாராவது நினைத்தால் கண்டிப்பா நோலனின் படங்களை பார்க்க கூடாது, ஏனெனில் இருக்குற தலைவலி காது வலியா தெறித்து மண்டை ஓடு கலங்கி விடும் 😑
அப்படியான அசாத்திய கற்பனை திறன் கொண்ட சினிமா ஜாம்பவான் நோலன், அவரின் ஒரு படத்தை ஒரு தடவை மாத்திரம் பார்த்துவிட்டு படம் புரிந்து விட்டது என்று சொன்னவர்களை விட '' ஒரு எழவும் புரியல யா என்ன பலாய் படத்த தான் எடுத்து வச்சிருக்கான் மனுசன் '' அப்டின்னு ஒலரினவங்க தான் அதிகம் நான் உட்பட...

2000 ஆம் ஆண்டு Memento வெளியான நேரம் நோலனிடம் வந்து சொன்னார்களாம், உங்க படத்த யாரோ காப்பி அடிச்சிட்டானுவன்னு, அதுக்கு அவரு சொன்னாராம் '' Memento யாருக்காவது புரிஞ்சி அத காப்பி அடிக்க முடிஞ்சா அடிச்சிக்கட்டும்னு'' சொல்லிட்டு சிரிச்சாராம்.
ஏன்னா உலகத்துல ரிவர்ஸ்ல ஸ்க்ரீன் ப்லே எழுதப்பட்டு படமாக்கப்பட்ட ஒரு புது டிசைன் படம் தான் மெமென்ட்டோ, படம் முழுசா ரிவர்ஸ்ல தான் நகரும், பார்த்து முடியுறப்ப கல்லீரல் காஞ்சி போய் கெடக்கும், அந்த அளவுக்கு வித்தியாசமான வ்ரைட்டிங்.
இவனுங்க என்னடான்னா முருகதாஸை நோலனோடு ஒப்பீடு செஞ்சிட்டு கெடக்கானுவ, சர்கார், முருகதாஸ் ப்ரச்சினன்னா அத பற்றி பேசலாம் அதன் சரி பிழை பேசி அடிச்சிக்கிட்டு சாவுங்க தப்பில்ல, அது நம்ம தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒன்னும் புதுசும் கிடையாது.
இடைல யம்மாம் பெரிய டைரக்டர் நோலன்ட சட்டைல ஏன்டா அயன் மார்க்க உடைக்க பாக்குறீங்க என்பதே என் கேள்வி...
No comments:
Post a Comment