மனித நாகரிக வரலாற்றை சற்று புரட்டிப்பார்த்தோம் ஆனால் கிரேக்க நாகரீகம் தொடக்கம் அண்மைக்கால பாரசீக நாகரீகம் வரை கல்வி மற்றும் அதனை விதைத்த ஆசிரியர் சமூகத்தின் செல்வாக்கு இன்றளவும் மனித சமூகத்திற்கு கல்வி அறிவு கடத்தப்பட ஏதுவான அடித்தளமாக இடப்பட்டது எனலாம்.
சமகால உலகினில் கல்வி பல்வேறு துறைகளில் பரவலாக்கம் பெற்றுள்ளது. குறிப்பாக அறிவியல், அறவியல் மற்றும் அரசியல் ஆழ்ந்த உள்ளீர்ப்பு பெற்று வருகின்றது. அந்தவகையில் ஆசிரியர்களின் வகிபாகம் எந்த அளவிற்கு நவீனத்துவ பரிணாமம் பெற்றுள்ளது என்றால் ஆரம்பக்கல்வி தொடக்கம் ஆய்வு ரீதியான கல்வி வரை ஆசான் பின்னணியில் இருக்கிறான். குறிப்பாக எந்தவொரு செயலுக்கும் வழிகாட்டல் மற்றும் வழிநடத்தல் என்ற ஒரு கோவை வரையறை உண்டு. அவ்வாறான ஒரு கோவை வரையறை நடமாடும் உயிர் ஏடே ஆசான்கள்.
மிலேனியம் ஆண்டு என்று அழைக்கப்படும் இருபத்தோராம் நூற்றண்டிற்கு முற்பட்ட காலங்களில் குருகுல கல்வி முறைமை சார்ந்த கற்றல் முறை வழக்கில் இருந்து வந்துள்ளது. ஆனாலும் அண்மையில் உண்டான சிந்தனா ரீதியான எழுச்சி உலகளாவிய ரீதியில் பாரிய தாக்கத்தை உண்டாக்கி மனித மற்றும் மனித இனம் சார்ந்த உரிமைகளின் போராட்டத்திற்கு வித்திட்டது. அவ்வகையில் கிடைக்கப்பெற்ற மிகவும் பெருமதியா உரிமையே கல்வி உரிமை மற்றும் சிறுவர் உரிமை. மேற்படி உரிமைகள் இரண்டும்உலகில் எந்தவொரு நாட்டிலும் பிறக்கும் தனிமனிதனுக்கு உலகம் வழங்கும் சர்வதேச வகிபாகமாகும். அவ்வாறான வகிபாகத்தை சமகால உலகின் மாணவர் சமூகம் கையாள்வதில் பாரிய வறட்சியை எதிர்நோக்குவதாக ஆய்வுகள் கூறுகின்றது.
குறிப்பாக உரிமைகள் அளவுகடந்த எல்லையை தாண்டியதும் பண்பாட்டியில் ரீதியான சீர்கேடுகளை இந்த மாணவர் சமூகத்தில் முளைத்திட காரணமாகியது. கண்டிப்பு மற்றும் கற்றல் பேறுகளில் ஆசிரியர்கள் வரம்பு இடப்பட்டதன் மூலமாக கல்வியல் ரீதியான ஒரு இடைவெளி சந்ததியை இன்றுள்ள சமுதாயம் உருவாகுவதாக எண்ணத்தோன்றுகின்றது. மேற்கத்தேய கல்வி முறைமை உலகெங்கிலும் நடப்பட்டு அவற்றில் அறுவடை எதிர்பார்ப்பது என்பது தண்ணீரில் போடப்பட்ட வித்தில் விளைச்சல் எதிர்பார்பதற்கு சமனானது.
சூழல், கல்வி வளர்ச்சி, தொழினுட்ப அறிவு, மற்றும் மாணவர் மற்றும் ஆசிரியர் சமூகத்தின் கடந்தகால பின்னணி என்பன சற்று ஆராயப்பட வேண்டும். இவைகளை ஒரு நாட்டின் அரசு நீண்டகால ஆய்வின் மூலமாகவே கண்டுகொள்ள முடியும். எமது நாட்டை பொறுத்தவரையில் நாம் மேற்கத்தேய கல்விற்குள் நுழைவதற்கே இன்னும் பல ஆண்டுகள் இருக்கின்றது. எனவே அறிவார்ந்த ஆசிரியர் சமூகத்தையும் அண்மைய காலநீரோட்டத்தில் எதிர்த்து போராட கற்றுகொடுக்கும் ஆசிரியர் வளங்களையும் தோற்றுவிப்பதில் எமது இன்றைய சமூகம் பாரிய பங்காற்றவேண்டும்.
கல்வி என்ற தொனிப்பொருள் ரீதியான அடிப்படை எண்ணக்கருவை நாம் முதலில் கற்றுக்கொள்ளவேண்டும். கல்வி என்பது ஒரு மனித சுதந்திரம் மற்றும் பண்பாட்டியல் ரீதியாக வளர்க்கப்படவேண்டிய ஒன்றாகும். இருந்தபோதும் அவை சமகால உலகினில் எவ்வாறு வழக்கப்படவேண்டும் என்பதை இயந்திரங்களும் மனிதன் உருவாக்கிய சட்டதிட்டங்களும் கற்றுக்கொடுப்பதே அண்மையில் ஆசிரியர் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட பாரிய துரோகம் எனலாம். இவற்றின் ஒட்டுமொத்த தாக்கம் இயந்திரங்களுடன் ஒன்றித்து சமாந்தரமாக பயணிக்கும் மனித வர்க்கத்தை அடுத்த தலைமுறைக்கு வழங்குவதே....
No comments:
Post a Comment