
குறிப்பாக இந்த இருவகை வெப்பநிலை கொண்ட அங்கிகளை மாறா வெப்பநிலை குருதி உயிரி என்றும் மற்றயதை மாறும் வெப்பநிலை குருதி உயிரி என்றும் அழைப்போம்.
#மாறும்_வெப்பநிலை_குருதி என்றால் என்ன?
(குளிர் இரத்தப் பிராணிகள் = Ectothermic / Poikilothermic/ warm-blooded)
மாறும் வெப்பநிலை குருதி என்பது புறச்சூழலில் வெப்பநிலைக்கு ஏற்றால்போல் தனது உடல் வெப்பநிலையை மாற்றம் செய்யும் விலங்குகள். குறிப்பாக கூர்ப்பு முன்னேற்றத்தில் முள்ளந்தண்டு அற்ற விலங்குகள் அனைத்தும், மீன்கள், ஈரூடக வாழிகள் மற்றும் ஊர்வன உள்ளடங்கும்.
#மாறா_வெப்பநிலை_குருதி என்றால் என்ன?
(வெப்ப இரத்தப் பிராணிகள் = Endothermic / Homeothermic/ warm-blooded)
மாறா வெப்பநிலை குருதி என்பது சூழலில் வெப்பநிலைக்கு ஏற்றால்போல தனது உடல் வெப்பநிலையை மாற்றாமல் தொடர்ந்தும் ஒரு நிலையான உடல் வெப்பநிலையை பேணும் விலங்குகள். குறிப்பாக பறவைகளும், முளையூட்டிகளும் இதில் உள்ளடங்கும்.

கொக்கு
அந்தவகையில் கொக்கும் ஒரு மாறா உடல் வெப்பநிலை குருதி உடைய விலங்குகள். கொக்குகளை பொறுத்தவரையில் அவை நீர்சூழலை அண்டி வாழ்பவை.ஆகவே இயல்பாகவே உடல் வெப்பநிலையை பேணவேண்டிய கடப்பாடு அவற்றை சார்ந்துள்ளது.
இயற்கையில் கொக்குகளுக்கு இறகு அவற்றின் உடற்போர்வையாக இருப்பதோடு வெப்பக்காவலியாக தொழிற்படும். ஆனால் அவற்றின் நீண்ட கால்கள் மூலமாக வெப்பஇழப்பு உயர்வாக இருக்கும். இதனை தடுக்க அவை ஒரு காலை மடித்த வண்ணம் தனது நிலையை பேணும். அடுத்த காரணமாக அவற்றில் உடலியல் சமநிலை செயற்பாடு. அதாவது உடலின் எடையை தாங்கும் விதமாக தனது தலைப்பகுதியை உடலின் மேலே வைத்து நிற்பதற்கான சமநிலை மையத்தை காலின் மூலமாகவே ஈடு செய்கிறது. அத்தோடு அவற்றுக்கு குறித்த மெய்நிலை இயல்பாகவே பழக்கப்பட்டது. சுமார் 10 நிமிடங்கள் தொடக்கம் 4 மணித்தியாலங்கள் வரை ஒருகாலில் தரித்து நிற்கும் திறன் படைத்தவை இவை.
இதுதான் கொக்குகள் ஒருகாலில் நிற்க காரணமாம் என்று விலங்கியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்....

விதிவிலக்குகள்
பெரும்பாலான பாலூட்டிகள் பறவைகள் அனைத்தும் வெப்ப இரத்தப் பிராணிகள் என்றாலும், வவ்வால்கள், அகழெலிகள் (Moles) போன்றவைகளின் உடல்வெப்பநிலை சுற்றுப்புறத்திற்கேற்ப மாறும் தன்மை கொண்டவை குறிப்பாக அவைகள் செயலற்று இருக்கும்பொழுது.
அதே போன்று சில பூச்சிகள், தேனீக்கள், பருந்துஅந்துப்பூச்சிகள் (Hawk Moths) தங்கள் சிறகசைப்பின் மூலம் தசைநார்களை அசைத்து தங்கள் உடல் வெப்பநிலையை அதிகரித்துக்கொள்ளும்.
தேனீக்கள் நெருக்கமான குழுக்களாகச் சேர்ந்து சிறகசைக்கும். சில மீன்களுக்கு இயல்பாகவே வளர்சிதை செயல்பாடுகளால் தன் மூளை மற்றும் கண்கள் குளிரில் உறைந்து விடாமல் காத்துக்கொள்ளும் அமைப்பு உள்ளது. ஏனெனில் மூளை மற்றும் கண்களின் பயன்பாடுகள் அவைகளுக்கு அவசியமாகின்றது.
சரி இப்படி கேட்ட நீங்கள் அடுத்த கேள்வியாக மரத்தில் நின்றுகொண்டு தூங்கும் பறவைகள் கீழே விழுமாட்டாதா என்று கேர்பீங்க என்று ஏன்டா மனசு உள்ளுக்குள்ளே நச்சரிக்குது... இதையும் பாத்துவிடுவோம்....

#பறவைகள்_மரக்கிளையில்_தூங்கும்பொழுது_விழமாட்டாதா?
என்றால் .... #இல்லை என்பது பதில்
காரணம் அவற்றின் கால்களில் உள்ள தசைகளின் செயல்பாட்டு அமைப்பு அப்படி. ஆங்கிலத்தில் இதனை Tendon Mechanism என்பார்கள். தமிழில் தசைநாண் நுட்பச்செயல்பாடு எனலாமா? தசைநாண் என்பது எலும்பையும் சதையையும் ஒன்றாக இணைக்கும் நார் இணைப்பிழைப் பட்டையாகும். இதுதான் எலும்பினை அசைப்பதற்கும் தசைகள் எலும்போடு ஒட்டி ஒரு உருவ அமைப்பு உண்டாவதற்கும் காரணமாக இருக்கின்றன.
அப்படி இரண்டு தசைநாண்கள், ஃப்ளெக்ஸார் தசைநாண்கள் (Flexor Tendons), கால் தசைகளில் இருந்து டார்சஸ் எலும்பு (Tarsus Bone) வழியே கால் விரல்களோடு இணைக்கப்பட்டிருக்கும். பறவைகள் கால்களை மடக்கி கிளைகளில் அமரும்பொழுது தன்னிச்சையாக இந்த தசைநாண்கள் இழுக்கப்பட்டு விரல்கள் இறுக்கமாக மூடிக்கொள்ளும். மீண்டும் கால்களை நிமிர்த்தி நீட்டினால்தான் அந்தத் தசைகள் இழுவை குறைந்து விரல்கள் நீளும்.

அதாவது, பறவைகள் தன் உடலைத் தளர்வாக வைத்திருந்தால், இந்தத் தசைநாண்கள் இழுக்கப்பட்டு விரல்கள் மூடப்படும். விரல் இடுக்கில் இருக்கும் கிளைகளை இதன் மூலம் இறுக்கப் பற்றிக் கொள்வதால் அவைகள் விழுந்து விடாது.
மனிதர்களைப் பொறுத்தவரையில் ஒன்றை இறுக்கமாகப் பிடித்துககொள்ள பிரயத்தனப்படவேண்டும். பறவைகளைப் பொறுத்தரை தளர்வாக அமர்ந்தாலே போதும். இறந்து போய்க்கிடக்கும் பறவைகளைப் பாருங்கள்... அவற்றின் விரல்கள் உட்புறமாக வளைந்து மடங்கிப் போயிருக்கும்.
தேடல் வலைதளங்கள்
http://news.bbc.co.uk/earth/hi/earth_news/newsid_8197000/8197932.stm
https://www.birdnote.org/show/why-birds-stand-one-leg
https://www.livescience.com/5732-flamingos-stand-leg.html
https://www.telegraph.co.uk/science/2017/05/24/scientists-have-worked-flamingos-stand-one-leg/
தூக்கம்
https://www.quora.com/Why-dont-birds-fall-off-trees-while-sleeping
https://www.theatlantic.com/technology/archive/2013/12/why-birds-can-sleep-on-branches-and-not-fall-off/281969/
https://www.quora.com/Why-dont-birds-fall-off-trees-while-sleeping
No comments:
Post a Comment