
இஸ்லாமிய வரலாற்றில் நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்கு பிறகு உமர் (ரழி) அவர்களின் கொலையோடு அரசியல் மற்றும சமூகரீதியான கெடுபிடிகளுக்கான பித்னாவின் வாசல் திறக்கப்பட்டது. வரலாற்றில் "பித்னா" நிகழ்வு என்று குறிப்பிட்டு அழைக்கப்படும் உஸ்மான் (ரழி) அவர்களின் படுகொலை சம்பவத்தின் பின்னர் முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்ட அரசியல் கருத்து முரண்பாடு இஸ்லாமிய உம்மத்தின் ஐக்கியத்தில் பிளவுகள் ஏற்படக் காரணமானது.
அலி (ரழி) அவர்களின் ஆட்சியில் முஸ்லிம்கள் இரு அணிகளாகப் பிரிந்தாலும் அகீதாவைப் பாதிக்கின்ற சிந்தனாரீதியான நகர்வாக அது ஆரம்பத்தில் இருக்கவில்லை. அவரது ஆட்சிக்காலத்தில் இஸ்லாமிய சமூகத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்ப சூழ்நிலை காரணமாக முஸ்லிம்களுக்கு மத்தியிலே ஜமல், ஸிப்பீன் போன்ற போர்கள் நடந்தேறின. அலி (ரழி) அவர்களின் ஆட்சியின் மத்திய காலப் பகுதியில் கவாரிஜ்கள் என்னும் ஆட்சியாளருக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபடும் ஒரு சமூக அமைப்பினர் தோற்றம் பெற்றனர்.
கவாரிஜ் என்னும் அரபுப் பதம் காரிஜ் என்ற ஒருமையின் பன்மை வடிவமாகும். இது கரஜ என்னும் வினையடியிலிருந்து தோன்றியதாகும். இதன் நேரடி மொழிக்கருத்து வெளியேறினான் என்பதாகும். எனினும் இது ஆட்சியாளருக்கெதிராக கிளர்ச்சி செய்யும் சமூக வகுப்பாரை குறிப்பிடுவதற்காக இஸ்லாமிய மரபில் பயன்படுத்தப்படுகின்றது.
ஹதீஸ்கள் அல்குர்ஆனிய வசனங்களுக்கு முரண்படுகின்றன, தவறுகள் செய்கின்ற முஸ்லிம் ஆட்சியாளர் இறை நிராகரிப்பை செய்த காபிர், அல்லாஹ் அனுமதிக்கின்ற சமரசம் தொடர்பான மனித சட்டங்கள் குப்ர், தஹ்கீம் சமாதான நிகழ்வில் கலந்து கொண்ட அபூமூஸா, அம்ர் பின் ஆஸ் (ரழி) ஆகியோர், மற்றும் மூத்த ஸஹாபாக்கள் அனைவரும் காபிர்கள், உமர் , அலி உள்ளிட்ட ஸஹாபாக்களை காபிர்கள் என்று தீர்ப்பு கூறாதவர்களும் காபிர்களாவர், ஆட்சியாளர் அநீதி இழைத்தால் அல்லது தவறிழைத்தால் அவருக்கெதிராக கிளர்ச்சி செய்தி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது உடனடிக் கடமை, பெரும்பாவம் செய்த முஸ்லிம் காபிர் அவர் நரகத்திலேயே நிரந்தரமாக தங்கியிருப்பார்கள் போன்ற தீவிரப்போக்கான சிந்தனைகள் இவர்களது பிரதான கொள்கைகளாக இருந்தன.
இதனைத் தொடர்ந்து ராபிழாக்கள் எனப்படும் அலி (ரழி) அவர்களை எல்லை மீறி நேசிப்போர் மற்றும் நவாஸிப்கள் எனப்படும் அலி (ரழி) அவர்களை எல்லை மீறி தூசிப்போர் ஆகிய இரு பெரும் பிரிவுகள் தோன்றின. இவ்வாறான வழிகெட்ட சிந்தனைப் பிரிவுகளில் இருந்து தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள முஸ்லிம்கள் ‘அஹ்லுஸ்ஸுன்னா’ என்று தம்மை அழைத்தனர்.
ஆட்சியாளர் தவறு செய்தால் அதனை பகிரங்கப்படுத்தி, ஆட்சியாளருக்கெதிராக மக்களின் வெறுப்புணர்ச்சியை தூண்ட செய்து ஆட்சிக்கெதிராக கிளர்ச்சி செய்து அதன ஆயித போராட்டமாக மாற்றுவதில் கவாரிஜிகள் என்னும் கிளரச்சியாளர்கள் இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் செயற்பட்டு வந்துள்ளார்கள் என்பதை நாம் அறிவோம்.
இஸ்லாமிய வரலாற்றில் இத்தகைய வழிகெட்ட சிந்தனை பின்புலம் கொண்ட கருத்தியல் கலீபா உத்மான்(ரழி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் தோற்றம் பெற்றது. நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்கு பின்னர் இந்த வகுப்பார் முஸ்லிம் சமுகத்தில் நிலை கொண்ட காலமாக கலீபா அலி (ரழி) அவர்களின் ஆட்சிக் காலம் வரலாற்றசிரியர்களால் அடையாளப்படுத்தப்படுகிறது.
ஆட்சியாளர்களின் தவறுகளை வைத்து அவர்களுக்கு இறை நிராகரிப்பு தீர்ப்பு கூறுவது அல்லது மதம் மாறியதாக தீர்ப்பு வழங்குவது உள்ளிட்ட சிந்தனைகள் இஸ்லாமிய சமூகத்தினுள் உருவாகியிருக்கும் பயங்கரமான கவாரிஜிய சித்தாந்தத்தின் வெளிப்பாடாகும். கவாரிஜிகள் என்னும் கிளர்ச்சியாளர்களைப் பொருத்தமட்டில் அவர்கள் காபிர்களோடு போர் புரிவதை விட முஸ்லிம்களோடு போர் செய்வதையே பெரிதும் விரும்புவர்கள். முஸ்லிம்களை இறை நிராகரிப்பாளராகவும் , மதம் மாறியவர்களாகவும் பிரகடனப்படுத்துவதும் அவர்களது இரத்தத்தை ஓட்டுவதும், சொத்துக்களை சூரையாடுவதுமே அவர்களது பிரதான குறிக்கோள்களாக இருக்கும். அல்லலாஹூத்தாலா இத்தகைய மிக மோசமான கருத்துருவாக்கம் கொண்டவர்களிடமிருந்து முஸ்லிம் சமூகத்தை பாதுகாக்க வேண்டும்.
இமாம் இப்னு ஹஸ்ம் (ரஹ்) அவர்கள் கூறும்போது
வழி கெட்ட பிரிவினர்களால் அல்லாஹூத்தாலா முஸ்லிம் சமூகத்திற்கு எந்தவொரு நன்மையையும் ஏற்படுத்தவில்லை; அவர்களின் மூலமாக முஸ்லிமல்லாத தேசங்களில் ஒரு கிராமத்தையேனும் வெற்றி பெற வைக்கவில்லை; இஸ்லாத்திற்காக எந்தவொரு வெற்றிக் கொடியையும் அவர்கள் சுமக்கவுமில்லை; மாறாக, இஸ்லாமிய அரசுகளின் ஆட்சிக்கெதிரான விரோதப் போக்கை கொண்ட அவர்கள் முஃமின்களின் ஒற்றுமையை சீர்குழைத்து, முஸ்லிம்களுக்கெதிராகவே ஆயுதம் ஏந்தி தேசம் நெடுகிலும் கலகம் விளைவித்துக் கொண்டே இருக்கின்றனர். இதுவிடயத்தில் ஷீயாக்களும், மற்றும் கவாரிஜிகள் எனப்படும் கிளர்ச்சியாளர்களின் நிலை அறிமுகம் தேவையில்லை என்ற அளவுக்கு தெளிவானது." (அல் பிஸ்ல் பில் மிலல் வல் அஹ்வாயி வந்நிஹல் 4/181)
இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறும் போது
கவாரிஜிகள் எனப்படும் கிளர்ச்சியாளர்களை பொருத்தமட்டில் இறை நிராகரிப்பாளர்கள் குறித்து இறங்கிய வசனங்களை முஸ்லிம்கள் மீது பிரயோகிக்கும் சமூக பாதிப்பை ஏற்படுத்தும் சாரார் ஆவர் "
இமாம் இப்னு தைமிய்யா (மின்ஹாஜுஸ் சுன்னாஹ் 6/116)
ஆட்சியாளரின் தவறுகளை பொது வெளியில் விமர்சித்தல்,
கிளர்ச்சியில் ஈடுபடுதல்
இஸ்லாமிய ஆட்சியாளர் அநீதிமிக்கவராக இருந்தால் அந்த ஆட்சிக்கெதிராக பிரசாரம் செய்வதோ அல்லது மக்களை அவ்வாட்சிக்கெதிராக கிளரச்செய்து அதனை ஆயுதப் போராட்டமாக உருவமைத்து முஸ்லிம்களின் இரத்த்ததை சிந்த வைப்பதும் , உயிர் உடமைகளை இழக்கச்செய்யும் போக்கானது இஸ்லாத்தின் அடிப்படைக்கு முரணானது. தவிர, இஸ்லாத்தை தம் வாழ்வில் கடை பிடித்த ஸலபுகளினதும், இமாம்களினதும் அணுகுமுறைக்கும் மாறுபட்டதாகும். மாறாக ஆட்சியாளரிடம் குறித்த தவறை அதற்குறிய முறையில் எத்திவைப்பதும், அது குறித்து உபதேசிப்பதும், அவருக்காக பிரார்த்திப்பதும் , அவருக்காக பாவமண்ணிப்பு தேடுவதுமே ஸலபுகளின் வழிகாட்டல்களாகும்.
No comments:
Post a Comment