Dr. A.H. Subiyan
MBBS(SL),
Diploma in Psychology (SL)
General Scope Physician
--------------------------
நேற்றைய தினம் எமது நாட்டைச்சேர்ந்த நோயாளி ஒருவர் வைத்திய ஆலோசனைக்காக வந்திருந்தார்.அவர் எனது Consultation அறைக்குள் நுழைவதற்கு முன் வழமை போன்று அவரது முன்னைய விபரங்களை தேட தொடங்கினேன்.இதற்கு முதல் மூன்று வாரத்திற்கு முன் ஒரு Visit செய்துள்ளார்.அதன்போது அறிகுறியுடனான உயர்குருதி அமுக்கம் என புதிதாக அடையாளப்படுத்தப்பட்டு(Newly Diagnosed symptomatic High Pressure) சில நாற்களுக்குறிய Pressure மாத்திரைகள் வழங்கப்பட்டு சில நாற்களுக்கு பின் Pressureஇன் அளவை பார்த்து மருந்தின் Doseஐ Adjust பண்ணலாம் அல்லது புதிதாக மற்றுமொரு Pressure மாத்திரையை சேர்க்கலாம் என்றடிப்படையில் ஆலோசனை வழங்கப்பட்டது.இதை தவிர Pressure சம்பந்தப்பட்ட பல விடயங்களான தற்கால/நீண்ட கால பாதிப்புகள்,சாப்பாடு கட்டுப்பாடு,உடற்பயிற்சி,புகைத்தலை நிறுத்தல்,தொடர்ச்சியான Clinic Follow up/Treatment போன்ற பல விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டது.உரிய திகதி கழித்து பல நாற்களாகியும் வரவில்லை.இது வழமையாக எமது இலங்கை நாட்டின் பெரும்பாலனர்களின் கவனமின்மை/மனநிலை,வைத்தியரின் ஆலோசனையை புறக்கணிப்பு என்பதால் அந்த விடயத்தில் அதிக நேரம் செலவழிக்க நான் விரும்பவில்லை.
தற்போது மருத்துவ ஆலோசனை வேண்டி என்னை சந்திக்க வந்தது மற்றுமொரு பிரச்சனை என்றும் ஏன் உரிய திகதியில் வர முடியவில்லை என்ற காரணத்தையும் என்னிடம் கூறியபோது நான் அதிர்ந்து போனேன் .முதல் தடவை மருந்து எடுத்து சென்று இரு தினங்களில் நாட்டில் நண்பரொருவரின் திருமண நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.தான் வேலை செய்யும் Companyஇல் நாட்டில் Emergency என பொய் காரணம் கூறி நாட்டுக்கு உடன் சென்றுள்ளார்.
நீண்ட நாற்களாக கணவனின் வரவை எதிர்பார்த்திருந்த அன்பு மனைவி,ஆசை குழந்தைகள் என எல்லோரும் வீட்டில் வரவேற்புடன் காத்திருக்க தமது பிரயாண பைகளை வீட்டில் வைத்துவிட்டு ஒரு சில மணித்தியாளங்களில் நண்பர்களுடன் திருமண வீட்டுக்கு சென்றுள்ளார்.
இதன்போது நண்பர்களின் தூண்டுதலால் போதைப்பொருள் பாவிக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.வெளிநாட்டுக்கு செல்ல முன் ஓரளவு போதைப்பொருள் பாவணை இருந்தபோதும் கடந்த நான்கு வருடங்களாக போதைப்பொருள் பாவனையில் இருந்து முற்றிலும் தவிர்ந்துள்ளார்.மீண்டும் மோசமான நண்பர்கள் தொடர்பினால் போதைப்பொருள் பாவனை ஆரம்பிக்கப்பட்டு நான்கு நாற்களாக இவரது பணமே முற்றாக செலவழிந்துள்ளது.ஏறத்தாழ ஒன்றரை இலட்சம் இலங்கை ரூபா போதைப்பொருளுக்காக செலவழிக்கப்பட்டுள்ளது.பணமும் தீர நண்பர்கள் விட்டுவிலக செய்வதறியாது மீண்டும் இங்கு கட்டாருக்கு உடனே வர தீர்மானித்துள்ளார்.இந்த நாற்களில் ஒரு தடவை கூட வீடு செல்லவில்லை.Airport போகும் வழியில் பிரயாண பைகளை எடுக்க வீடு சென்று உடனே திரும்பியுள்ளார்.
இங்கு வந்து சில நாற்கள் இரத்ததில் போதைப்பொருளின் அளவு குறைவடைந்து மூளையில் இவற்றுக்கான தூண்டுதல் இல்லாமல் செல்லுகின்ற போது பலவகையான அறிகுறிகள் வெளிப்பட தொடங்கியுள்ளது(Withdrawal Symptoms).
இவ்வாரான அறிகுறிகளுக்குறிய தீர்வுக்காகவே என்னை மீண்டும் சந்திக்க வந்தார்.இந்த நாடுகளில் போதைப்பொருள் பாவணைக்குறிய சட்டதிட்டங்கள் கடுமையானதால் சிறப்பான மருத்துவ ஆலோசனை அதிகம் பயன் கிடைக்கும் என்பதால் அவருடன் சில நேரங்கள் கழித்தேன்..
இதில் குறிப்பாக பல காலங்களாக ஆசைகளை அடக்கிவைத்து காத்திருந்த மனைவி,அப்பா அப்பா என அன்போடு எதிர்பார்த்திருந்த குழந்தைகள்,மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றரை இலட்சம் சம்பளம் பெற எவ்வளவு தியாகங்கள்/கஷ்ட்டங்கள்,மோசமான நண்பர்களினால் ஏற்படும் விளைவு,போதைப்பொருள் பாவணையின் உடனடி,நீண்ட கால விளைவுகள் சம்பந்தமாக தெளிவுபடுத்தப்பட்டது.இறுதியில் மிகப்பெரிய குற்றவுணர்வு ஏற்பட்டு வருந்தினார்.

போதைப்பொருள்கள் பாவணை(Drugs Abuse) சம்பந்தமாக பல ஆக்கங்கள்,விழிப்புணர்வு கருத்துக்களையும் பரவலாக சமூக வலைத்தளங்கள்,பத்திரிகைகள்,தொலைக்காட்சிகளில் இந்த நாற்களில் அதிகம் காண முடிகிறது.சில ஊர்களில் போதைப்பொருள்களை ஒழிப்பதற்குறிய பல முயற்சிகள் தொடர்ச்சியாக நடைபெறுகிறது.ஆனால் பல ஊர்கள்,தனி நபர்,சமூகம் என பலரும் போதைப்பொருள் ஒழிப்பு முயற்சியில் அவ்வளவு ஈடுபாடு இல்லை.பெரும்பாலனவர்களின் மனநிலை நானும் எனது குடும்பமும் நல்லவர்கள்.ஒருபோதும் இவ்வாரான போதைப்பொருள் பாவணைக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஆளாக மாட்டோம் என்ற மனநிலையில் வாழ்கிறார்கள்.
போதைப்பொருள்கள் புற்றுநோய்களை விட மோசமான ஒன்றாகவே கருதப்படுகிறது.வெகுவாக தனிநபரையும்,ஓரளவு வேகமாக குடும்பத்தையும்,மெதுவாக சமூகத்தையும் அழித்துகொண்டே செல்லும்.இலங்கையில் தற்போது தனிநபர் பாவணை எண்ணிக்கை அதிகரித்து நாள்தோறும் பாடசாலை சமூகத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதை தினம்தோறும் போதைப்பொருள் சம்பந்தமாக பல பாடசாலைகளில் குறிப்பாக பிரபல பாடசாலைகளில் அறியகிடைக்கும் சம்பவங்கள் அடுத்த சந்ததியினரின் எதிர்காலத்தை கேள்வி குறிக்குள்ளாக்கும் என்பதில் சந்தேகமில்லை.எவ்வாறு ஒரு பெண் விபச்சாரத்தின் மூலம் குறுகிய நேரத்தில் கிடைக்கின்ற அதிக வருமானம்,தற்காலிக இன்பத்திலிருந்து விடுபட முடியவில்லையோ ஓர் ஆணும் போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைக்கின்ற குறுகிய நேரத்தில் அதிக இலாபம்,பாவணை மூலம் கிடைக்கின்றன தற்காலிக இன்பத்திலிருந்து விடுபடுவது அதிக கடினமாகும்.இலங்கையில் தற்போது பரவலாக பெண்களும் ஆண்களைப்போன்று போதைப்பொருள் பாவணை/விற்பனையில் ஈடுபடுகிறார்கள்.
போதைப்பொருள் பாவனையை ஒழிக்க பல்வேறுபட்ட முறைகளில் அரசு முயற்சி எடுத்தாலும் உரிய பயனில்லை.போதைப்பொருள் பாவணை/விற்பனை இவற்றுடன் சம்பந்தப்பட்டவர்கள் ஆதாரத்துடன் கைது செய்கின்ற போது உடனடியான மரண தண்டனையை தவிர வேறு எந்தவொரு நடவடிக்கையும் சிறந்த தீர்வாக அமையாது.இவற்றை அரசு அமுல்படுத்த நினைத்தாலும் நாட்டின் உயரிய சபையான பாராளுமன்றத்தின் பல உறுப்பினர்கள் தமது எதிர்ப்பை காட்டுவதில் தெளிவாகிறது பல முக்கிய புள்ளிகளும் போதைப்பொருள் பாவணை/விற்பனையில் பின்னி பிணைந்துள்ளார்கள்.
கடந்த வருடம் போதைப்பொருள் சம்பந்தமாக வெளியாகிய எனது ஆக்கத்தை மீள்பதிவேற்றம் செய்தால் ஏதோவொரு சிறு விழிப்புணர்வு கிடைக்கலாம் என்றவகையில் பதிவிடுகிறேன்.
போதைப்பொருள்கள்(Drugs)

போதைப்பொருள் பாவனை(Drugs Abuse)என்றால் என்ன?
மருத்துவ நோக்கம் தவிர்ந்த உடம்பில் அல்லது சிந்தனையில் மாற்றம் ஏற்படுத்துவதற்காக பாவிக்கப்படுகின்ற மருந்து/இரசாயன பதார்த்தமாகும்.
போதைப்பொருளில் தங்கியிருத்தல்(Drugs Dependency):
போதை பொருளை பாவனையில் உள்ளவர் தமது அன்றாட உடல்,சிந்தனை செயற்பாடுகள் போதை பொருளின்றி முடியாது என்ற உளவியல் ரீதியான எண்ணமாகும்.
போதைப்பொருள் சகிப்புத்தன்மை(Drugs Tolerance)-
தொடர்ச்சியாக போதைப்பொருள் பாவனையிலுள்ளவர்கள் அவர் எதிர்பார்க்கும் மாற்றத்திற்குறிய போதைப்பொருளின் அளவு போதாமையினால் தொடர்ச்சியாக தாம் பாவிக்கும் போதைப்பொருளின் அளவை அதிகரித்து கொண்டே செல்லல்.
போதைப்பொருள் பாவனை உடன் நிறுத்தப்படும் போது ஏற்படும்
விளைவு(Drugs Withdrawal Reaction)
போதைப்பொருள் பாவனையிலுள்ளவர் உடனடியாக நிறுத்துகின்ற போது பயம்,கோபம்,தலையிடி,தூக்கமின்மை,
மனஅழுத்தம்,உடம்பு நடுக்கம்,சமூகத்தை விட்டு ஒதுங்கியிருத்தல் போன்ற அறிகுறிகளாகும்.இவை சில காலங்களுக்கு இருக்கும்.
உலகளாவிய பரம்பல்
போதைப்பொருள் பாவனை உலக,இலங்கை சனத்தொகை பரம்பலில்
2013 ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள் படி உலகில் 246 மில்லியன் பேர் போதைப்பொருள் பாவனையிலுள்ளனர்.ஏறத்தாழ உலக சனத்தொகையில் 20பேரில் ஒருவர்.அதே ஆண்டில் மட்டும் 187000 பேரின் மரணத்திற்கு போதைப்பொருள் காரணமாக இருந்துள்ளது.
கூடுதலாக நகர்ப்புறங்களிலே இதன் பாவனை அதிகம்.
ஆண்,பெண் விகிதாசாரம் 10:1 ஆகும்.
இலங்கையில் 2015ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் ஜூன் வரை 8570பேர் போதைப்பொருளுடன் சம்பந்தப்பட்டதாக கைது செய்யப்பட்டிருந்தனர்.இதில் 21% 30-34 வயதையுடையவரகள்.மேல் மாகணத்தில் 38% கொழும்பில் 2350 பேர்கள்.
உலக,இலங்கை ரீதியாகவும் பல்வேறு போதைப்பொருள் பாவனைக்கெதிராக பல திட்டங்கள் வகுத்துள்ள போதும் இதன் பாவனை அதிகரித்து கொண்டே செல்கிறது.இலங்கையில் தற்போது பாடசாலை மாணவர்களும் இதற்கு இலக்காகி நாளடைவில் அடிமையாகி அவர்களது வளமான எதிர்காலத்தை இழக்கின்றனர்.
போதைப்பொருள்களின் வகைகள்
1)Opiates(Narcotics)-உலக சனத்தொகையில் 32.4மில்லியன் மக்கள் இதை பாவிக்கிறார்கள்.அமெரிக்கா,கனடா,பிரித்தானிய நாடுகள்,
ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இதன் பாவனை அதிகம்.Heroin,Morphine,Methadone,
Codeine போன்ற பலவகைகள் உண்டு.இவற்றில் பெரும்பாலானவை மருத்துவ துறையில் நோவுக்கான(Pain) மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.இவற்றில்
ஆகக்குறைந்த வினைத்திறன் உடையதாக வைத்தியசாலையில் சாதாரணமாக பயன்படுத்தப்படுகின்ற Tramadolஉம் அடங்கும்.இது குறிப்பிட்ட காலத்திற்கு முன் இலங்கையில் கூடுதலாக துஸ்பிரயோகம் செய்யப்பட்டதால் அரசாங்கத்தால் முற்று முழுதாக நிறுத்தப்பட்டது.தற்போது வைத்தியசாலை தவிர்ந்த ஏனைய இடங்களில் விநியோகிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.நாம் சாதாரணமாக பாவிக்கும் Panadiene,Rapidiene,Bronchodex,
Bronchodiene,Corex-D இவற்றிலும் Codiene சிறிதளவு உள்ளது.இவற்றில் சிலவற்றையும் பலர் துஸ்பிரயோகம் செய்வதால் தற்போது அரசாங்கத்தால் நிறுத்தப்பட்டுள்ளது.
2)Coccaine
3)Cannabis(Marijuana-கஞ்சா)
4)Methamphetamine
போன்ற பல வகைகள் அறிய முடிகிறது.
போதைப்பொருள் பாவனை முறைகள்
1)போதைப்பொருள் நேரடியாக வாயினால் உள்ளெடுத்தல்/சாப்பிடுதல்(41%)
2)புகைத்தல் மூலம்(21%)
3)ஊசிகள் மூலம் ஏற்றல்
இதை விட Sniff மற்றும் Chinese முறைகளாகும்.
போதைப்பொருள்கள் மனிதனில் மூளையில்,உடம்பில் எவ்வாரான
மாற்றத்தை ஏற்படுத்துகின்றன?
மனித மூளை கோடிக்கணக்கான நரம்பு கலங்களினால் உருவாக்கப்பட்டிருக்கும்.இவை மூலமே உடம்பிற்கு கணத்தாக்கம்(Transmission)
கடத்தப்படுகிறது.ஒவ்வெரு நரம்பு கலங்களுக்குமிடையே உள்ள முனையில் நரம்பு கணத்தாக்கி பதார்த்தம்(Neuro Transmitter)சுரக்கப்பட்டு கணத்தாக்கம் கடத்தப்பட உதவுகிறது.இதன் மூலம் மூளையிலும்,உடம்பிலும் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.
போதைப்பொருள் பாவனையின் போது இதன்மூலம் மாற்றப்பட்ட இரசாயன பதார்த்தங்கள் இரத்ததின் மூலம் மூளைக்கு கடத்தப்பட்டு இவை போலியான Neurotransmitter ஆக தொழிற்படும்.பின்னர் இவை நரம்பு கல முனைகளில் உண்மையான Neurotransmitter உடன் போட்டியிட்டு அவைகளை தொழில்பட செய்யாது இவைகள் செயற்பட தொடங்கும்.உதன்மூலம் மூளையிலும்,உடலிலும் வழமைக்கு மாற்றமான செயற்பாட்டை ஏற்படுத்தும்.
போதைப்பொருள் பாவனையினால் ஏற்படும் விளைவுகள்
இது தனி மனித,குடும்ப,சமூகம் சார்ந்த பரந்த விளைவுகளாக அமையும்.
தனிமனித பிரச்சனைகள்-
நினைவு மறதி,கற்றல் பிரச்சினை,புலன்களில் ஏற்படும் பிரச்சனைகள்(பார்வை,கேட்டல்),பயம்,
மனஅழுத்தம்,தலையிடி,மயக்கம், பற்களில் ஏற்படும் பிரச்சனைகள்,தனிமைப்படல்,அடிக்கடி எண்ணம் மாறுதல்(Mood Swing),தற்கொலை முயற்சி,வலிப்பு(Fit),இதய துடிப்பு அதிகரித்தல்/இதயம் படபடவென்று அடித்தல்(Palpitation),AIDS/HIV,Hepatitis இல்லாதது இருப்பது போன்று தோற்றமளித்தல்(Hallucinations),மருட்சி
(Delusions),Agitation,Irritable,Problem in Decision making,Confusion, Disrupt Coordination,Slurred Speech,Poor judgment,Difficult to Concentrate போன்றவையாகும்.இதைவிட நீண்டகால பாவனையின் போது நுரையீரல் புற்றுநோய்,நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு போன்ற பிரச்சினைகளும் ஏற்படும்.
குடும்பம்:
அடிக்கடி வீட்டில் பிரச்சினை,தொழிலின்மை/தொழிலை இழத்தல்,திருமணம்/விவாகரத்து,குடும்ப உறுப்பினர்கள் சமூகத்தில் தலை குனிய வேண்டிய நிலமை போன்றவையாகும்.
சமூகம்:
நல்ல நண்பர்களை இழத்தல்,மற்றவர்களையும் போதைப்பொருளுக்கு அடிமையாக்க எத்தனித்தல்,நிதி ரீதியான பிரச்சனைகள்
என்பனவாகும்.
சட்ட ரீதியான பிரச்சனைகள்:
அடிக்கடி மற்றவர்களுடன் சண்டை பிடித்தல்,வாகன ஓட்டலும் வீதி விபத்துக்களும்,திருடல்,கடத்தல்,
கொலை,கொள்ளை என அடிக்கடி பொலிஸாரால் கைது செய்யப்படல்.
போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் வேறோரு உலகத்திலுள்ளவர்களைப்போலவே நடந்து கொள்வார்கள்.போதைப்பொருள் இல்லாமல் இவர்களால் எதையும் செய்ய முடியாத நிலை ஏற்படும்.இதற்காக எதையும் செய்வார்கள்.ஏன் தமது பெற்றோர்களை கூட கொலைசெய்ய தயங்கமாட்டார்கள்.
எவ்வாரனவர்கள் போதைப்பொருளை நாடுகிறார்கள்
1)குடும்பத்தில் ஏற்படுகின்ற பிரச்சினைகள்#குழந்தைகளின் முன்னால் பெற்றோர்கள் சண்டை பிடித்தல்,பெற்றோர்கள் குழந்தைகளுடன் நேரம் ஒதுக்காமை,கணவன் மனைவி இடையான பிரச்சனைகள்....போன்றவையாகும்.
2)மோசமான நண்பர்களுடனான உறவு
3)தோல்வி,இழப்புகளை தாங்கிகொள்ள முடியாமை(பரீட்சை,வியாபாரம்,காதல் போன்றவற்றில் ஏற்படுகின்ற தோல்விகள்,நெருங்கிய உறவினர்களின் இழப்பை தாங்கி கொள்ள முடியாமை.....)
4)தாழ்வு மனப்பான்மை((Inferiority Complex)
5)தன்னம்பிக்கை இல்லாமை(Lack of Self confidence)
இவற்றுக்கு மேலாக ஆன்மிகத்திலுள்ள குறைபாடே முதன்மை காரணியாக அமைகிறது.
போதைப்பொருள் பாவனையிலுள்ளவர்களை விடுவிப்பது/
போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவது எவ்வாறு?
இதில் தனி மனிதன்,குடும்பம்,சமூகம் எல்லோரினது ஒத்துழைப்புடனே இதை செய்ய முடியும்.
1)Primary Prevention-
போதைப்பொருள் கடத்தல்,போதைப்பொருள் வியாபாரம்,போதைப்பொருள்களை உற்பத்தி செய்தல்,இவற்றுக்கு உதவி செய்தல் என்பவற்றில் தீவிர கண்கானிப்புடன் இருப்பது மாத்திரமன்றி இதை மீறுபவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கள்.இது சம்பந்தமான குற்றங்களுக்கு வெவ்வேறு நாடுகளில் தண்டனை வித்தியாசப்பட்டாலும் பெரும்பாலான நாடுகளில் ஆயுள்,மரண தண்டனைகள் வரை வழங்கப்படுகிறது.
2)Secondary Prevention-
போதைப்பொருள் சம்பந்தமாக போதிய கல்வியை,தெளிவை மக்களுக்கு வழங்கள்.இவை செய்திகள்,விளம்பரங்கள்,வீதி நாடகங்கள்,சித்திரங்கள்,சமூக வலைத்தளங்கள்,கருத்தரங்குகள் போன்றவற்றினுடாக பொதுமக்கள்,மாணவர்களுக்கு தெளிவுபடுத்தல்.
3)Tertiary Prevention:
போதைப்பொருள் பாவனையிலுள்ளவர்களை தனி நபர்,குடும்பம்,சமூகம் என்பன கூட்டாக
ஒன்றினைந்து அதிலிருந்து மீள செய்தலாகும்.இதில் Counseling,Behavior Therapy,Vocational Therapy,Drugs Therapy,Financial Support,Spiritual Therapy என்பன அடங்கும்.
இலங்கையில் National Dangerous Drugs Control Board என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.1984 என்ற தொலைபேசி எண்ணை அழுத்துவதன் மூலம் மேலதிக தரவுகளை பெற முடியும்.
No comments:
Post a Comment