Mutur JMI

𝙅𝙪𝙣𝙖𝙞𝙙 𝙈𝙤𝙝𝙖𝙢𝙚𝙙 𝙄𝙝𝙨𝙝𝙖𝙣 𝐀𝐮𝐭𝐡𝐨𝐫 | 𝐏𝐮𝐛𝐥𝐢𝐬𝐡𝐞𝐫 | 𝐖𝐫𝐢𝐭𝐞𝐫 | 𝐅𝐫𝐞𝐞𝐥𝐚𝐧𝐜𝐞 𝐉𝐨𝐮𝐫𝐧𝐚𝐥𝐢𝐬𝐭 👉 𝙒𝙚𝙗𝙨𝙞𝙩𝙚 – www.jmi-mutur.com 👉 𝙈𝙖𝙞𝙡 – ihshanjm@gmail.com 👉 𝙁𝙖𝙘𝙚𝙗𝙤𝙤𝙠 – Ihshan J.M.I Mohamed - www.facebook.com/JMI.Ihshan 👉 𝙁𝙗 𝙥𝙖𝙜𝙚 Professional - Mutur JMI – www.facebook.com/IhshanJMI Personal - Ihshan JMI – www.facebook.com/MuturJMI 👉 𝙄𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢 – Ihshan JMI - www.instagram.com/ihshan_jmi 👉 Contact 0771020030

Business

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, November 22, 2018

தமிழ் மொழி எழுத்துருவ வரலாற்று பார்வை

No automatic alt text available.செம்மொழியாம் எந்தன் தமிழ் மொழி
மொழியால் நான் தமிழன்
எந்தன் தாய்மொழி தமிழ்
அறிவும் சரி அறியாமையும் சரி
தெளிவூட்டியது தமிழ்
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இன்று நாம் சரளமாகப் படிப்பது போல் தமிழ் எழுத்துக்கள் இல்லை. அதன் வடிவம் வேறு. அதனைப் புரிதலும் உச்சரித்தலும் முற்றுலும் வேறுபட்டிருந்தது. சங்க காலத்தில் உள்ள தமிழ் எழுத்தின் வடிவங்களை “தமிழி” என்ற அழைத்தார்கள்.

இன்றும் மதுரையைச் சுற்றியிருக்கும் மாங்குளம், அரிட்டாபட்டி, திருவாதவூர், கீழவளவு, திருப்பரங்குன்றம், திருவாதவூர், கரடிப்பட்டி பெருமாள் மலை, கொங்கர் புளியங்குளம் மலை, ஆனைமலை, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அயிரா மலை, கோவில்பட்டிக்கு அருகில் உள்ள கழுகுமலை உட்பட, தமிழகத்தின் பல குன்றுகளில் சமணர்கள் வாழ்ந்திருந்தார்கள்.
No automatic alt text available.
அங்கு சமணர் பள்ளிகளும் செயல் பட்டன. அந்த சமணர் மலைகளில் அவர்கள் வாழ்ந்த குகைகளின் விதானங்களில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப் பட்டுள்ளன. இன்றளவும் அந்த எழுத்துக்கள் எந்தவித சேதமும் இல்லாமல், ஏதோ, நேற்றுத் தான் எழுதி வைத்ததைப் போன்றதொரு தோற்றத்தில் உள்ளது.
Image may contain: textஅந்த எழுத்துக்களைப் புதிதாகப் பார்ப்பவர்கள் அது தமிழ் எழுத்து என்று சத்தியம் செய்தாலும் நம்ப மாட்டார்கள். ஏனென்றால் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் எழுத்தின் வடிவம் அப்படி.

ஆனால், இப்போது நாம் படிக்கும் தமிழ் எழுத்துக்களிலிருந்து உருவானவை, அவற்றின் பரிணாமம் தான் இப்போதுள்ள தமிழ் எழுத்துக்கள் என்பதை, தமிழ் கல்வெட்டுக்களைப் படித்து ஆய்வு செய்யும் அறிஞர்கள் தமிழ் எழுத்துக்களின் பரிணாம வளர்ச்சி பெற்ற விதத்தை செயல் முறையாகச் செய்து காட்டும் போது, இதைப் பற்றித் தெரியாதவர்கள் கூட முழுமையாக உணர முடியும். இந்தத் தொன்மைனயான தமிழ் எழுத்துக்களும் பல வகையாக இருந்துள்ளது.

கி.மு. முதலாம் நூற்றாண்டில், சமய வங்க சுத்த என்ற சமண நூல், பண்டைய கால தமிழ் எழுத்துக்களின் வகைகளைப் பதினெட்டு விதமாகப் பிரித்துள்ளது. பிராமி, யவநாளி, தொசபுரியா, கரோத்தி, புக்க ரசரியா, போகவையா, அக்கரபித்தியா, தேவானையா, நினித்யா, அம்பலிபி, கணியலிபி, லிபி, ஆதம்சலிபி, மஹேசரி, தமிழி, பொலிம்தி, என்று விதம் விதமாக பட்டியலிடப் பட்டுள்ளது.

Image may contain: text
இவற்றில் தமிழி என்ற வகையினைச் சேர்ந்த எழுத்துக்கள் தான் வழக்கில் இருந்துள்ளன. இவற்றின் பொருளும், நாம் இப்போது புரிந்து கொள்ளும் வகையி;ல் இருக்காது. இந்த தமிழி எழுத்துக்களின் மூலம் தான் சங்கத் தமிழ் இலக்கியங்கள் எல்லாம் படைக்கப் பட்டுள்ளன.
சமீபத்தில் மதுரைக்கு கிழக்கே உள்ள கீழடி என்ற இடத்தில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வில் கூட தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த கருப்பு சிவப்பு பானை ஓடுகளில் தென்படுகின்றன.

தேனூரில் சில ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்த தங்க கட்டிகளில்; தென்பட்ட மிக அபூர்வமான “போகுல குன்றத்துக் கோதை” என்ற தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப் பட்ட ஆறு தங்க கட்டிகள் கிடைத்துள்ளன.
No automatic alt text available.இது தவிர, ஆண்டிபட்டியில் கிடைத்த புதையலில் கிடைத்த “அதின்னன் எதிரான் சேந்தன்” காசிலும், பெருவழுதி, மாக்கோதை கொல்லிப்புறை போன்ற சங்க காலப் பாண்டியர் மற்றும் சேர மன்னர்களின் நாணயங்களிலும், தமிழி என்ற வகையினைச் சார்ந்த தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப் பட்டுள்ளதை நமது தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்து கூறியுள்ளனர். இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்த அணைக்கோட்டைச் செப்பு முத்திரையிலும், அனுராதபுரம், பூநகரி ஆகிய இடங்களில் கண்டறியப்பட்ட பொறிப்புகளிலும் பழமையான தமிழ் எழுத்துக்கள் காணக் கிடைத்தன.

பிரிக்கப் படாத மதுரை மாவட்டத்தில் உள்ள புலிமான் கோம்பை, தாதம்பட்டி, பொற்பனைக் கோட்டை ஆகிய இடங்களில் கிடைத்த சங்க கால நடுகற்களிலும், தமிழி எழுத்துக்கள் உள்ளன. இதன் பட்டியலைப் பக்கம் போட முடியாது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages