
முஸ்லிம்களின் சியாரங்கள் அல்லது இறைநேசர்கள் கல்லறைகள் என்பது இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை சான்றுபயக்கும் முக்கிய முதுசங்கள் ஆகும். அவை மனித மூதாதையர் வரலாற்றோடு அதிக நெருங்கிய தொடர்பையும் சமாந்தர இருகிளைப் பிணைப்பையும் காண்பிக்கும். ஆனாலும் முஸ்லிம் சமூகத்தில் உள்ள வரலாற்று மூலாதாரங்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பில் உள்ள அசட்டை தனமும் மார்க்கத்தில் உண்டான தெளிவில் அழிக்கப்பட்ட ஆவணங்களும் இன்று எமது நிலைத்திருப்பை ஒருகணம் கேள்விக்குறியாக்கி உள்ளதனை யாரும் மறுக்கவோ மறைக்கவோ இன்னும் மறக்கவோ முடியாது.
நாடுகாண் தேசாந்தியப் பயணங்கள், மதப்போதனை மற்றும் வியாபாரம் போன்றவற்றில் தொங்கி நிற்கும் இலங்கை முஸ்லிம்களின் வரலாறு இவற்றுக்கு அப்பால் இலங்கை பூர்வீக குடிகளுடன் இரத்தவியல் உறவும் இருந்துவந்துள்ளதாக வரலாற்று ஆய்வுகள் முன்மொழிகின்றது.

இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை கூறும் முக்கிய நூல்களுள் ஒன்றான இலங்கை பூர்வீகம் என்ற நூல் ஒரு தனி வகிபாகத்தை பெறுகின்றது. இந்நூலின் கருப்பொருள் நகர்வு மற்றும் அது கூற முனையும் வரலாற்று உண்மைகளை சமகால இலங்கை முஸ்லிம்கள் சற்று ஆழமாகவே உணரவேண்டிய தேவைப்பாடு எழுந்துள்ளது. அண்மைக்கால மாற்று மதங்களின் இனவாதிகள் எய்யும் அம்புகளும் அராஜக அத்துமீறல்களும் எமக்கு கற்றுத்தந்த பாடங்கள் கோடி. இவற்றின் பின்னணியின் அரசும், அரசியல்வாதிகள் தூண்டியாக இயங்கி வரும் நிலையில் எமது இருப்பை உறுதிப்படுத்தும் சான்றுகள் எம்மைசூழ சுமார் இரு தசாப்தங்கள் முன்னர் பொழிவுடன் இருந்து வந்தது. இருந்தபோதும் அவற்றின் அழிவு அண்மைகாலங்களில் அதிகரித்துவரும் நிலையில் அவற்றை எவ்வாறு பராமரிப்பது என்ற அடிப்படை அறிவு மார்க்க வரையறைகளோடு வகுப்படவேண்டிய நிலைப்பாடு எமது சமூகத்தின் பொறுப்பாகும்.

அவ்வகையில் மூதூர் மண் எங்கும் பரவலாக முன்னோர்களின் அடகஸ்தங்கள் கடந்தகாலங்களின் உயிர்ப்பு நிலையில் இருந்துவந்துள்ளது. இருந்தபோதும் அவை மிக அண்மைய காலங்களில் பராமரிப்பற்று அழிந்துவரும் நிலைமை உருவாகியுள்ளது. சில சியாரங்கள் இருந்ததற்கான அடையாளங்கள் கூட இன்றுள்ள இடங்களில் காணமுடிவதில்லை. ஒருசிலவற்றி எச்சங்கள் சில ஆங்காங்கே இருக்கின்ற போதும் அவை கவனமாக பாதுகாக்கவேண்டிய தேவை எம்மை சாரும். அடையாளம் குற்றப்பட்ட ஓரிரு சியாரங்களை சேகரிக்க முடிந்தது.



ஆரம்பகாலங்களில் வருடாவருடம் அல்லது சில வேசட காலங்களில் ஊர் மக்கள் ஒன்றுகூடி கந்தூரிகளையும் தங்கள் நேர்ச்சை காணிக்கைகளையும் கொண்டு விருந்துபடையல் செய்வது வழக்கமாக இருந்துவதுள்ளது. இப்படையலில் வழங்கப்படும் உணவிற்கு நாரிசாஉணவு என்றும் அழைப்பார்கள். ஊரில் உள்ள முக்கியஸ்தர்கள் மற்றும் மதத்தலைவர்கள் ஒன்றுகூடி இதனை ஏற்பாடு செய்வார்கள். பொதுவாக மூதூர் பெரியபள்ளி மற்றும் மார்க்ஸ் தளங்களை அடிப்படையாக்கொண்டு கொண்டாட்டம் போல கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் மூதூரை தாண்டி அயலூர்கலான கிண்ணியா, தோப்பூர் மற்றும் மட்டகளப்பு போன்ற பிரதேசங்களில் இருந்தும் இந்நிகழ்வில் மக்கள் கலந்துகொண்டுள்ளர்கள்.

பிற்பட்ட காலங்களில் காலவோட்டத்தில் சில சடங்கு சம்ரதாயங்கள் மருவி இல்லாமலே போய் விட்டது. இதன் காரணமாக சியாரங்களின் பராமரிப்பு மற்றும் பேண்தகு நிலையும் குன்றி தற்போது அநாதரவாக இருக்கும் நிலையில் காணப்படுகின்றது. எது எவ்வாறோ அவை எமது மூதையர்கள் மற்றும் மார்கத்தை பரப்ப உலகெங்கிலும் வெளிப்பட்ட புனிதர்கள் மற்றும் அக்காலப்பகுதியில் வாழ்ந்த நல்லடியார்கள் என்றும் ஊர்ஜிதமான தகவல்கள் சான்று பயக்குகின்றது. இவற்றை பாதுகாத்து பராமரிப்பு என்பது வரையறையோடு முன்னெடுக்கப்படவேண்டிய முக்கிய பணியாக இன்றுள்ள தலைமுறையை சார்ந்துள்ளது.
No comments:
Post a Comment