இவ்வுலகானது விளம்பர வியாபரத்தை அடிப்படையாக்கொண்டு நகரும் போக்கை அண்மைகாலமாக அவதானிக்க முடிகின்றது. பெறுமதியற்ற சிறு ஊசி தொடக்கம் பெறுமதியுள்ள வைரங்கள் வரை விளம்பரத்தை கொண்டே அவற்றின் தர நிர்ணயம் மற்றும் மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் சந்தைப்படுத்தும் உத்தி தங்கியுள்ளது எனலாம்.
அவ்வகையில் கடிகாரங்களும் விளம்பரங்களை அடைப்படையக்கொண்ட வியாபார பண்டங்களாகும். குறிப்பாக மனித வாழ்வின் சுழற்சியின் அதி உன்னதமான ஒரு தொழிலை மேற்கொண்டுவரும் கடிகாரங்களின் பயன்பாடு அளப்பரியது.
கடிகார முட்கள் 10.10 என்று காட்சிப்படுத்தப்படுவது ஏன்?
மேற்படி வினாவிற்கு பல்வேறு காரணங்கள் சமூக மட்டத்தில் நடைமுறை காரணங்களாக கூறப்பட்டு மாயை சித்தரிப்பு இருந்து வருகின்றது.
1. கடிகாரம் கண்டுபிடிக்கப்பட்ட நேரம் அது என்பதனால்....
2. கடிகாரம் கண்டுபிடித்தவர் மரணித்த நேரம் என்பதனால்...
3. ஜான் எஃப் கென்னடி (JFK) சுடப்பட்ட நேரம் என்பதனால்....
4. ஹிரோஷிமாவில் அணுகுண்டு போடப்பட்ட நேரம் என்பதனால்....
5. ஆபிரகாம் லிங்கன் இறந்த நேரம் என்பதனால்....
உண்மையில் மேலே கூறப்பட்ட காரணங்கள் எதுவும் இல்லை. குறிப்பாக வியாபார மூலதனத்தின் விளம்பரத்தின் நோக்கம் மற்றும் வசதி கருதிய பின்னணி இருந்துவருகிறது. சரி அது எவ்வாறு என்று பார்போம்.
எமது மூளை குறிப்பாக சமச்சீரா ஒன்றின் பக்கம் அதிக நாட்டம் கொண்டது. இதனை கண்கள் தான் குறிப்பாக மேற்கொள்ளும். இதனால் தான் எந்தவொரு படைப்பு, காட்சி அமைப்பு, கட்டிடங்கள், சில வினோத பொருட்கள் சமச்சீர் தன்மையை அடிப்படையாக்கொண்டு உருவாக்கப்படும். ஆனாலும் சில வாழ்வில் இன்றியமையாத காரணிகள் சமச்சீர் அற்று இருப்பின் அவற்றில் எமது பார்வை கூடிய கவனத்தை ஒருக்கும்.

அவ்வகையில் கடிகார முட்கள் குறிப்பாக 10.10 என்ற நேரத்தை காட்டுவதாக அமையின் V வடிவ அடையாளத்தை பெற்றுக்கொள்ளும். பொதுவாக கடிகாரத்தின் உற்பத்தி நிறுவனம் தங்கள் இலட்சினைகளை (logo) அல்லது பெயர் (Brand Name) பொரிப்பை இலக்கம் 12 இன் கீழே வைத்திருக்கும். இதனால் கடிகார முள்ளின் குறித்த அமைப்பு பெயர்/இலட்சினையை தெளிவாக அடைப்பு இட்டு காட்டும். இதனால் கொள்வனவாளர்கள் இலகுவாக குறித்த உற்பத்தியை அடையலாம் கண்டு கொள்வார்கள்.
இவற்றுக்கு மேலாக இன்னும் சில காரணங்கள் இருக்கின்றது 10.10 நேர காட்சியில்
1. சௌகரியம் - மேற்படி முள்ளின் ஒழுங்கமைப்பில் எல்லா முற்களும் காட்சிப்படுத்தப்படும். நேராகவோ அல்லது ஒன்றன் மேல் ஒன்றாகவோ இருப்பின் அவ்வாறு எல்லா முட்களும் தென்படுவது கடினம். இன்னும் சில கடிகாரங்களில் திகதி உள்ளடக்கம், வர்ணனை நிறைந்த சிறிய கடிகார அமைப்பு என்பன கொண்டு காணப்படும். அவை பொதுவாக கீழ் எல்லையில் காணப்படுவதனால் 10.10 என்ற அமைப்பில் முள் காணப்படுவது சௌகரியமாக அமையும் உள்ளடக்கம் காட்சிப்படுத்த...
2. கைகுலுக்கல் முறை - V அமைப்பு கைகுலுக்கல் அமைப்பை ஒத்தது. இதனால் ஒருவருடன் அறிமுகமாதல், நட்பு பாராட்டுதல், புரிந்துணர்வு, மற்றும் உதவி நிலையை குறித்து நிற்கும்.
3. வெற்றியின் (victory) சைகை - V என்ற அமைப்பு பொதுவாக விரல்களினால் இரண்டு அடையலாம் காட்டும் சைகையை வெளிகாட்டும்.

4. புன்னகை (Smile) - மகிழ்ச்சியின் அடையாளமாக இது கொள்ளப்படலாம். இதையோ தலைகீழாக இருப்பின் அவை ஒரு சோகத்தை ஒத்த அமைப்பாக சித்தரிக்கப்படுகின்றது.
ஆனாலும் தற்காலங்களில் இலத்திரனியல் கடிகாரங்களின் பயன்பாடு அதிகரித்து வந்துள்ளபோதும் முள் கடிகாரங்களின் செல்வாக்கு அளப்பரியது.
5. இலத்திரனியல் இலக்கப்படலை - 0,1 ஐ அடிப்படையாக்கொண்ட இலத்திரனியல் வாசிப்பு பாடலை 0,1 ஐ உள்ளடக்கியது. ஏனைய தானங்களால் இவ்விலக்கவியல் பெறப்படாது என்பதனால்.
அதுபோன்று பல விளம்பரங்கள் நாம் அறியாத ஏதோவொரு உண்மையை சுமந்தவன்னமே உள்ளது என்றால் மிகையாகாது. எது எவ்வாறோ மனித வாழ்க்கைக்கு நேரம் மிக இன்றியமையாத ஒன்றாகும். காலத்தின் மீது சத்தியமாக (அல்குர்ஆன் 103:01)
தேடல் வலைதளங்கள்
No comments:
Post a Comment