
ஓர் குழந்தையானது சுமார் 120 நாட்களின் பின்னர் கேட்டல் மற்றும் குருதியோட்டம் மற்றும் சில உணர்வுநிலை உணர்ச்சிகளை பெற்றுக்கொள்கின்றது. அந்நிலையில் இருந்து பிறப்பு நடைபெறும் உள்ள காலப்பகுதி வரை சுமார் 6 மாதங்கள் தாயின் கருவறையில் தனக்கென தனித்துவ புறச்சூழல் நிபந்தனையை வாழ்கின்றது. இக்காலப்பகுதியில் வெப்பநிலை, அமுக்கம் மற்றும் புறச்சூழல் ஒலி மற்றும் ஒளி என்பன இயல்பான நிலையில் பழக்கப்பட்டு இசைவாக்கம் பெற்று இருக்கும். அவ்வாறு இசைவாக்கம் பெற்ற ஒரு சூழலில் இருந்து முற்றிலும் மாறுபட்ட புதியதொரு சூழலிற்கு இடமாற்றம் நடைபெறும் தருணத்தை நாம் குழந்தை பிறப்பு என்று அழைப்போம்.

குழந்தை பிறந்து அடுத்த கணம் குழந்தையில் உடலியல் மற்றும் உளவியல் ரிதியாக பல்வேறு மாற்றங்கள் நிகழும். அவற்றில் குறிப்பாக தானும் தனது வாய் மற்றும் சுவாசத்தொகுதி கருப்பையின் அம்னியோன் பாயியினால் நிரப்பப்பட்டு இருக்கும். இதேவேளை குழந்தை பிறப்பின் பின்னர் அம்னியோன் பாயி மூக்கு மாற்று வாய்ப்பகுதியூடாக வெளியேற்றப்பட்டு நுரையீரல் வெறுமையாகும்.
இதன் பின்னர் சுவாச சீராக்கும் தொடங்கும். பொதுவாகவே சுவாச சீராக்கத்தை புறச்சூழல் நிபந்தனைக்கு ஏற்ப மாற்றி ஒழுங்குபடுத்த குழந்தைக்கு அழுகை மூளை மாற்று நரம்புத்தொகுதியின் தன்னிச்சை செயற்பாடு காரணமாக தூண்டப்படும். வாயை திறந்து குரல்வளை ஊடாக சத்தத்தை எழுப்பி அழுவதால் குழந்தையின் சுவாச சீராக்கும் மறுசீரமைப்பு பெறுகிறது. இவற்றுக்கு மேலாக கீழ்வரும் சில காரணங்கள் அழுகையை மேலும் தூண்டுவதாக அமையும்.

2. அமுக்க மாற்றம் - குழந்தை பிறந்தவுடன் அகச்சூழலில் இருந்து வேறுபட்ட புறச்சூழல் அமுக்கம் குழந்தைக்கு ஒரு தாக்கத்தை உண்டாக்கும். அத்துடன் குழந்தை பிறந்ததும் சிறிய உடல் விரிவு ஒன்று நிகழும். இதுவும் ஒரு காரணமே குழந்தை அழ.
3. வெப்பநிலை மாற்றம் - கருப்பையில் இருந்த குழந்தை தாயின் உடல் வெப்பநிலைக்கு இசைவு பெற்று இருக்கும். ஆனால் பிறப்பின் பின்னர் வெப்பநிலை மாற்றம் நிகழ்வும். இதனால் குழந்தைக்கு அழுகை தூண்டப்படலாம்.

5. பிறப்பு வழியினால் வலி - பிறப்பின் போது குழந்தை தாயின் யோனித்துவாராம் ஊடாகவே வெளிவரும். இதன்போது குழந்தையின் உடல் சற்று ஒடுக்கமுற்ற பாதையூடாக பயணிக்கையில் உடலில் வழியை உணரும். ஆகவே அழுகை தூண்டப்படும்.
கட்டாயம் குழந்தை பிறந்ததும் அழவேண்டுமா?
என்றால் கட்டாய நிபந்தனை ஏதும் இல்லை. சில குழந்தைகள் அழாமலும் பிறக்கத்தான் செய்கின்றது. இவ்வாறான குழந்தைகளில் பெரும்பாலானவை சற்று உடலியல் குறைப்பாட்டை கொண்டதாக அமையும். ஆனாலும் சில குழந்தைகளுக்கு அழுகை தூண்டப்படாத நிலையும் உண்டுதான்.
நீருக்குள் மகற்பேறு (Childbirth in the water)

குழந்தையின் இயல்பு நிலை, சூழல் மற்றும் உடல் நிலை (வெப்பநிலை, அமுக்கம்) என்பன வெகுவாக பேணப்படுகின்றது.
தாயின் உடல் வலி, குருதி அமுக்கம், உடலில் தசைகளின் தளர்வு மற்றும் மயக்கம் என்பன ஏற்படுவது இழிவளவாகின்றது.
சில பொழுதுகளில் இது சாத்தியமில்லாமலும் போகின்றது. அதாவது உயர் குருதியமுக்கம், நீரிழிவு, இரத்தப்போக்கு மற்றும் நோய்த்தொற்று போன்ற நிலைகளில் பிறக்கவிருக்கும் குழந்தைக்கும் தாய்க்கும் பாதிப்பினை ஏற்படுத்துவதாக அமையலாம்.
மேலும் இம்முறையானது சிறப்பான பயிற்சி மற்றும் பரிசோதனைகளுக்கு பின்பே நடைமுறை படுத்தப்படுதல் அவசியமாகும். சில வேளை நீரில் ஆபத்தை ஏற்படுத்தும் நுண்ணங்கி மற்றும் ஏனைய இரசாயனம் என்பன கலந்திருப்பின் இது பாரதூரமான விளைவை ஏற்படுத்த வாய்ப்பாகும்.

புனித குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.
“பின்பு (அவருக்கு ஏற்பட்ட) பிரசவ வேதனை அவரை ஒரு பேரீத்த மரத்தின்பால் கொண்டு வந்தது: இதற்கு முன்பே நான் இறந்து, முற்றிலும் மறக்கப்பட்டவளாகி இருக்கக் கூடாதா! என்று அரற்றினார். (அப்போது ஜிப்ரீல்) (மர்யமே! நீங்கள்) கவலைப்படாதீர்கள்! உமது இறைவன் நிச்சயமாக உமக்கு கீழாலேயே ஒரு (நீர்) ஊற்றை உண்டாக்கி இருக்கின்றான் என்று அவர் அழைத்து கூறினார்.” (அல்-குர்ஆன் 19:23~24)
பிரசவ வேதனையினை தாங்க முடியாத ஓர் பெண்ணின் நிலைமையினை விபரிக்கும் குர்ஆன் அவளுக்கு ஆதரவாக “உமக்கு காலுக்கு கீழாலேயே ஒரு ஊற்றை உண்டாக்கினோம்” என்று கூறுவதன் நோக்கம் மிகவும் ஆச்சரியமாக அமைகிறது. ஆனால் மேலுள்ள அறிவியலை ஒப்பாய்வு செய்வோமானால் இவ்வசனத்தின் பின்னணி புலனாகும்.
"குழந்தை அழுவதை பார்த்து தாய் சிரிக்கும் தருணம் குழந்தை பிறப்பு ஓன்றே" (அப்துல் கலாம்)
தேடல் வலைத்தளங்கள்
https://www.sciencefocus.com/the-human-body/why-do-newborn-babies-cry/
https://www.lifealth.com/pregnancy-and-parenting/new-born-babycare/why-do-baby-cry-right-after-the-birth-sd/32010/
https://biology.stackexchange.com/questions/55014/why-babies-cry-after-they-are-born
https://www.babycentre.co.uk/a25005123/first-24-hours-newborn-crying
https://www.quora.com/Why-do-babies-cry-soon-after-they-are-delivered-What-is-the-scientific-reason-behind-it
https://www.quora.com/What-if-a-baby-does-not-cry-at-the-time-of-birth
நீருக்குள் மகற்பேறு
http://americanpregnancy.org/labor-and-birth/water-birth/
https://www.webmd.com/baby/water-birth
https://www.babycentre.co.uk/a542005/what-the-research-says-about-water-birth
No comments:
Post a Comment