
இருந்தபோதும் வான்பொருட்கள் ஆரம்பத்தில் தீப்பந்தம் போலவே காணப்பட்டது. Bombardment period என்று அழைக்கப்பட்ட காலப்பகுதியில் புவி உட்பட பிரபஞ்சத்தில் காணப்பட்ட பெரும்பாலான வான்பொருட்கள் பொதுமை நிலையில் காணப்பட்டது. இக்காலப்பகுதியில் அண்டவெளியில் காணப்பட்ட சிறு சிறு கூறுகள் மற்றும் பிரபஞ்ச வெடிப்பின் துகள்கள் என்பன கிரகங்களில் மழை பொழிவதை ஒத்த நிலையில் பல்வேறு கிரகங்களில் உட்பொதிந்தது. இவ்வாறே பூமியில் இரும்பு மற்றும் ஏனைய தாதுப்பொருட்கள் இடம்பெற வாய்ப்பளிக்கப்படாததாக அண்மைய அறிவியல் ஆய்வுகள் அறிக்கை சமர்ப்பிக்கின்றது.

ஈர்ப்பு விசை செல்வாக்கு
பொதுவாகவே எல்லா சடப்பொருட்களுக்கும் ஒரு ஈர்ப்புவிசை காணப்படும். இது அப்பொருளின் அடர்த்தி/திணிவு, துணிக்கை தன்மை மற்றும் பருமனில் தங்கி இருக்கும். ஒரு பொருளின் பருமன் எவ்வளவு பெரியதாக இருக்குமோ அதற்கேற்றால் போல அதன் புற ஈர்ப்பு விசையும் உயர்வாக காணப்படும். அத்தோடு ஈர்ப்பு விசையானது எப்போதும் திணிவு மையத்தை நோக்கியதாக காணப்படும். உதாரணமாக கூறப்போனால் பொருளின் மையத்தை நோக்கி ஈர்ப்புவிசை சார்பாக அமையும். இவ்வாறே வான்பொருட்களுக்கும் தனது மையத்தை நோக்கிய ஈர்ப்புவிசை கண்டிப்பாக இருக்கும்.


வான்பொருட்கள் அனைத்தும் கோளவடிவானதா?
என்றால் இல்லை. இதற்கு விதிவிலக்காக சிறிய விண்கற்கள், தூமகேது (வால்நட்சத்திரம்), சிறிய குறுங்கோள்கள் என்பன ஒழுங்கற்ற வடிவத்தை கொண்டு காணப்படும். அத்தோடு இவ்வாறு காணப்படும் கூறுகள் தனக்கென ஒரு ஒழுக்கிக் கொண்டு காணப்படமாட்டாது.
கோளவடிவின் அனுகூலங்கள்
ஒரு பொருள் கொலவடிவாக இருப்பதனால் பல்வேறு அனுகூலங்கள் கிடைக்க கூடியதாக இருக்கின்றது.
1. பரப்பளவு அதிகளவில் காணப்படும்.
2. சுழற்சி மற்றும் சுற்றுகையின் போது உராய்வு இழிவலவாக வாய்ப்பாகும்.
3. பூமியை பொறுத்தவரை நேர வித்தியாசம், காலநிலை வேறுபாடு, பருவ மாற்றங்கள், வெப்பநிலை பரம்பல் போன்றவற்றில் செல்வாக்கு செலுத்தும்.
"வான (மண்டல)த்தில் கோளங்கள் சுழன்று வரும் பாதைகளை உண்டாக்கி, அவற்றிடையே ஒரு விளக்கை (சூரியனை)யும்; ஒளிவான சந்திரனையும் உண்டாக்கினானே அவன் பாக்கியமுள்ளவன்" (அல்குர்ஆன் 25:61)
தேடல் வலைதளங்கள்
https://spaceplace.nasa.gov/planets-round/en/
https://www.geek.com/news/why-are-all-planets-spheres-1562346/
http://coolcosmos.ipac.caltech.edu/ask/194-Why-are-all-of-the-planets-round-
https://futurism.com/why-are-the-planets-spherical
https://www.theguardian.com/notesandqueries/query/0,5753,-61104,00.html
No comments:
Post a Comment