

#Upside_Down
2012 இல் வெளிவந்த ஒரு வித்தியாசமான கற்பனை கொண்ட ஒரு காதல் திரைப்படம். காதல் என்று பூரணமாக கூறிவிட முடியாது. இரண்டு கிரகங்கள் அருகருகே வெவ்வேறு சுழற்சிப்பதையில் சுழன்றவண்ணம் இருக்கும். இரண்டு கிரகத்திலும் தனக்கென ஈர்ப்பு புலம் காணப்படுவதோடு அவற்றில் மானிட வாழ்கையும் இடம்பெறுகிறது. கதா நாயகன் ஒரு கிரகத்தை கதா நாயகி மற்றைய கிரகத்தை சார்ந்தவள். அத்தோடு ஒரு கிரகத்தில் இருந்து மறு கிரகத்து ஒருவரால் செல்ல முடியுமாக இருந்தபோதும் அவர் தலைகீழாகவே நடமாட முடியும்.
இரண்டு கிரகத்திலும் இரு மலைப்பகுதியில் மிக அண்மையாக காணப்படும் பகுதி ஒன்று காணப்படும். இப்பகுதியில் சிறு வயதில் கதாநாயகன் மற்றும் கதாநாயகி சந்தித்து சிநேகிதம் கொள்வார்கள். அதன் பின்னர் உண்டான பிரிவு காரணமாக இருவரும் நீண்டகாலம் பிரிந்து காணப்படுவார்கள். ஒரு முறை அந்த கதாநாயகன் தனது ஆய்விற்காக மற்ற கிரகத்திற்கு சென்றிருந்த வேளையில் எதேர்ச்சையாக கதாநாயகியை காண்பான். ஆனால் அவளுக்கு இவனை நினைவில் இருக்காது. காரணம் அவன் மற்றைய கிரகத்தை சேர்ந்தவன் ஆகையால் தனது கிரகத்திற்கு வர வாய்ப்பில்லை என்று எண்ணுவாள். அதன் பின்னர் அவன் அவளிற்கு தான்தான் அந்த இளம் வயது சிநேகிதன் என்பதை புரியவைக்க பல்வேறு முயற்சிகள் செய்வதை ரொம்பவும் சுவாரசியமாக காட்சி அமைப்பில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவளை எவ்வாறு சந்தித்து இணைகிறார்கள் என்பதே கதையின் சுருக்கம்.

#Ready_Player_One
Steven Spielberg தயாரிப்பில் 2018 வெளியான உலகம் பூராகவும் பேசப்பட்ட திரைப்படம் இது. காரணம் என்னவென்றால் இக்கதையின் கருப்பொருள். அதாவது சமகால உலகில் online TV Game பிரபலம் அடைந்து வருகின்றது. அவ்வகையில் 2045 இவ்வுலகில் எவ்வாறு online Game செல்வாக்கு செலுத்தும் என்பதை ஒரு எதிர்வுகூறப்பட்ட கற்பனை எண்ணத்தோடு உருவாக்கியுள்ளார்கள்.
திரைப்படமானது முழுக்க முழுக்க online Game இல் stage/ Level Complete செய்வதை அடிப்படையாக் கொண்டது. அத்தோடு VR Box (Virtual Reality) ஊடாக தன்னை ஒத்த கதாப்பாத்திரத்தை கொண்டு மூன்று வித்தியாசமான சாவிகளை தேடும் வேட்டையை ஒரு பிரபல Online Game Maker உருவாக்குவார். இதில் வெற்றிபெறும் நபர் பல பில்லியன் பெறுமதியான பொக்கிசத்தை அடைவதே கதையின் சுருக்கம். மேற்படி கதை உண்மையில் எதிர்காலத்தில் இவ்வாறான ஒரு தோற்றப்பாட்டை உண்டாகும் என்பதாக பலராலும் நம்பப்படுகின்றது.
பதிவிறக்கத்தளம்
Upside Down - http://hdpopcorns.co/upside-2012-720p-1080p/
Ready Player One - http://hdpopcorns.co/ready-player-one-2018-720p-1080p/
No comments:
Post a Comment