Mutur JMI

𝙅𝙪𝙣𝙖𝙞𝙙 𝙈𝙤𝙝𝙖𝙢𝙚𝙙 𝙄𝙝𝙨𝙝𝙖𝙣 𝐀𝐮𝐭𝐡𝐨𝐫 | 𝐏𝐮𝐛𝐥𝐢𝐬𝐡𝐞𝐫 | 𝐖𝐫𝐢𝐭𝐞𝐫 | 𝐅𝐫𝐞𝐞𝐥𝐚𝐧𝐜𝐞 𝐉𝐨𝐮𝐫𝐧𝐚𝐥𝐢𝐬𝐭 👉 𝙒𝙚𝙗𝙨𝙞𝙩𝙚 – www.jmi-mutur.com 👉 𝙈𝙖𝙞𝙡 – ihshanjm@gmail.com 👉 𝙁𝙖𝙘𝙚𝙗𝙤𝙤𝙠 – Ihshan J.M.I Mohamed - www.facebook.com/JMI.Ihshan 👉 𝙁𝙗 𝙥𝙖𝙜𝙚 Professional - Mutur JMI – www.facebook.com/IhshanJMI Personal - Ihshan JMI – www.facebook.com/MuturJMI 👉 𝙄𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢 – Ihshan JMI - www.instagram.com/ihshan_jmi 👉 Contact 0771020030

Business

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, October 23, 2018

ஒளியாண்டு (Light Year)

Related imageதூர அளவீட்டில் பெரும்பாலான நபர்கள் அறிந்துள்ள அளவீடுகள் கிலோ மீட்டர் (km), மீட்டர் (m), சென்றி மீட்டர் (Cm), மில்லி மீட்டர் (mm) இவைகளாகும். இவற்றுக்கு அப்பால் மிகச்சிறிய அளவீடுகளாக மைக்ரோ மீட்டர், நானோ மீட்டர் என்பனவும் வழக்கில் உண்டு. அத்தோடு ஆரம்ப காலங்களில் தூர அளவீட்டில் மைல் (1.61 km), யார் (90 cm), அடி, முலம், இன்ச் போன்றன பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.
ஆனாலும் மிகவும் நீண்ட தூரத்தை அளவீடு செய்கையில் கணிதவியல் நடைமுறைச் சிக்கல்கள் எழுந்து வந்தது. அதாவது எண்ணியல் ரீதியான டிஜிட்  அலகுகளின் பெருமானை எல்லை அதிகம் ஆனபடியினால் சுட்டி வடிவ எண்ணிக்கை அடையாள பகுப்பு முறை நடைமுறைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இருந்தபோதும் வானியல் ஆய்வுகளில் பிரபஞ்சத்தின் எல்லைக்குள் உள்ளடங்குகின்ற வான்பொருட்களின் தூரத்தை அளவீடு செய்வதற்கு சுட்டி அளவீட்டு முறையும் சாத்தியமற்றதாக மாறியது. இதனை தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட ஒரு நீள  அளவீடே ஒளியாண்டு (Light Year).
Image result for 1 light year in km
ஒளியாண்டு என்பது ஒரு வருடத்தில் ஒளி செல்லக்கூடிய தூரத்தின் மொத்த அளவை குறிக்கும் பெறுமானம். இதன் பெறுமானம் 9.4605284 × 10"15 meters (9.46 trillion kilometers) ஆகும்.
உலகத்தில் அதிக வேகத்தில் பயணிக்கும் ஒரு காரணி என்றால் அது ஒளியை பெரும்பாலானவர்கள் உதாரணம் காட்டுவார்கள். இதற்கான காரணம் ஒளியானது ஒரு வினாடிக்கு 299792458 m தூரம் பயணிக்கும். அண்ணளவாக 3 இலட்சம் கிலோமீட்டர் தூரம். ஒரு வினாடிக்கே 3 இலட்சம் கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் ஒளியானது ஒரு வருடத்திற்கு அதாவது (1x60x60x24x365x300000 km) பெருக்கத்தின் பெருமணமாக அமையும். இவ்வளவு தூர அளவையே நாம் ஒரு ஒளியாண்டு (1 light year / 1 ly) என்று எளிமையான வடிவில் கூறுவோம்.
Related image
அந்தவகையில் ஒளியாண்டிற்கு  அப்பால் வானியல் அளவீட்டில் மற்றுமொரு அளவீட்டு முறைமையும் சமகாலத்தில் இருந்துவருகின்றது. அதனை அஸ்டனோமிகள் அளவீடு (Astronomical unit) என்றழைப்பார்கள். சூரியன், புவி இரண்டிற்கும் இடைப்பட்ட தூரத்தை ஒரு அஸ்டனோமி அலகாக  கருதப்படுகிறது. அதாவது இதன் பெறுமானம் 149 597 871 kilometers (1 au) ஆகும்.
ஒளியாண்டிலும்  பல்வேறு பெரும் வகைகள் உண்டு.  "ly" for one light year, கிலோ ஒளியாண்டு "kly" for a kilolight-year (1,000 light years), மெகா ஒளியாண்டு "Mly" for a megalight-year (1,000,000 light years), ஜிகா  ஒளியாண்டு "Gly" for a gigalight-year (1,000,000,000 light years) என்பவற்றை உதாரணங்களாக கூறமுடியும்.
ஒளியாண்டின்  பயன்பாடு பெருமளவு வானியல் ஆய்விலே  அதிகன் தாக்கத்தை செலுத்தி வருகின்றது. உதாரணமாக பால்வீதியின் (Milky Way) விட்டம் 150,000 light-years ஆகும். இதுபோல எமது சூரிய மண்டலம் அமையப்பெற்றுள்ள உடுத்தொகுதியான பால்வீதியில் இருந்து மிக அருகில் உள்ள நட்சத்திர கூட்டமே அண்டோமிடா (Andromeda) நட்சத்திர கூட்டம். இவை இரண்டிற்கும் இடைப்பட்ட தூரம் அண்ணளவாக 2.3 million light-years ஆகும். எனவே எழுமாறாக கற்பனை செய்து பாருங்கள் இந்த பிரபஞ்சத்தின் பிரமாண்டத்தை!
Related image
ஒளியாண்டை  பொறுத்தவரையில் நடைமுறை வாழ்க்கையில் பலரும் அறிந்த ஒரு நீள  அளவீட்டு முறையின் மிக உயர்ந்த பெறுமானமுடைய அளவீட்டு அலகாகும். ஆனாலும் Gigaparsec என்ற அளவீட்டு முறையே மிக நீண்ட நீள அளவீட்டு முறை. இதன் பெறுமானம் 3.26 பில்லியன் ஒளியாண்டு (3.26 billion light-years) அளவு. இருந்தபோதும் இவ்வளவீடுகள் எதிர்காலத்தில் வேறு ஒன்று அறிமுகம் ஆனாலும் அதனை குறித்து ஆச்சரியப்பட ஏதும் இல்லைதான்.....

தேடல் வலைத்தளங்கள்
https://en.wikipedia.org/wiki/Light-year#History
https://en.wikipedia.org/wiki/Parsec
https://starchild.gsfc.nasa.gov/docs/StarChild/questions/question19.html
https://en.wikipedia.org/wiki/Astronomical_unit
https://en.wikipedia.org/wiki/Orders_of_magnitude_(length)
https://www.quora.com/Why-do-we-use-units-such-as-light-years

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages