
மேற்கூறப்பட்ட திருக்குர்ஆனியத் தொடர் மூலமாக கூற முற்படுவது என்ன?
அதாவது பெண்ணின் கருப்பையில் தோற்றம் பெறும் மனிதக் குழந்தையானது மூன்று இருள் திரைகளை கொண்ட அடுக்கடுக்கான எல்லைகளில் இறைவன் மூலமாக வடிவம் கொடுக்கப்படுகின்றது என்று குர்ஆன் எமக்கு விபரிக்கின்றது. இக்கூற்று உண்மைதானா என்று சற்று சிந்திக்கத்தான் வேண்டியதாகவுள்ளது. தற்போதைய அறிவியல் இதற்கு மூன்று வகை ஆதாரங்களை சமர்ப்பிக்கின்றது.
1- பெண்ணின் கர்ப்ப அறையின் கட்டமைப்பு அகப்புறத்தோற்றம்.
2- முளையத்தை சூழவுள்ள மென்சவ்வுப் படைகள்.
3- கருப்பையில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக் காலகட்ட படிநிலை.
மேற்குறிப்பிட்ட மூவகை ஆதரங்களும் அல்-குர்ஆன் வசனத்துடன் ஒன்றித்துப் போவதனை எம்மால் கீழ்வரும் விளக்கத்தில் புரிந்துகொள்ள முடியும்.
கர்ப்ப அறையின் கட்டமைப்பு மற்றும் புறத்தோற்றம்
பெண்ணின் கருப்பையில் உருவாகும் மனித முளையத்தினைச் சூழ மூன்று வெவ்வேறு வகையான சுவர்கள் காணப்படுகின்றது.
தாயின் முதுகெலும்புச்சுவர் (Anterior abdominal wall)
கருப்பைச் சுவர் (The uterine wall)
அம்னோ - கொரியோனிக் மென்சவ்வு (The amino-chorionic membrane)
மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு அடுக்குப்படைகளும் வெளிப்புறமிருந்து உள்நோக்கி அமைந்திருக்கிறது. இவைகளே கருவுற்ற முளையத்தினை பாதுகாக்கும் செயற்பாட்டை மேற்கொள்கின்றன.அதாவது தாயின் கருப்பைக்கு ஏற்படுகின்ற அதிர்வுகள், புறச்சூழலின் அமுக்கம், வெளிப்புற மோதுகைகள் என்பவற்றிலிருந்து முதிர்மூலவுருவை பாதுக்காக்கும் செயற்பாட்டை இந்த மென்சவ்வுகள் மேற்கொண்டு வருகின்றன.
முளையத்தை சூழவுள்ள மென்சவ்வுப் படைகள்
மேற்கூறப்பட்ட சுவர்களைப் போன்று மூன்று வெவ்வேறு இயல்புகளைக் கொண்ட மென்சவ்வுப் படைகள் மூலமாக போர்த்தப்பட்டு காணப்படும்.
கோரியோன் (Chorion)
அம்னியோன் (Amnion)
அலந்தோயி (Allanthoi)
நான் எடுத்துக்காட்டிய ஒவ்வொரு மென்சவ்வு படையும் கருவுற்ற மனிதக் குழந்தையின் வளர்ச்சி தொடர்வதற்கு மிக அத்தியாவசியமான பணிகளை மேற்கொள்கின்றது. இம்மென்சவ்வுகளும் அடுக்காக ஒன்றன் பின் ஒன்றாக காணப்படுகின்றது. இவை முதிர்மூலவுருவை சூழவுள்ள இருண்ட படைகளாகும். அத்துடன் இவை ஒரு பெண் கருக்கட்டப்பட்டு குழந்தை கருப்பையில் வளரும் காலப்பகுதியில் மாத்திரமே காணப்படும்.

பெரும்பாலான இன்றைய நவீன கருவியல் துறை இஸ்லாமிய அறிஞ்சர்கள் பலர் இக்கருத்தையே பொருத்தமென சரி காண்கின்றனர். தாய் கருவுற்று மகற்பேறு அடையும் காலப் பகுதியில் குழந்தையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் வளர்ச்சியும் விருத்தியும் பற்றிய கால அட்டவணையினை இது விளக்கி நிற்கின்றது. இதனை நவீன கருவியல் மருத்துவம் மும்மாத கால எல்லைகள் (Trimester period) என்றழைக்கின்றது.
மும்மாத காலப்பகுதியில் ஒரு குழந்தையானது எவ்வாறான உடலியல் மாற்றங்களுக்கு உள்ளாகிறது என்பதனை விளக்குவதற்கு விஞ்ஞானிகள் மகற்பேறு காலமான ஒன்பது/பத்து மாதங்களை மூன்று மூன்று மாதங்களைக் கொண்ட காலப்பகுதியாக பிரிக்கின்றனர்.


No comments:
Post a Comment