.jpg)
கிரகங்கள் பல அவற்றுக்கு என்று தனித்துவ சுற்றுப்பாதையை கொண்ட துனைகொள்களை கொண்டமைந்துள்ளது. அவ்வாறே பூமியும் கண்ணே பொன்னே என்று கொண்டுள்ள துணைக்கோளே சந்திரன் (Moon). துணைக்கோளான சந்திரன் பிரபஞ்ச தோற்றமான பெருவெடிப்பு நிகழ்வு தொடக்கம் இன்றுவரை இருந்து வருகின்றது. இந்த சந்திரன் மனித இனத்திற்கோ இல்லை புவிக்கோ எவ்வாறு உதவுகின்றது என்ற கேள்வியை முன்வைத்து ஒரு கட்டுப்பாட்டு பரிசோதனை ஒன்றாக சந்திரன் அழிவுற்றால்? என்னவாகும் என்ற கேள்விற்கு விடை காண்போம்.
இறைவனின் படைப்புக்கள் எந்தவொன்றும் வீணாக படைக்கப்பட்டு இருக்க மாட்டது. அந்தவகையில் சந்திரனும் ஏதோவொரு நோக்கத்திற்காகவே படைக்கப்பட்டுள்ளது. புனித அல்குர்ஆன் சந்திரனை குறித்து 27 இடங்களில் கமர் என்ற சொற்களை கொண்டு எடுத்துக்காட்டுகின்றது. இவற்றுக்கு மேலாக சந்திர ஒளியின் தன்மை குறித்தும் அல்குர்ஆன் மிகவும் தெளிவாகவே பேசுகிறது.

சந்திரனின் தொழிற்பாடுதான் என்ன?
பூமியின் மீது சந்திரனின் ஈர்ப்பு விசை தொழிற்பாடு காரணமாக பூமியில் பல்வேறு பௌதீகவியல் செயற்பாடுகள் சாத்தியமாக அமைகிறது.
- அவ்வகையில் பூமியில் உண்டாகும் வற்றுப் பெருக்கு நீரோட்டம் தொடர்ச்சியாக நிகழ வாய்ப்பாகிறது. அதுபோலவே சந்திரன் ஈர்ப்பு விசையின் ஆதிக்கம் காரணமாக பூமியில் காணப்படும் நீரோட்டம் தொடர்ச்சியாக நிலைபேறு பெற சாத்தியமாகின்றது. சந்திரன் ஒருவேளை அழிவுற்றால் துருவங்களை நோக்கிய நீரோட்ட பாச்சல் அதிகரித்து உலகம் அழிவுற காரணமாகும்.
- ஈர்ப்பு விசையின் தோற்பாடு காரணமாக பூமியின் கோளவடிவ தன்மை பேணப்படுகிறது. இல்லையெனின் மத்தியகோட்டில் ஒடுக்கம் உண்டாகி புவி சுழற்சி காரணமாக புவி பிளவுபட வாய்ப்பாகும்.
- ஈர்ப்பு விசை காரணமாக தொடர்ச்சியாக பேணப்படும் முக்கிய செயற்பாடே பூமியின் சுழற்சி வேகமும் இதன் காரணமாக ஏற்படும் ஒரு நாளின் அளவும்... இன்றுள்ள நிலையில் ஒரு நாள் என்பது 24 hours (23 hours 56 minutes and 4.1 seconds) ஆகும். சந்திரன் அழிவுற்றால் புவியின் சராசரி வேகமான 460 meters per second என்பது அதிகரித்து ஒரு நாளின் அளவானது குறைவாகிட ஏதுவாகும்.
- பூமியின் சாய்வு குறைவாகும். அதாவது 23.5 பாகை சாய்வு நிலை குறைவு உண்டாவதன் காரணமாக பூமியின் பருவ மாற்றங்கள், வானிலை மாற்றங்கள் குழப்பமுறும். அத்துடன் சூரிய ஒளியின் வீச்சு பரவலாக்கம் அடைவதனால் துருவ பனிப்பாறை உருகுதல் மற்றும் கடல்மட்டம் அதிகரித்தல் போன்ற செயற்பாடுகள் உண்டாகும். அத்துடன் தாவர சாகியங்களின் பரம்பல் மாறுபடும்.
- கிரகணங்கள் மற்றும் சந்திரன் பல்வேறு நிலைப்பாடு நிலைகள் தோற்றமளிக்காது. இதற்கு மேலாக இரவு என்பது பூரணமான இருளாக அசல் வடிவம் பெரும்.
- சந்திர நாட்காட்டி முறைமை இல்லாமல் போகும்.
- சந்திர ஒளியை அடிப்படையாக்கொண்டு வாழும் சில உயிரினங்கள் அழியும்.
- இரவு நேர வெப்பநிலை சீராக்கம் சற்று குழப்பமுறும்.

https://www.britannica.com/science/tidal-friction
https://www.activebeat.com/your-health/7-ways-the-moon-affects-human-animal-health/
https://steemit.com/science/@hmushtaq/advantages-and-disadvantages-of-colonizing-the-moon
https://www.livescience.com/7899-moon-myths-truth-lunar-effects.html
No comments:
Post a Comment