
சிலர் குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமாக பேசுகிறார்கள் என்று சிலர் குற்றம் சாட்டுகிறார்கள். உண்மைதான்; மாற்றமாக பேசுபவர்கள் இருக்கவே செய்கிறார்கள். ஆனால் தங்களுக்கு புரியவில்லை என்பதனால் மாற்றமாக பேசுகிறார்கள் என்று தவறாக கருதுவதும் இதில் உள்ளது.
உதாரணமாக இறைவன் ஆட்சியை வழங்குகிறான் என்ற வசனத்தின் மூலம் நமது முயற்சி தேவை இல்லை என்பதாக பலர் புரிகிறார்கள். "இல்லை; தேவை"என்று கூறி அதற்கான நியாயங்களை குர்ஆன் சுன்னாவிலிருந்து நாம் காட்டும் போது அதனை அவர்கள் புரிகிறார்கள் இல்லை.
"இறுதி காலத்தில் முஸ்லிம் உலகில் பெரும் குழப்பம் நேரும்" என்று இறைதூதர் சொல்லியுள்ளார். எனவே நாம் பதட்டம் கொள்ளத் தேவை இல்லை என்று அவர்கள் சொல்லும் போது நாம் அதற்கான மறுப்பை குர்ஆன் ஸுன்னாவிலிருந்தே காட்டும் போது அதற்கான விளக்கத்தை அவர்கள் புரிகிறார்கள் இல்லை.
ஆயிஷா ரலியிடம் ஹதீஸ்கள் ஸஹாபிகளால் சொல்லப்பட்டு அதற்கான விளக்கம் இதுதான் என அவர்கள் குறிப்பிடும் போது அவர்கள் குர்ஆன் வசனங்களின் துணையோடு மாற்று விளக்கங்களை அளிப்பார்கள்.
இந்த அம்சம்தான் ஆயிஷா ரலியை ஒரு அறிவு ஜீவியாக காட்டிநிற்கிறது.
இறைவன் ரிஸ்க் அளிக்கிறான் என்கிறோம்.ஆனால் நாம்தான் உழைக்கிறோம்.இறைவன் தான் பாதுகாவலன் என்று சொன்ன இறைதூதர் அகபா உடன்படிக்கையில் மதீனா வாசிகள் தன்னை பாதுகாக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.இறைவன் வானத்தை தாங்கிக் கொண்டிருக்கிறான் என்று குர்ஆன் கூறுகிறது. ஆனால் இதில் ஈர்ப்பு விசை தொழிற்படுகிறது.
எல்லாவற்றையும் இறைவனே செய்கிறான் .ஆனால் அதற்கு சில விதிமுறைகளை இறைவன் படைத்திருக்கிறான்.
அது போல இறைவன்தான் ஆட்சி அதிகாரம் வழங்குகிறான்.எப்படி நமது முயற்சிக் கேற்ப வழங்குகிறான்.
1)கழாகத்ர்,தவக்குல் போன்றவற்றை மட்டும் ஏற்றுக் கொண்டு
2)முயற்சி பற்றிய குர்ஆன் ஸுன்னாவழி காட்டல்களை விட்டு விடல்,
3)விஞ்ஞான எதிர்ப்பு, 4)ஒற்றுமை இன்மை,
5)உறுதியான ஆட்சி இன்மை
ஆகியவைகளை முஸ்லிம் சமூகத்தின் இன்றைய அடிபடுதலின் காரணங்கள் என்று நாம் சொன்னால் ஹதீஸில் முஸ்லிம்கள் பிரச்சனையை எதிர்கொள்வார்கள் என்று வந்துள்ளது; எனவே அது முஸ்லிம்கள் தாக்கப்படவே செய்வார்கள் என்று சிலர் கூறுகிறார்கள்.
இதற்கு எனது பதில்:
யூசுப் நபி ஒருவரிடம் உங்கள் சமூகம் 7 வருடங்களுக்கு பஞ்சம் நிகழும் என்று சொல்லிவிட்டு இள்தனை எதிர்கொள்வதற்காக 7வருடங்களுக்கு தானியங்களை சேகரித்து வைத்து பஞ்சம் வரும்போது பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றார்.
எனவே முஸ்லிம்கள் பெரும் துன்பங்களை எதிர்கொள்வார்கள் என்றால் அதனை எதிர்கொள்ளும் நடவடிக்கையில் முஸ்லிம்கள் ஈடுபட்டிருக்கவேண்டும் அதனை அவர்கள் செய்யவில்லை.
எதிர்கொள்வது எப்படி என்பதை நபி கூறவில்லையே என்பீர்கள். கூறவே தேவையில்லை.அது யூசுப் நபியின் வழிகாட்டலில் உள்ளது. அறிவுள்ள மக்களுக்கு இவ்வளவும் போதும்.
திருப்தியற்றவர்களுக்கு மேலும் ஆதாரம் இருக்கிறது .இறைதூதர் கூறாவிட்டால் என்ன?இறைவனே கூறியுள்ளான்.அது இதோ:
َ
அவர் (நிராகரிப்பவர்)களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும், திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்; இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும், உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம்; அவர்கள் அல்லாத வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச் செய்யலாம்); அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள் - அல்லாஹ் அவர்களை அறிவான்; அல்லாஹ்வுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும், (அதற்கான நற்கூலி) உங்களுக்கு பூரணமாகவே வழங்கப்படும்; (அதில்) உங்களுக்கு ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது.
(அல்-குர்ஆன் 8:60)
இந்த வசனம் விஞ்ஞானத்தின் அவசியத்தை வலியுறுத்துகிறது.
அந்த விஞ்ஞானத்தின் அடிப்படையே பகுத்தறிவுதான்.
எனவே இங்கு இஸ்லாத்தை பாதுகாக்க விஞ்ஞானம் அவசியப்படுகிறது.பகுத்தறிவு அவசியப்படுகிறது.
No comments:
Post a Comment