Post Top Ad
Your Ad Spot
Saturday, October 13, 2018
நவீனத்துவம் எவ்வளவுதான் அதீத உச்சத்தை அடைந்தபோதும் தபால் சேவையின் தாக்கமும் அதன் செல்வாக்கும் இன்றளவும் நடைமுறையில் இருந்துவருவதை காணமுடிகிறது. அந்தவகையில் மூதூர் மண்ணிலும் இவ்வாறானதொரு நடைமுறை அன்றுதொடக்கம் இன்றுவரை நிலவத்தான் செய்கின்றது.
குடித்தொகை வளர்ச்சியும் வீடுகள் மற்றும் குடியிருப்புத் தொகுதிகளின் சிக்கல்தன்மை ஆரம்பகால தபால் சேவையில் கையாண்ட நடைமுறை தொடர்ந்தும் நிலைபேறு அடைவது பல்வேறு நடைமுறை இடர்பாடுகளை பொதுமக்கள் மற்றும் தபால் சேவை நபர்களுக்கு இடையில் தோற்றுவித்துள்ளதை அன்றாட வாழ்வில் அவதானிக்க முடிகிறது.
மேற்படி பிரச்சினைக்கான அடிப்படை காரணியாக தொழிற்படுவது மூதூர் குடியிருப்பு தொகுதியில் அமையப்பெற்ற வீடுகளுக்கான வீட்டி இலக்கம் முறையாக ஒழுங்குசெய்யப்படமையே ஆகும். இந்த வீட்டு இலக்க முறைமை சமகாலத்தில் அடிப்படை தேவைப்படாக எழுந்துள்ளது. காரணம் பாதிக்கப்படும் நபர்களின் விகிதாசாரம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.
உதாரணமாக ஒரே வீதியில் ஒரே பெயரை கொண்ட இரு நபர்கள், குறித்த பகுதியில் ஒரே மாதிரியான இனிஷியல் கொண்ட பெயர்கள், இதற்கு மேலாக முகவரியை முறையாக எழுதாமை மற்றும் பெயர் எழுதப்பட்டதில் உள்ள எழுத்துப்பிழை காரணமாக ஒரு முக்கியமான கடிதங்கள் அல்லது வேறு பொருட்கள் உரிய நபரை அடைவதில் பாரியதொரு தாக்கத்தை உண்டாக்கி ஒருவரின் தலைவிதியை கூட மாற்றும் அளவிற்கு செல்வாக்கை செலுத்திவிடுகின்றது.
அதுமட்டுமன்றி தபால் சேவையில் ஈடுபடும் அதிகாரிகளின் சில கவனக்குறைவும் இவ்வாறான இடர்பாட்டில் முக்கிய பின்னணி ஊடுருவல்களை செலுத்திவருகின்றதை யாராலும் மறுக்க முடியாது. எனவே மேற்படி விடயதானம் குறித்து அவசரமான மற்றும் ஆரோக்கியமான முடிவுகளை பெறவேண்டிய பொறுப்பும் கடமைப்பாடும் பிரதேச சபைக்கு உரித்தானது. எனவே குறித்த பிரச்சினை குறித்து உரிய தரப்பினர் கூடிய அக்கறை செலுத்து அவசரமாக பிரச்சினைக்கான தீர்க்கமான முடிவை எட்டுமாறு பாதிக்கப்பட்ட பொதுமகனாக வேண்டிக்கொள்கின்றேன்.
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Your Ad Spot
Author Details
Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat.
No comments:
Post a Comment