

பிரபஞ்சம் முழுவதும் கோடான கோடி கிரகங்கள் இருக்கின்ற வேளையில் பூமியில் மாத்திரம்தான உயிரினங்கள் நிலைபேறு பெற்றுள்ளது என்ற ஐயம் உங்களுக்கு ஏற்படுமாயின் அந்த ஐயத்தை நிவர்த்திக்க உண்டான வழிமுறை வேற்றுக்கிரக உயிரினங்கள்.
அதாவது பூமி அல்லாத வேறு கிரகத்தில் உயிர்வாழும் ஒரு உயிரினம் மனிதனுக்கு சொந்தமான இந்த பூமிக்கு வருமாயின் அது ஒரு அந்நிய உயிரினம். அந்த அந்நிய உயிரினம் வேற்றுகிரக வாசிகள் என்று எளிமை வடிவில் அழைக்கின்றோம்.

இன்றுவரை இதற்கான ஆதாரங்கள் உள்ளனவா???? ஆம்

இல்லாத ஒன்றை தோற்றுவித்தல்....
அறிவியல் உலகில் பல்வேறு மாயைகள் நிறைந்து காணப்படும். இதற்கான காரணம் ஆய்வு தொக்கி நிக்கும் நிலையாகும். இதனை தாண்டி உலகில் ஒரு செயற்பாட்டை மூடி மறைக்கவும் தாங்கலை காத்துக்கொள்ளவும் பல்வேறு கற்பனை கதாப்பாத்திரங்கள் ஆதிக்கம் கூடிய மனித வர்க்கங்களுக்கு தேவைப்படாக வரலாற்று நெடுகிலும் தேவைப்பட்டு வந்துள்ளது. இவ்வாறான சந்தர்பங்களில் பாதிப்புற்ற மனிதர்களின் தேடல் ஆய்வு என்பன பல மாயைகளின் முகத்திரையை கிழிக்க வாய்பாகியது.

அவ்வாறான சூழ்நிலையின் போது சமகால சூழலில் பல்வேறு அத்துமீறல் செயற்பாடுகள் மற்றும் ஒரு நாட்டின்மீது பாதுகாப்பு உளவு நோக்கு மற்றும் வேறு சில காரணங்களுக்கு ஒரு மாயை கதாப்பாத்திரம் வல்லரசு நாடுகளுக்கு தேவைப்பட்டது. அதன் தாக்கம் தொழில்நுட்ப அறிவில் அறியமுடியாத ஒன்றை தோற்றுவித்தல். இவ்வாறு தோற்றுவிக்கப்பட்ட கதாப்பத்திரமே வேற்றுகிரகவாசிகள். ஆனாலும் விண்ணியல் அறிஞ்சர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தங்களின் ஆய்வை முடிவுக்கு கொண்டுவரும் நிலைப்படும் இல்லை.
இஸ்லாத்தின் பார்வையில்

"ஷைத்தான் அவர்கள் இருவரையும் அதிலிருந்து வழி தவறச் செய்தான்; அவர்கள் இருவரும் இருந்த(சொர்க்கத்)திலிருந்து வெளியேறுமாறு செய்தான்; இன்னும் நாம், “நீங்கள் (யாவரும் இங்கிருந்து) இறங்குங்கள்; உங்களில் சிலர் சிலருக்கு பகைவராக இருப்பீர்கள்; பூமியில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்குத் தங்குமிடமும் அனுபவிக்கும் பொருள்களும் உண்டு” என்று கூறினோம்" (அல்குர்ஆன் 2:36, 7:24)
“நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்” என்று கூறியபோது, அவர்கள் “(இறைவா!) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்கின்றோம் என்று கூறினார்கள்; அ(தற்கு இறை)வன் “நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்” (அல்குர்ஆன் 2:30)
(மனிதர்களே!) நிச்சயமாக நாம் உங்களை பூமியில் வசிக்கச் செய்தோம்; அதில் உங்களுக்கு வாழ்க்கை வசதிகளையும் ஆக்கித்தந்தோம் (அல்குர்ஆன் 70:10)
“பூமியில் மலக்குகளே வசித்து (இருந்து அதில்) அவர்களே நிம்மதியாக நடமாடிக் கொண்டிருந்தால், நிச்சயமாக நாம் அவர்களிடம் ஒரு மலக்கையே வானத்திலிருந்து (நம்) தூதராக இறக்கியிருப்போம்” (அல்குர்ஆன் 17:95)
“ஆண்டுகளின் எண்ணிக்கையில் நீங்கள் பூமியில் எவ்வளவு (காலம்) இருந்தீர்கள்?” (அல்குர்ஆன் 23:112)
மேற்படி எல்லா வசனங்களிலும் மொத்த பிரபஞ்சத்தில் பூமியை மாத்திரமே இறைவன் சுட்டிக்கட்டுகின்றான். இதற்கான காரணம் பூமியில் மாத்திரமே உயிரின வாழ்க்கை தொடர்கின்றது என்ற ஒரே காரணத்தினால் தான். இன்னும் சற்று ஆழமாக நோக்கும் போது மொத்த பிரபஞ்சத்தின் உருவாக்கம் என்பது மனிதனின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் இன்னும் மனிதனின் இயலாமையை அவனுக்கு விபரிக்கவுமே ஆகும். வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்திக்கவே.
அவ்வாறாயின் கண்டே பிடிக்கப்படாத கிரகங்களின் பயன்பாடுதான் என்ன???
சுமார் இரு நூற்றாண்டுகள் முன்னர் உள்ள அறிவியல் அறிவை கொண்டு நாம் எதனை சாத்தியம் இல்லை என்று கூறினோமோ அவை இன்று சாத்தியமாகி உள்ளபோது இன்னும் இரு நூற்றாண்டுகள் முன்னோக்கி சென்றால் எமக்கு எது தென்படவில்லையோ அவைகள் அன்றுள்ள சமூகத்திற்கு தென்பட வாய்ப்புள்ளது தானே????
“எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை" (அல்குர்ஆன் 3:191)
No comments:
Post a Comment