
இக்கருத்தை ஆதரிக்கும் வகையில் அன்று "ஹென்றி நான்காம்" ஷேக்ஸ்பியரின் நாடகத்தில் தேனீக்களின் நடத்தை பற்றி காட்சிப்படுத்தப்பட்டது. மேற்படி காட்சியில் சில தேனீக்கள் வீரர்களாகவும் அவர்களுக்கு ஒரு அரசர் இருப்பதாகவும் காட்டப்பட்டது.
ஷேக்ஸ்பியரின் காலத்து மக்கள் தொழிலாளித் தேனீக்கள் ஆண் தேனீக்கள் என்று நினைத்திருந்தா ர்கள். உண்மை அவ்வாறன்று. ஆனால் அல்-குர்ஆன் தேனீக்களுக்கு தெளிவான சொற்களைக் கொண்டு எமக்கு விபரிக்க முற்படுகின்றது.
“மேலும், (பாருங்கள்) உம் இறைவன் தேனீக்கு இவ்வாறு வஹி (உள்ளுணர்வை) அறிவித்தான்: மலை களிலும் மரங்களிலும் பந்தல்களில் படரும் கொடி களிலும் நீ கூடுகளைக் கட்டிக்கொள்! நீ ஒவ்வொரு புஷ்பத்திலிருந்தும் புசித்து, உனதிறைவன் உனக்கு அறிவித்த சீராக அமைத்துத்தந்த வழியில் சென்று கொண்டிரு!” (அல்-குர்ஆன் 16:68~69)
மேற்கூறப்பட்ட திருமறை குர்ஆன் வசனத்தில் வேலைக்கார தேனீக்களுக்கு கையாளப்படும் அரபு வார்த்தை “fபஷ்லுகி, குலி, bபுதுணிஹா” என்பதாகும். இவ்வார்த்தை “பெண் பாலினத்துக்கு” பயன்படுத்தும் வார்த்தையாகும். ஆண்பாலை குறிக்க “புதுனிஹூம்” என்று கூறப்படும். எனவே அல்-குர்ஆன் வேலைக்கார தேனீக்களை தெளிவாகவே பெண் தேனீகள் என்று நிரூபிக்கின்றது. இக்கருத்தையே சமகால உயிரியலும் ஆதரிக்கின்றது.


இவர்களின் கருத்துப்படி தேனீக்கள் தேனை கண்டறிய ஒரு வகையான நடனத்தின் (Bee dance) மூலமாக தான் கொண்டுவந்த செய்தியினை தனது சக கூட்ட வேலைக்கார தேனீக்களுக்கு மிகச்சிறப்பான முறையிலும் விபரிக்கின்றது என்றும் ஆய்வுக்குழு தெரிவித்தனர். தேனீ பயன்படுத்தும் இரு வகை நடனங்கள் (Round dance, Waggle dance) அவற்றிற்கு உதவியாக அமைகின்றது. இதனை கீழ்வரும் வசனப் பகுதி எமக்கு தெளிவுபடுத்துகின்றது.

இவர்கள் மேலும் தெரிவிக்கையில் தேனீக்கள் எவ்வளவுதான் தனது கூண்டைவிட்டு தொலைதூரம் சென்றாலும் வழிதவறாது மீண்டும் தனது குடியிருப்பு தொகுதியை அடைந்துவிடுகின்றது. இதுவும் எம்மை உண்மையில் வியக்கும் வகையில் அமைந்துள்ளது. நவீன அறிவியல் யுகத்தில் தேனீக்களின் மூலமாக அமைக்கப்படும் கூடுகளை சிறப்பித்துக்கூற காரணம் இருக்கின்றது. அதாவது தேனீக்கள் தான் சுரக்கும் ஒருவகை மெழுகின் மூலமாக தனது தேன் கூட்டை அமைக்கின்றது.

குறைந்த அளவு மெழுகை உபயோகிக்க.
வெற்றிடப் பகுதியை இழிவளவாக்கள். அதாவது பூரணமாக இடத்தை உபயோகித்தல்.
நிறையினை தாங்கும் வகையிலும் அதனது கூடு கூம்பக வடிவில் அமையப்பெற்றுள்ளது.
தேன் மருத்துவ குணமுடைய மிக அற்புதமான இயற்கை மருந்து வகைகளில் ஒன்றாகும். இதனது தனித்துவமான சில இயல்புகள் மனிதனின் உடல் ஆரோக்கியம் இன்னும் நோய்களை குணப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுகின்றது. முக்கியமாக நோய் எதிர்ப்பு, காயம் குணமாதல், ஒவ்வாமை நிவாரணி என்பனவற்றைக் குறிப்பிட முடியும்.

என்னுடைய சிறுபராயத்தில் தேன் பற்றிய தவறான எண்ணத்திலேயே நானும் இருந்தேன் என்று இன்றுவரை எனக்கு நன்றாகவே நினைவில் உள்ளது. உண்மையில் தேனீக்கள் உண்டு சமிபாடடைந்து அதன் வயிற்றில் இருந்து வெளிவரும் ஒருவகை திரவியமே தேன் என்று இன்றைய அறிவியல் தெரிவிக்கின்றது. ஆனால் அல்-குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே தேன் பற்றியதான இவ்வாறானதொரு முன் அறிவிப்பை வெளியிட்டது.
“இன்னும் அதனது வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கின்றது” (அல்-குர்ஆன் 16:69)
No comments:
Post a Comment