
சுவாரசியமான நடத்தைகளைக் காண்பிக்கும் உயிரினங்களில் எறும்புகள் முக்கியமான அங்கத்தை வகிக்கின்றது என்று அண்மைக்கால நவீன உயிரியல் பற்றிய ஆய்வுகள் எமக்கு கற்றுத்தருகின்றது.
அதாவது எறும்புகள் மிகவும் புத்திசாலியான மனிதனையொத்த நடத்தைகளை காண்பிக்கின்றன.
மிகச்சிறந்த சமூக வாழ்வு.
தலைமைத்துவம் மற்றும் ஒற்றுமைப் பண்பு.
சுறுசுறுப்பும் வினைத்திறன்மிக்க வேலையும்.
உணவுக் களஞ்சியம், சேகரித்த சேமிப்பு உணவு களை பாதுகாக்கும் உத்திகள்.
தொடர்பாடல் மற்றும் செய்திப் பரிமாற்றம்.
எதிரிகளிடமிருந்து தம்மை பாதுகாக்கும் படை அமைப்பு.
சந்தை முறை, இறந்த உடல்களை புதைக்கும் வழிமுறை, குடியிருப்பு தொகுதி பராமரிப்பு என்ற வழிமுறைகள்.
இவ்வாறான மிகச்சிறந்த மானிட பண்புகளையும் சமூக கட்டமைப்பையும் கொண்டு காணப்படும் சிறு வகை பூச்சி இனமே எறும்புகள். ஆனால் ஐந்து அறிவு ஜீவராசிகளின் பண்புகளில் இருந்து எறும்புகளின் தனித்துவமான இயல்புகளை குர்ஆன் மிகச்சிறப்பான முறையில் விபரிக்கின்றது.
“இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் பெண் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி:) “எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; (இல்லை) ஸுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதி ருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்) “என்று கூறிற்று” (அல்-குர்ஆன் 27:18)
மேற்கூறப்பட்ட வசனத்தில் எமக்கு எறும்புகள் பேசும் என்பதனையும் அவை தலைமைத்துவத்துக்கு கட்டுப்பட்டு ஒழுகுவதுடன் ஒன்றினைந்து செயற்படும் என்பதனையும் விளக்குகின்றது. சுமார் 100 மில்லியன் ஆண்டுகள் வரலாற்றை கொண்ட உயிரினமான இவை அண்ணளவாக 22000 இனங்களை கொண்டு காணப்படுகின்றதாக உலக உயிரியல் ஆய்வு நிறுவங்கள் தெரிவிக்கிறது. மேலும் இவை முள்ளந்தண்டிலி கணத்திள் ஆத்துரோபோட (Arthropods) வகுப்பை சார்ந்தவையாகும்.

ஐரோப்பாவின் டென்மார்க் பல்கலைக்கழக ரீகன்ஸ்பேர்க்கில் இல் PhD மாணவர்கள் “சபைன் ஃப்ரோஹ்ச்சமர்” தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி குழு மிகவும் அற்புதமான கண்டுபிடிப்பு ஒன்றை உலகிற்கு வெளியிட்டது. அதாவது பைரேட் எறும்பு (Pirate Ant) என்னும் ஒருவகை கண்ணாடி உடலமைப்பை கொண்டதான எறும்பு வகையினை இவர்கள் கண்டறிந்தார்.
மேலும் அவுஸ்திரேலியா விஞ்ஞானிகள் சிலர் மேற்கொண்ட ஆய்வின் இறுதியில் எறும்புகளின் உடலை ஒருவகை நொருங்கக்கூடியதான பதார்த்தம் ஆக்குவதாகவும்; இப்பதார்த்தம் கைற்றின் (Chitin) என்றழைக்கப்படும் காபோவைதரேற்று பல்பகுதிகம் என்றும் இவர்கள் தெரிவித்தனர். பொதுவாக கைற்றின் வண்டுகள், பூச்சி (Insect) இனங்களின் புறவன்கூட்டை ஆக்கும் பதார்த்தமாகும். இது நீரில் நனையாது, சிறந்த வெப்பக் காவலி மற்றும் நிறை குறைந்த உறுதித்தன்மையான பதார்த்தமாகும்.
பொதுவாக கைற்றின் ஆனது கண்ணாடியின் தன்மையினை ஒத்ததாக இருக்கும். இதனால் தான் அல்-குர்ஆன் எறும்புகளை பற்றிப் பேசும் வசனத்தில் இதுகுறித்து சிலேடையை கையாள்கின்றது. எறும்பு கண்ணாடியினை போன்று நொருங்கக் கூடிய தன்மை கொண்டது என்று மறைமுகமாக பேசுகின்றது.
அல்-குர்ஆன் பயன்படுத்தும் அரபு வார்த்தை “யெஹ்திமன்னகும்” என்பதாகும். இச்சொல் ஆனது நொருங்குதல் என்ற அர்த்தத்தில் பயன்படும். எனவே குர்ஆன் பேசும் மொழிநடை உண்மையில் எம்மை வியப்படையச் செய்கின்றது.
குறிப்பு – சில ஆங்கிலத்தில் வெளிவந்த கார்ட்டூன் திரைப்படங்கள் எறும்புகளின் வாழ்க்கை நடைமுறை மற்றும் அவற்றின் இயல்புகளை பிரதிபலிக்கின்றது. உதாரணமாக “Antz, A bug’s life, Minuscule, Ant Bully” மேலும் அல்-குர்ஆன் பயன்படுத்தும் அடுத்த வார்த்தை “வாதீ” என்பதாகும். இதன் கருத்தானது பள்ளத்தாக்கு (Conyon)/ கணவாய் (Ravine)/ மலை இடுக்கு (Gully)/ இடுக்கு வழி (Gorge)/ ஓடை (Rivulet) என்பதாகும். பேராசிரியர் லூயிஸ் ஃபோர்ஜி தலைமையில் ஆராய்ச்சியாளர்கள் குழு பூமியை அகழும் ஆய்வினை மேற்கொண்டபோது பிரேசில் நாட்டில் எறும்புகளின் நகரம் என்று வர்ணிக்கப்படும் எறும்பு நகரமொன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதனையே உலகில் இருந்த மிகப்பெரும் எறும்புகளின் நகரம் என்று வரலாற்று ஆவணம் தெரிவிக்கின்றது.

அதில் எறும்புகளுக்கான சாலைகள், தோட்டங்கள் என எல்லாம் உள்ளன. சீனாவின் பெருஞ்சுவரைப் போல மிகப்பெரும் அற்புதமாக இது காட்சியளிக்கிறது. பல மில்லியன் எறும்புகள் சேர்ந்து இச்சாதனையைப் புரிந்துள்ளன. எறும்புக்கும், தன் எடையைப்போல் 50 மடங்கு எடையைச் சுமக்கும் ஆற்றல் கொண்டவை. அதைத் தூக்கிக்கொண்டு 10 Km தூரம் நடக்கவும் இதனால் முடியும். இதைத் தொடர்ச்சியாகத் திரும்பத் திரும்பச் செய்யும் திறன் படைத்தவை.
அத்துடன் இவ்வெரும்புகள் வழிதவறிவிடாது தனது கூண்டை அடையும் திறன் கொண்டவை என்றும் விஞ்ஞானம் தெரிவிக்கின்றது. உதாரணமாக டியுனீசியா நாட்டின் மத்தியதரைக்கடல் பகுதியில்; வாழும் ஒருவகை கறுப்பு எறும்புகள் பாலைவனத்தில் வாழ்ந்து வரும் ஓர் எறும்பினமாகும். எறும்புகள் தான் கூண்டிலிருந்து உணவுக்காக சுமார் 200m பரப்பில் சுற்றித்திரிந்து உணவை அடைந்தவுடன் நேரடியாக தன் கூண்டிற்கு பயணிக்கும் ஆற்றல் கொண்டது. ஒரு சிறிய வகை உயிரினத்தினால் இது எவ்வாறு சாத்தி யமாகின்றது என்று சிந்திக்கையில் உண்மையில் எம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது.
காரணம் இவைகளை மனிதனுடன் ஒப்பிடும் போது இவற்றின் பயணம் சுமார் 40km தூரமாகும். பாலைவனத்தில் திசை அறியும் எதுவித சாதனமும் அற்ற ஒரு நிலையினை கருதி எறும்புகளின் திறனை ஒப்பிட்டு பார்க்க.
மேலும் பாலைவனத்தின் வெப்பநிலையினை தாங்கி உயிர்வாழும் சக்தியும் இவற்றுக்கு உண்டு என்றும் தற்போதைய நவீன உயிரியல் விஞ்ஞானம் குறிப்பிட்டுக் காட்டுகின்றது.
மிக அண்மித்த காலத்து நவீன அறிவியல் கண்டுபிடிப்பு பற்றி யார் மிக தெளிவாக பதினான்கு நூற்றாண்டுக்கு முன்னர் விளக்கி கூறியிருக்க முடியும் என்று ஒருகணம் நாம் சிந்திக்க வேண்டாமா?
“வானங்களிலுள்ளவை, பூமியிலுள்ளவைகள் அனைத்தையும் தன் அருளினால் அவன் உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; அதில் சிந்திக்கும் சமூகத்தாருக்கு நிச்சயமாகப் அத்தாட்சிகள் உள்ளன” (அல்-குர்ஆன் 45:13)
No comments:
Post a Comment