
இன்சோம்னியா நோயின் தாக்கம் காரணமாக மல்டிபிள் பேர்சினாளிட்டி டிஸ்ஓடர் (multiple personality disorder) என்ற தோற்றநிலை காரணமாக நல்ல மனசாட்சி மற்றும் கெட்ட மனசாட்சி என்ற ஒரு வெவ்வேறு நேர் எதிர் கதாப்பத்திரங்களை தனக்கு மட்டும் காட்சிதரும் வகையில் செயற்பாடுகள் நடைபெறுவது உண்மையில் ஒரு சுவாரசிய தன்மையை உண்டாக்குகின்றது. இவ்வாறனதொரு எண்ணக்கரு மனிதர்களின் மனங்களிலும் தாரளமாக மலிந்து காணப்படுகின்றது.
தூக்கம்

இவ்வாறானதொரு செயற்பாட்டைத்தான் மனித உடலும் எமது தூக்கத்தின் பொது மேற்கொள்கிறது. நாம் தூங்கும் போது எமது உடலின் இயக்கம் மந்தமடையும். இதனால் ஒரு ஒய்வு பெற்ற நிலையை உடல் அடைகிறது. அதனைத்தொடர்ந்து மூளையின் செயற்பாடுகள் மூலமாக நாம் சாதாரண இயக்கத்தின் போது புலன் அங்கங்களினால் உணர்ந்த உணர்வுகள் மற்றும் எண்ண அலைகள் ஒழுங்கு படுத்தப்படுதல் மற்றும் சேமிக்கப்படுதல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ளும். குறிப்பாக இறந்த உடல் கூறுகள் மற்றும் அங்கங்களின் செயற்பாடுகள் மீள் கட்டமைப்பு மேற்கொள்ளுதல், கல வளர்ச்சி மற்றும் விருத்தி போன்றவையும் நிகழும்.
:quality(75)/curiosity-data.s3.amazonaws.com/images/memes/image/8775484f-6a8b-4d8e-cdac-2b84476863c2.png)
மனிதர்களை போல விலங்குகளுக்கும் தூக்கம் அவசியம். ஆனால் ஒவ்வொரு உயிரங்கிகளுக்கும் தூக்கத்தின் அளவு மாறுபடும். வௌவால்கள் நாளொன்றிற்கு 19 மணித்தியாலங்களும், தேவாங்கு 10 மணித்தியாலங்களும், கோவேறு கழுதை 4 மணித்தியாலங்களும் உறங்கும் அதேவேளை மிக குறைவான அளவு தூங்கும் விலங்காக யானை பதிவாகியுள்ளது. இது ஒரு நாளைக்கு இரண்டு மணித்தியாலங்களே உறங்குகின்றது. இதுபோல டொல்பின் ஆனது இரண்டு தடவை உறங்கும். அதாவது தனது மூளையின் ஒரு பகுதியை நான்கு மணித்தியாலங்கள் உறங்கச்செய்யும் அதேவேளை மற்றைய பகுதியை இயக்கத்தில் வைத்திருக்கும்.
தூக்கம் எவ்வாறு உண்டாகின்றது

தூக்கத்தின் போது உடலிற்கு என்ன நிகழும்
(மேலும் சுருக்கமாக வசிக்க http://www.mutur-jmi.com/2018/04/inception.html)

தூக்கம் எவ்வாறு அடிப்படை ஆகின்றதோ அதுபோல அதன் அளவு கூடினால் மிக ஆபத்தானதாக அமையவும் வாய்ப்புண்டு. சோர்வு, உடலில் உண்டாக்கும் அநேக நோய்கள், சிந்தனை திறன் நடைமுறை இயக்கம் என்பவற்றில் அளவு கடந்த தூக்கம் பெரும் ஒரு தாக்கத்தை உண்டுபண்ணும்.
"இரவிலும் பகலிலும், உங்களுடைய (ஓய்வும்) உறக்கமும்; அவன் அருளிலிருந்து நீங்கள் தேடுவதும் அவனுடைய அத்தாட்சிகளினின்றும் உள்ளன" (அல்குர்ஆன் 30:23)
"நீங்கள் அதில் ஓய்வு பெறும் பொருட்டு உங்களுக்கு இரவைக் கொண்டு வரக்கூடியவன் அல்லாஹ்வையன்றி நாயன் உண்டா என்பதை நீங்கள் (சிந்தித்துப்) பார்த்தீர்களா?" (அல்குர்ஆன் 28:72)
தேடல் வலைதளங்கள்
https://www.tuck.com/thermoregulation/
https://www.theatlantic.com/science/archive/2018/01/the-mystery-of-sleep-pressure/549473/
https://www.independent.co.uk/life-style/health-and-families/features/what-happens-to-your-body-when-you-sleep-a6675861.html
https://sleepfoundation.org/how-sleep-works/what-happens-when-you-sleep
No comments:
Post a Comment