
மனிதனுக்கு மாத்திரம் வர்ணிக்கப்படும் சிற்சில காரணிகளில்
மனசு / உள்ளம் பற்றிய எண்ணக்கரு சற்று அலாதியா மாயை சிந்தனையும் பெரும்பாலான மானிட அறிவில் பதித்துள்ளது.
எல்லோரும் கூறுகின்றார்கள்தானே அந்த மனசு எங்கு உள்ளது? எப்படி உள்ளது? என்று எப்போதாவது நீங்கள் சிந்தித்து பார்த்ததுண்டா???
மனசு/ உள்ளம் என்பது எங்கே உள்ளது???
நீங்கள் இந்த கேள்வியை கேட்டால் பெரும்பாலான நபர்கள் தவறான பதிலை அளிப்பார்கள். பெரும்பாலான நபர்கள் இதயம் என்பதே மனசு என்று என்று ஊர்ஜிதமாக கூறுவார்கள். காரணம் காதல்/அன்பு/பாசம் என்பதற்கு அடையாளமாக இதயம் என்ற ஒன்றை இலட்சினையாக குறிப்பிட்டு எமது சிந்தையில் ஒரு தவறான எண்ணத்தை விதைத்துள்ளார்கள்.
அவ்வாறாயின் இதயத்தின் தொழிற்பாடுதான் என்ன?
உண்மையில் இதயம் என்பது குருதியை பாம்பும் அடிப்படை வேலையை மாத்திரமே செய்கின்றது.
அவ்வாறு இருந்தும் நாம் கவலை/கஷ்டம்/ சஞ்சலம் ஆக இருக்கும் வேளையில் நெஞ்சில் மீது அல்லது இதயம் சார்ந்த பகுதியில் சுமையை உணரக்கூடியதாக உள்ளது. எது ஏன் என்று தெரியமா???
சரி பல வினாக்கள் உண்டு அவை பற்றி பாப்போம்.
அறிவியல் பார்வையில்

மூளை என்பது உயிரியல் தொடரில் உயர்ந்த இனமான மனிதனில் மிகவும் விருத்தி பெற்று இருப்பதன் தாக்கம் தர்க்க ரீதியாகவும் செய்தி சேமிப்பு ரீதியாகவும் ஒருபடி ஏனைய உயிரியில் இருந்து வேறுபடுகின்றான். இதனால் மூளையின் செயற்பாடுகள் பகுக்கப்பட்டு காணப்படுவது சிறப்பம்சமாகும். மனித உடலில் சிந்திக்கும் செயற்பாட்டை மூளை மாத்திரமே செயல்படும்.
மூளையானது இரு அரை கோலங்களை கொண்டுள்ளது. அவற்றில் மூளையும், மூளி, முன்னான் என்ற பகுதிகளும் உள்ளடங்கும். இருந்தபோதும் மூளையினை உளவியல் ரீதியாக இரு பெரும் பகுதிகளாக பிரிக்க முடியும். ஒன்று முன் மூளை மற்றையது பின்மூளை. இவற்றில் முன்மூளையானது தர்கரீதியான சிந்தனையையும் பின்மூளையானது நினைவுகள் சேமிப்பையும் மேற்கொள்ளும்.

இங்கே நினைவுகள் சேமிப்பை மேற்கொள்ளும் பகுதியே மனது அல்லது உள்ளம் என்று கூறுவோம். ஏன் அதனை அவ்வாறு அழைக்க வேண்டும். அடிப்படையில் மனிதனுக்கு என்று சில இயல்புகள் உணர்வுகளினுள் கட்டுபடுத்தப்பட்டு காணப்படும். அவைகளை எளியவடிவில் கூறுவதாயின் தேவைகள் என்று கூறலாம்.
எது தேவை தேவையில்லை என்பதை தர்கரீதியாக சிந்தித்து முடிவு காணும் செயலை மூளை செய்கின்றது. ஆனால் தேவை எது என்பதை இனங்காணும் வேலையை மனது செய்கின்றது. மனது செய்வதற்கு அதன் தகுதியை நாம் எமது இறந்தகால நிகழ்வுகளில் கற்ற அறிவு, பெற்றுக்கொண்ட அனுபவ அறிவு மற்றும் நினைவுகளின் மூலமாக உணர்த்தக்கூடியதாக இருக்கும். இதனை தான் நாம் ஆறாம் அறிவு என்றும் கூறுவோம்.
உதாரணமாக ஒரு செயலை செய்ய முன்னர் எமக்கு உள்ளே இரண்டு நபர்கள் வழி நடத்த முற்படுவார்கள். அதில் ஒருவர் நாம் எமது நினைவகத்தில் வைத்த தொகுப்பு. மற்றையவர் சூழ்நிலை, நேரம், இடம் அறிந்து பகுப்பாயும் நபர். ஒட்டுமொத்தத்தில் நாம் ஆராயும் போது மனது என்பது மூளை என்று புலனாகின்றது.
அல்-குர்ஆனிய பார்வையில்

அல்குர்ஆனிய வார்த்தைகள் நிறுவப்பட்ட அறிவியலில் உண்மைபடுத்தப்பட்டுள்ள வரலாறே பதிவாகியுள்ளது. இருந்தபோதும் அறிவியல் என்பது முழுமை அடையவில்லை. அது அடைவதும் இல்லை. ஆனால் எனது அளவுகோல் அல்குர்ஆன் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
சரி தலைப்பிற்கு வருவோம்....
உள்ளம் / மனசு பற்றி அல்குர்ஆன் அதிக இடங்களில் பேசுகின்றது. இவற்றில் பெரும்பாலான இடங்களில்
"ஸுதூர்" என்ற சொல்லையும்
"கல்ப்" என்ற சொல்லையும் கையாள்கிறது. ஸுதூர் என்பது ஸத்ர் என்ற சொல்லில் இருந்து பிறந்ததாகும்.
ஸத்ர் என்றால் நெஞ்சு என்று நேரடி பொருள் கொள்ளப்படும். இதேபோல்
கல்ப் என்பது
இதயம் என்ற நேரடி பொருளிலும்
மூளை/ சிந்திக்கும் திறன் என்ற மறைமுக பொருளிலும் வழக்கில் இருந்து வருகின்றது.
இதற்கு ஆதாரமாக அல்குர்ஆனிய வசனங்கள் இவ்வாறு பேசுகிறது.
"அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன - ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் சிந்திக்க (நல்லுணர்வு பெற)மாட்டார்கள்" (அல்குர்ஆன் 7:179)
"உங்கள் உள்ளங்களில் இருப்பதை நீங்கள் வெளிப்படுத்தினாலும், அல்லது அதை நீங்கள் மறைத்தாலும், அல்லாஹ் அதைப் பற்றி உங்களைக் கணக்கு கேட்பான்"(அல்குர்ஆன் 2:284)
"கல்ப் என்ற சொல் அல்குர்ஆனில் 65 முறை கையாளப்பட்டுள்ளது. இதுபோல ஸத்ர் என்ற சொல்லானது ஒருமை இருமை வடிவில் 41 முறை இடம்பெற்றுள்ளது"
உள்ளம் என்பது அல்குர்ஆன் பார்வையில் இதயம் என்று பொருள்படுவதாக உங்களுக்கு தோன்றலாம். சரி அதற்கு முன்னர் ஒரு மருத்துவ ஆய்வைப் பற்றி சுருக்கமாக நோக்குவோம்.
இதய சத்திர சிகிச்சை வல்லுனரான
Dr Paul Persil என்பவர் ஒரு ஆய்வை மேற்கொண்டு ஒரு முடிவை முன்வைக்கின்றார். அதாவது அடிப்படை
நினைவகக் கலங்கள் (The Memory of Cells) இதயத்தில் இருப்பதாக இதயமாற்று சிகிச்சை மேற்கொண்ட முடிவுகளின் அடிப்படையில் முன்வைக்கின்றார். இவ்வறிவியல் உண்மையை உலகம் எந்த அளவிற்கு ஏற்றுக்கொண்டது என்பதில் சற்று குழப்பங்கள் இன்றளவும் நிலவுகின்றது. (மேலும் வாசிக்க
http://www.quran-m.com/firas/en1/index.php/human/177-the-memory-of-cells.html)
இஸ்லாமிய அறிஞர்கள் இடையில் உள்ளம் என்பதில் கருத்து முரண்பாடுகள் நிலவவே செய்கின்றது. இதற்குஅடிப்படை காரணம் புரிதல் உண்டான சிக்கல்கள் என்று என்னால் கூறமுடியும். அல்குர்ஆனிய சொல்லாட்சி முறைமையில் சிந்தனை தேடல் கிடைக்கப்பெற்ற முடிவுகள் அடிப்படையில் நேரடி பொருள் மற்றும் மறைமுக பொருள் என்பதில் கருத்து முரண்பாடுகள் நிலவுகின்றது.
முடிவு

உள்ளம் பற்றிய முடிவு ஊர்ஜிதமாக நவீன அறிவியலால் இதுவரை முன்வைக்கப்படவில்லை. எல்லாமே ஒரு கருதுகோளாகவே முன்வைக்கின்றார்கள். அதாவது இதுவரை அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் ஒரு எழுமாற்று முடிவை சமர்பிக்கின்றார்கள்.
"அல்லாஹ் தன்னுடைய வசனங்களை உங்களுக்கு விவரிக்கின்றான்; அல்லாஹ் (யாவற்றையும்) அறிந்தவன்; ஞானம் மிக்கவன்" (அல்குர்ஆன் 24:18,59, )
No comments:
Post a Comment