
மேற்படி வசனம் அன்றைய சூழ்நிலையில் முஸ்லிம்களை அழிக்க முயன்ற கூட்டத்தை எதிர்க்க அல்குர்ஆனில் இறக்கப்பட்டது. அன்று இறக்கப்பட்ட இவ்வசனம் அன்றே காலாவதியாகி விட்டதா என்றால் நிச்சயமாக் இல்லை என்று கூறவேண்டும். காரணம் அல்குர்ஆன் எல்லா காலங்களிற்கும் அதன் வெளிப்பாட்டை வெளிப்படுத்தும் என்பதனால்.....
அவ்வாறாயின் தற்காலங்களில் இவ்வசனத்தை நாம் எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும்???
சமகாலங்களில் முஸ்லிம்களிற்கு எதிராக நடக்கும் உள்ளக வெளியக போராட்டங்கள் அனைத்தையும் சற்று ஒன்றினைத்து அலசுவோமாயின் அவைகள் எல்லாவற்றினதும் பின்னணி இருக்கும் காரணி கல்வி என்ற ஒன்றாக அமையும்.
மிக அண்மைகால முஸ்லிம் சமூகம் கல்வியல் ரீதியாக மிகப்பெரும் வறட்சியை அனுபவிக்கின்றது. இன்னும் கலவியல் ரீதியாக முன்னேற்றம் கண்டுள்ளமையும் உலகளாவிய தரவுகள் சான்று பயக்கின்றது. இதற்கான காரணம் என்ன என்று எப்போதாவது சிந்தித்ததுண்டா என்றால் விடை ஆம் என்று கிடைக்கப்பெறுகிறது. ஆனாலும் அந்த ஆம் என்பதன் சதவீதம் என்ன என்று பார்த்தால்..... ?

அந்தவகையில் வீட்டு சூழல், பாடசாலை, பள்ளிவாயல் இந்த மூன்று இடங்களை அடிப்படையாக்கொண்டு எமது வளரும் பயிர்களுக்கான உரத்தையும், ஜலத்தையும் முறையாக பண்படுத்தி பாச்சப்படுத்தவேண்டும். பெரும்பல பொழுதுகள் ஒரு குழந்தை பெற்றோர் பராமரிப்பினை விட்டு துரதிஷ்டவசமாக தூரமாகவே இருக்கின்றது. இந்நிலைமை மாற்றியமைக்க முடியாமலே இருக்கின்றது. காரணம் எமது கல்வி செயன்முறையும் செயற்பாட்டு முறைமையும்.
பள்ளிவாசல்கள் ஊடாக எமது தலைமுறைக்கு சிறந்த கல்வி ஊடகத்தை வழங்கவேண்டும். இதற்கு பள்ளிவாயல்கள் மீள் ஒழுங்குபடுத்தப்படுவதுடன் அவைகள் மறுமலர்ச்சி கொண்ட புத்துயிர்க்கும் தளமகாவும் தளிர்விட எத்தனிக்க வேண்டும்.
இதற்காக ஆய்வு நூல்கள், சட்டவாக்க நூல்கள், அல்குர்ஆன் உடனான அறிவியல் நூல்களை கொண்டதான நூலக முறைமை பள்ளிவாசல்களில் அறிமுகம் செய்யப்படவேண்டும். அத்துடன் கணணி, போட்டோகொப்பு இயந்திரம், புரஜெக்டர் போன்ற நவீனத்துவ சாதனங்களை உள்ளடக்கிய தொகுதியையும் தொடர்பு படுத்தவேண்டும்.

எமது இஸ்லாமிய கற்கை சூழல்களை கொண்ட மதரசாக்கள் கற்றல் வழிமுறை, கற்றல் ஊடகம், கற்றல் மூலங்கள் என்பன காலத்திற்கும் களத்திற்கும் ஏற்றால்போல் மீள்பரிசீலனை செய்யப்படுவது மாத்திரமன்றி அவற்றை அவசரமாக நடைமுறைப்படுத்த வேண்டிய சூழ்நிலையில் ஆளாகியுள்ளோம் இன்றைய வளரும் மார்க்க அறிஞ்சர்களுக்கான கல்வி வழிகாட்டும் சமூகம்.
மொழி ரீதியான பெரும் ஒரு ஊனத்தை உலகம் முழுதும் அனுபவிக்கும் சமூகங்களில் முதன்மை பெறுவது இஸ்லாமிய சமூகமே. இதற்கான காரணம் நாம் பல்லினத்துவ சமூகங்களிடையே கொண்டுள்ள பிணைப்பும் பிணக்கும்.... இந்நிலைமை காரணமாக பிரச்சினையை தீர்ப்பதற்கான தலைமைகள் தொடக்கம் தனிமனிதன் வரை ஒருவகை அசமந்த கலாச்சாரம் நிலவுகின்றது...

ஒட்டுமொத்தமாக எமது எதிர்காலத்தில் திட்டமிட்ட கழுத்தறுப்பு மட்டுமன்றி கருவறுப்புக்கள் கூட நடைபெறும் என்பதில் ஐயப்பாடில்லை... ஆனாலும் இவற்றை வெகுவாக விமர்சனம் செய்வதில் மட்டும் குறிபார்த்து காத்திரிக்கின்றது எம்மை சூழவுள்ள பிணம் திண்ணிக் கழுகுகளும்.... புதர் குள்ளநரிக் கூட்டங்களும்....
No comments:
Post a Comment