இலங்கை_திருநாட்டின்_முஸ்லிம்களின்_பங்களிப்பு
ශ්රී ලංකාවේ නිදහස් සටන වෙනුවෙන් උරදුන් මුස්ලිම් වීරවරුන්....
ජාතියේ උන්නෙතිය හා මව් බිමේ උරුමය සදහා තම ජීවිතය පුදකල , සටනේ අංගවිකල වී ජීවිතකාලය පුරාම, රට වෙනුවෙන් කැපකිරීම රැසක් කල එම වීරවරන්.
අද අප මතකයෙන් ඈත්ව ගොස්ය. ඒවගේම, ජාතිවාදය, ආගම්වාදය ගැන කතාකරමින් සිටින සමහරුන්ටද මෙම මුස්ලිම් වීරයන් ගෙන අමතක ඇත. එම මුස්ලිම්, වීරවරැන්ගේ මතකය අවදි කරමින් රටට ජාතියට, ආදරය කරන පිරිසක් මවි බිමේ අභිවෘද්ධියට සේවය කරන පිරිසක් ඇති කිරීම කාලීන අවශ්යතාවයකි.
மிக அண்மித்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதிகள் மட்டுமன்றி ஏனைய சமூகங்களாலும் சொல்வீச்சுக்கள் கல்வீச்சுக்களாக மாறிவரும் நிலையில் தொடர்ந்தும் அமைதி காப்பது அவர்களின் வீண் விவாதங்களை உண்மை படுத்துவதாக அமைந்துவிடும்.

அந்தவகையில் முஸ்லிம்கள் அன்று தொடக்கம் இன்றுவரை இந்த நாட்டின் பிரஜை என்ற வகையில் சுதந்திர போராட்ட களத்தில் ஈடுபட்டு இந்த நாட்டின் இறைமையை பாதுகாப்பதில் பங்களிப்பு செய்துள்ளார்கள். இதன்போது உடமை இழப்பு, அங்கவீன இழப்பு என்பவற்றுக்கு மேலாக உயிர் இழப்பைக் கூட இந்த நாட்டிற்காக தியாகம் செய்துள்ளமை நினைவூட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.
இருந்தபோதும் முஸ்லிம் சமூகத்தின் ஆவணப்பாதுகாப்பில் உள்ள அசமந்த போக்கு இந்த நாட்டின் முஸ்லிம் சுதந்திர போராட்ட மாவீரர்களை மறக்கடிக்கச் செய்துவிட்டது. ஆனாலும் இவ்வாறு தொடர்ந்து நிலைபெற அடுத்த தலைமுறை இடமளித்தல் கூடாது.
அவ்வகையில் எனது ஊரை (மூதூர்) அடிப்படையகக் கொண்டு செய்யப்பட்டு இந்த ஆவண சேகரிப்பு முயற்சியே இது. ஆனால் இம்முயற்சி நாடு பூராகவும் தகவல் சேகரிக்கப்பட்டு ஆவனச்சுவடாக நூல் உருவாக்கம் பெறவேண்டிய தேவைப்பாடு இன்று சொற்ப அளவில் உணரப்பட்டாலும் எதிர்காலத்தில் பாரிய அளவில் தேவைப்பாடு உணரப்படும் என்பதை சமகால சூழலை ஒப்பாய்வு செய்கையில் புரிந்துகொள்ள முடிகின்றது.
எனவே மேற்படி விடயதானம் குறித்து பொறுப்புவாய்ந்த தலைமைகள் கவனம் செலுத்துமாறு இந்த நாட்டின் பிரஜையாக உங்களை விநயமாக வேண்டிக்கொள்கின்றேன்.
முகநூல் பதிவில் கிடைக்கப்பெற்ற பின்னூட்டல்கள் சில...
இவ்வாறான தேடல்கள் தான் எமது சமூகத்தின் பங்களிப்பானது நாட்டிற்கு எவ்வளவு முக்கியத்துவம் அளித்திருக்கின்றது என்பதை தெளிவுபடுத்தக் கூடியதாக அமைகின்றன
அந்த வகையில் நாட்டின் நாற்திசைகளிலிருந்தும் எமது இனத்தவர்கள் நாட்டின் சுதந்திரத்திற்காகவும் , நாட்டைத் துண்டாட போராட்டம் செய்த எதிரிகளிடமிருந்து கண்துஞ்சாது உயிரைப் பணயம் வைத்து போராட்டம் செய்த இலங்கை பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்படுகின்ற அனைத்து பாதுகாப்பு போராட்ட வீரர்களையும் இவ்விடத்தில் கௌரவ படுத்துவதில் பெருமிதம் அடைகிறேன்
இவ்வாறு அவர்களின் பணிகளில் உயிர் தியாகம் செய்த மாவீரர்களுக்கு துஆ செய்தவனாகவும் விழித்துக் கொள்கிறேன் இதே சந்தர்ப்பத்தில் எனது நண்பனும், பள்ளிக்கூட ஒரே வகுப்பறைத் தோழனுமாகிய ஜெயினூலாப்தீன் ஜவாஹீர் ( றக்கீப் நானாவின் சகோதரர் ) 1997 இல் தோப்பூர் வைத்தியசாலைக்கு அருகில் அமைந்திருந்த பாதுகாப்பு காவலரண் விடுதலைப்புலிகளால் முற்றுகையிடப்பட்ட போது புலிகளின் சூட்டுக்குப் பலியாகி உயிர்நீத்தார்
இன்னாலில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிஊன்
இவ்வாறு இன்னும் பல நண்பர்கள், சகோதரர்கள், சிரேஷ்ட, கனிஷ்ட்ட உத்தியோகத்தர்கள் உயிர் தியாகம் செய்தும், அங்கவீனர்களாகியும் மாவீரர்களாகவும், வீரர்களாகவும் எம் சமூகத்தில் இருக்கின்றார்கள் இராணுவ நடவடிக்கை , யுத்த தந்திரோபாயம் என்பது வெளியில் கூறமுடியாத விடயமாகும் யுத்த முனையென்று வந்தால் பல விடயங்களுக்கு முகம் கொடுத்துத்தான் ஆக வேண்டும் அந்த விடயங்களை ஓரமாக வைத்து விட்டு அன்று தொடக்கம் இன்று வரையும் முஸ்லிம்களின் பங்களிப்பானதும் இந்த நாட்டிற்கு பாரிய செல்வாக்கு செலுத்தியுள்ளன செலுத்திக்கொண்டே வருகின்றன கடந்த கால யுத்தங்களை எடுத்து நோக்கினால் இருதரப்புகளிலும் எமது முஸ்லிம் இளைஞர்கள் பல தரப்பட்ட சேதங்களையும், சேதாரங்களையும் உடையவர்களாகவும், உயிர் நீத்தவர்களாகவும் தான் வரலாறு காணப்படுகின்றன என்றால் அந்த இரு தரப்பினர்களும் வஞ்சகத்தனமாக எம்மை ஓரம்கட்டுவதை ஒரு போதும் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது
இருதரப்பினர்களும் எம்சமூகத்திற்கு நன்றிக்கடனுள்ளவர்களாக மாறவேண்டும் அதுதான் நியாயம் இது நடைமுறையில் சாத்தியப்படாத விடயமாகுமா? என்ற வினாவும் எழுகின்றன. மாற்றப்பட வேண்டும் அதற்காக நாம் உழைக்க வேண்டும் " தாய்நாட்டின் மீதான முஸ்லிம்களின் பற்றும் பங்களிப்பும் என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்"
சுதந்திர இலங்கையின் முதல் இரானுவத் தலபதி யார் தெரியுமா ? அவர் ஒரு முஸ்லிம். மர்ஹூம் LT. கேர்ணல் புஹாரி ஸாலி அவர்கள் 1924.03.18. ம் திகதி கண்டியில் பிறந்தார் . இரானுவத்தின் சிங்ஹ படையணியில் சேர்ந்து பல சாதனைகள் செய்து பல விருதுகளுக்கு உரிமை கூறியவர் . இவர் லெய்லா தலீல் என்ற பெண்னை ( மலாய்)மணமுடித்தார். இவர்கள் டிலானோ,ஷானாஸ்,ஸீனா, ஆகிய மூன்று பிள்ளைகளைப்பெற்றெடுத்தார்கள் . நம் நாட்டுக்கும் சமூகத்துக்கும் நட்பெயரைத் தேடிக் கொடுத்து இருதியாக 2012 ஆகஸட் 03 ம் திகதி தனது 88 ஆவது வயதில் இறையடி சேர்ந்தார்.
உண்மைகள் கிழக்கு மாகாணத்தில் உயிர் உடமை இழப்புக்களை சந்தித்த பிரதேசத்தில் மூதூரும் மிக முக்கியமான ஒரு ஊராகும் அந்த வகையில் பயங்கர வாதிகளிடமிருந்து தமதூரை பாதுகாப்பதற்காக இலங்கையின் முப்படைகளிலும் தம்மை இணைத்துக்கொண்டு இளைஞர்கள் மட்டுமல்லாது நடுத்தர வயதினரும் ஊரையும் சமூகத்தையும் பாதுகாத்தார்கள் அன்றய சூழலில் பாதுகாப்பிக்காக அல்லாஹுக்கு அடுத்து சமூகம் இவர்களை நம்பியது யாவரும் அறிந்த விடயம். உண்மையில் முப்படிகளிலும் இணைந்து செயல்பட்டவர்கள் ஏறக்குறைய வறிய அல்லது வசதி குறைந்த குடும்பங்களை சேர்ந்தவர்கள் தான் இணைந்து கொண்டார்கள் அவர்களில் அதிகமானவர்கள் இன்று இப்பதிவின் புகைப்படங்களில் காணப்படுகின்றார்கள்.
உயிரை நாட்டுக்காக , சமூகத்துக்காக விடடார்கள் . அன்று அவர்களிடம் இருந்தது வருமானத்துக்கான ஒரு வழி மற்றது சமூகத்தை பாதுகாக்கும் வழி ஒரு கல் இரண்டு மங்கை என்று சொல்வார்கள் அதுபோலதான் அனால் வசதி படைத்தவர்களின் குழந்தைகள், குடும்பங்கள் என பாதுகாப்பான பிரதேசங்களை நோக்கி நகர்த்தப்பட்டார்கள் சமூக நலனுக்காக பாடு பட்டவர்கள் சிலர் உயிரிழந்தார்கள் பலர் தோலிழந்தார்கள் தொழிலந்தவர்களை சமுகம் மேலும் புறக்கணித்ததனால் அவர்கள் வருமானத்துக்காக எதனையும் செய்ய கூடிய மனநிலையில்தான் இன்றும் இருக்கின்றார்கள் இவர்களின் சமூக விரோத செயல்களுக்கு சமூகமும் ஒருவகையில் பொறுப்புதாரிகள்தான். அவர்களை அடையாளம் கண்டு சமூகம் புனர்வாழ்வளிக்க வேண்டும் நன்றி.


மர்ஹூம் அமீர் என்னோட நல்ல நண்பன்.. என்னோட ஓபனா நெறைய விடயங்களை என்னை நம்பி பகிர்ந்து கொள்வார்.. இந்த புகைப்படம் அவருடைய மிகப்பழையது. அவரின் முகம் இன்னும் என் கண்களில் .. அவர் மரணிப்பதற்கு 5 நிமிடங்களுக்கு முன் என்னுடன் பேசிச்சென்றார்..அங்கே எனக்கொரு பிரச்சனை ஏற்ப்பட்டபோது என்னை அமைதியாக இருக்கச்சொன்னார் இல்லேனா இங்கிருந்து போங்க மீட்டிங் முடிஞ்சி நாம பேசுவோம் என்றார். அவரின் சொல்லைக்கேட்டு அங்கிருந்து நகர்ந்து சரியாக 6 நிமிடங்களில் அங்கே குண்டு வெடித்தது..நாங்கள் எல்லோரும் ஆஸ்பிதிருக்கு கொன்டு சென்ற பின்னரே மரணித்தார்.. இவர் கையில் இருந்த ஒரு ஸ்ரோங் பைலினாலயே பைத்துள்ளா சேரின் முகத்தை மறைத்தார்.. அந்த நேரத்தில் மரணித்த அனைவரும் இன்னும் என்கண்களில்.. இந்த பதிவின் மூலம் நினைவூட்டியதற்கு நண்றி.. இந்த நேரத்தில் நாம் அனைவரும் எம்மை விட்டுப்பிரிந்த அனைவருக்காகவும் துவா பிரார்த்தனையில் ஈடுபடுவோமாக...
facebook link https://m.facebook.com/story.php?story_fbid=2249182635313493&id=100006653354283
No comments:
Post a Comment