
பல்லின சமூகத்தின் மத்தியில் வாழும் நாம் நடைமுறைக்கு ஏற்ற இஸ்லாம் பல்வேறு வழிகாட்டலை காண்பிக்கின்றது. அந்தவகையில் மாற்றுமதங்களை மதிப்பதில் மற்றும் அந்த சமூகத்துடன் நல்லிணக்கத்துடன் பழகுவதில் எமது பண்பாட்டை பிரதிபலிப்பதனை முறையாக வழிகாட்டிட முற்படுகிறது.
இருந்தபோதும் நாம் எமது மார்க்க வரையறையில் சில அத்துமீறல்களை சமகாலங்களில் செய்கிறோமோ என்று எண்ணத்தோன்றுகின்றது.
சூழல் முகாமைத்துவம் மற்றும் சூழல் மாசடைவில் ஒலி (சத்தம் - sound hazard) ஒரு முக்கிய காரணியாக தற்காலங்களில் பிரதிபலிக்கின்றது. இஸ்லாமிய நடைமுறையில் தொழுகை அழைப்பு முறை மிகவும் கண்ணியமான ஒன்றாகும். ஆனால் எமது பள்ளிவாயல் நிர்வாகத்தின் அசமந்த போக்குகள் காரணமாக தகுதியானவர்கள் அந்த பதவிக்கு நிர்ணயம் செய்யப்படுவதில்லை. கண்ணியமிகு பணிக்கு எமது சமூகத்தின் பொறுப்புதாரிகள் அதற்கு நிர்ணயம் செய்யும் பணியாளர்களை இனங்காண்பதில் குறுகிய சிந்தனையை நடைமுறைப்படுத்துவதே காரணமாக அமைகிறது.

"பாங்கு சொல்வதற்குரிய நன்மையையும் முதல் வரிசையில் நின்று (தொழுவதற்குரிய) நன்மையையும் மக்கள் அறிவார்களானால் அதற்காக அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வருவர். யாருக்கு அந்த இடம் கொடுப்பது என்பதில் சீட்டுக் குலுக்கியெடுக்கப்படும் நிலையேற்பட்டாலும் அதற்கும் தயாராகி விடுவர்" (புஹாரி 615)

அடுத்ததாக நவீனத்துவ உலகத்தில் நேரம் என்பது அடையலாம் குற்றப்பட்ட ஒன்று. அதான் செய்தி நாங்கள் உபயோகிக்கும் தொலைபேசி வாயிலாகவோ அல்லது வேறு சாதனங்கள் வாயிலாகவோ எமக்கு நினைவூட்டப்படுகின்றது. எனவே பாங்கு சத்தாமாக மொழியப்படவேண்டுய தேவையின் எழுமாறு குறைவடைகிறது. எது எவ்வாறோ எமது ஊரை பொருத்தமட்டில் தக்கியா பள்ளிகளில் பாங்கு ஒலிபெருக்கியில் ஒலிப்பதை முற்றாக தவர்ப்பது நன்று. இதற்கு மாற்றீடாக ஜும்மா பள்ளிகளை முறையாக அடையலாம் கண்டு அவற்றின் ஒலிபெருக்கி ஒலியில் எல்லை வீச்சை கருத்தில் கொண்டு அதான்கள் ஒலிக்கப்படுவது காலத்தின் அடிப்படை தேவையாக அமைகிறது.

எனவே மேற்படி விடயதானம் (ஒலிபெருக்கி அதான் மொழிவு, மோதினார் அவர்களின் தகமை) குறித்து எமது ஊரின் பொறுப்புதாரிகள் கூடிய கவனம் செலுத்துவது மாத்திரமன்றி அதற்கு தீர்க்கமான ஆரோக்கியமான நடைமுறை வழிகாட்டலை வழங்கவேண்டும்.
"ஒருவர் (தொழுவதற்காக) நடந்து வரும் பாதையில் ஒரு முள் மரக்கிளை கிடப்பதைக் கண்டு, அதை அந்தப் பாதையைவிட்டும் அகற்றும் பணியில் ஈடுபட்டார். அப்பணி அவரை (ஆரம்ப நேரத்தில் தொழுவதைவிட்டும்) பிற்படுத்திவிட்டது. இப்படிப்பட்ட அந்த மனிதருக்கு அல்லாஹ் நன்றி செலுத்துகிறான்" (புஹாரி 652)
No comments:
Post a Comment