பிரபஞ்ச தோற்றம் ஆனது சுமார் 13.8 Billion வருடங்கள் முன்பாக நிகழ்ந்தது என்று அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. இதன் பின்னர் படிப்படியாக விண்மீன் கூட்டங்கள் மற்றும் கோல் மண்டலங்கள் இன்னும் வான்பொருட்கள் தனக்கென ஒரு அத்தியாத்தை ஆரம்பம் செய்தன. இதன் அடிப்படையில் புவியின் பௌதீக கட்டமைப்பு ரீதியாக தோற்றம் சுமார் 4.5 Billion வருடங்கள் முன்னர் ஆரம்பமானது. அந்தவகையில் உயிரியல் ஆய்வில் இதுவரை நிறுவப்பட்ட உயிரினங்கள் வாழும் கிரகமாக புவி முத்திரை குற்றப்பட்டு இன்றளவும் தொடர்கின்றது.
புவியில் உயிரினத்தோற்றம் சுமார் 3.5 Billion வருடங்கள் முன்னர் ஆரம்பமானது. முதல் உயர் தோற்றம் சமுத்திரத்தில் இருந்து உருவானதாக நம்பப்படுகின்றது. இவற்றில் இருந்து பரிணாமம் அடைந்து உயிரிகள் விருத்திபெற்றதாக அறிவியல் ஆய்வுகள் சான்று பயக்குகின்றது.
மேற்படி ஆய்வின் முன்டிவின் படி சூழல் மற்றும் உயிரங்கி தனது நிலவுகையை உருதிப்படுத்தும் வகையில் உள்ளக வெளியக மாற்றங்களை காலத்திற்கு காலம் ஏற்படுத்தி புதிய உயிரின வகையாக சூழலில் நிலைபேறு பெற்றது. சூழல் மாற்றம் இதற்கு பெரும் பின்னணி தாக்கத்தை வழங்கியது.
உயிர் தோற்றம் பற்றிய சில கொள்கைகளை முதலில் பார்ப்போம்.
லாமார்க் (Lamarck) என்பவரினால் தன்னிச்சை பிறப்பாக்கும் கொள்கை (Theory of Inheritance of Acquired Characteristics) 1801 இல் முன்வைக்கப்பட்டது. இக்கொள்கையின் படி உயிரிகள் தானாக தோற்றம் பெரும் என்ற எண்ணக்கரு முன்வைக்கப்பட்டது.
ஆனால் 1859 இல் டார்வின் (Darwin) என்பவரினால் இயற்கை தேர்வு கொள்கை (Natural Selection) முன்வைக்கப்பட்டது. இவரின் கொள்கை முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படாவிட்டலும் பகுதியளவில் சில ஏற்கத்தக்கதாக அமையப்பெற்றுள்ளது. தக்கன பிழைத்தல் தகாதன மடிதல் என்று இவரின் கொள்கையை சுருக்கமாக முன்வைக்கலாம்.
இதனை தொடர்ந்து மென்டலீவ் என்பவரினால் இதே காலப்பகுதியில் DNA வை அடிப்படையாக்கொண்ட உயிரின தோற்றம் பற்றிய அடிப்படை எண்ணக்கரு முன்மொழியப்பட்டது. அனால் அக்காலத்தில் பெரிய அளவில் இக்கொள்கை பிரபல்யம் அடையாவிட்டாலும் பிற்பட்ட உயிரியல் ஆய்வில் எழுந்த சித்தாந்தம் மதம் மற்றும் மூட நம்பிக்கை சார்ந்த எண்ணப்பாட்டை உரசிப்பார்த்து ஒப்பாய்வு செய்வதாக அமைந்தது. இதனால் பல மழுங்கி கிடந்த அறிவியல் உண்மைகள் வெளிக்கொணரப்பட்டது.
கூர்ப்பு உண்டா?
கூர்ப்பு/ பரிணாம (Evolution) வளர்ச்சி உண்டா என்றால் ஆம் என்று உறுதியாக கூற முடியும். ஆனால் அவற்றில் வரையறை உண்டு என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். உதாரணமாக எல்லாவற்றிலும் கூர்ப்பு தொளிற்படுமா என்றால் இல்லை. காரணம் கூர்ப்பு என்பது சூழலில் ஏற்படும் நீண்டகால மாற்றத்தை அடிப்படையாக்கொண்ட ஒரு மிக மந்தமான நிகழ்வாகும். இதனை எமது வாழ்நாளின் காணமுடியாது. கூர்ப்பு சடுதியாக நிகழும் மாற்றம் அன்றாகையினால் அதனை நாம் உணர்ந்துகொள்வது கடினமாகும்.
முதல் உயிர் தோற்றத்தில் எழுந்த பரிணாம வளர்ச்சியே பல்வேறு உயிரங்கிகள் இவ்வுலகில் தோற்றம் பெற வழிகோலியது. இவற்றுக்கு பல யுகங்கள் (3.5 Billion) தேவைப்பட்டது. ஆனாலும் மனித தோற்றம் பற்றியதில் சிக்கல்கள் நிலவுகின்றன. சரி அதனை பற்றி பார்ப்போம்.

மனிதன் குரங்கில் இருந்து தோற்றம் பெற்றான் என்ற கொள்கை பரவலாக்கம் பெற்றுள்ளது. இக்கொள்கையை நேரடியாக பொருள் காண்பது தவறு. குரங்கில் இருந்து என்பது குரங்கின் மூதாதையில் இருந்து தோற்றம் பெறுகின்றான் என்று புரிந்தால் இக்கொள்கையை இலகுவாக புரிந்துகொள்ள முடியும்.
ஆனாலும் நவீன உயிரியல் ஆய்வுகள் மனித தோற்றம் பற்றி தீர்க்கமான முடிவை இதுவரை கூறவில்லை. காரணம் மனித தோற்றம் என்பது அறிவியல் ஆய்விற்கு அப்பாற்பட்ட ஒரு நிகழ்வாகவே உயிரியல் ஆய்வுகள் நிருபிக்கின்றது. அதாவது மனித மூதாதை குரங்கு என்று வைத்துக் கொண்டால் மூலக்கூற்று உயிரியல் (DNA) அடிப்படையில் மனிதனுக்கும் மனித மூதாதைக்கும் தொடர்பற்ற இடைவெளி காணப்படுகின்றது. ஆனாலும் வெளித்தோற்ற நடத்தைகளை கொண்டு பார்கையில் வலுவான பிணைப்பு குரங்கிற்கும் மனிதனிற்கும் நிலவுகின்றது. நவீன அறிவியல் ஆய்வுகள் மூலக்கூற்று உயிரியல் (DNA) அடிப்படையிலே சரி காண்கின்றது.
“நீங்கள் இழிவடைந்த குரங்குகளாகி விடுங்கள்” (அல்குர்ஆன் 7:166) குறித்த இவ்வசனம் மனிதர்களை குரங்குகளாக மாற்றினோம் என்பதை பற்றி அல்குர்ஆன் பேசுகின்றது.
மேற்படி ஆய்வு முடிவை குறித்து அல்குர்ஆன் இவ்வாறு பேசுகிறது.
"நிச்சயமாக நாம் தாம் வானங்களையும், பூமியையும் அவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தோம்" (அல்குர்ஆன் 50:38)
"அவன் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்; இவை சம்பந்தப்பட்ட அனைத்துக் காரியங்களையும் அவனே ஒழுங்குபடுத்துகின்றான்" (அல்குர்ஆன் 10:3, 7:54, 11:7, 25:53, 41:09, 57:4)
"பூமியை இரண்டே நாட்களில் (அவன் படைத்தான்)" (அல்குர்ஆன் 41:9)
"இரண்டு நாட்களில் அவற்றை ஏழு வானங்களாக அவன் ஏற்படுத்தினான்" (அல்குர்ஆன் 41:12)
"அதன் மேலிருந்து உயரமான மலைகளை அமைத்தான்; அதன் மீது (சகல விதமான) பாக்கியங்களையும் பொழிந்தான்; இன்னும், அதில் அவற்றின் உணவுகளை நான்கு நாட்களில் சீராக நிர்ணயித்தான்" (அல்குர்ஆன் 41:10)
மேற்படி வசனங்கள் யாவற்றிலும் பயன்படுத்தப்படும் நாட்கள் என்பதற்கு யவ்ம் என்ற அரபு வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இச்சொல்லானது ஐயாம் என்ற மூலச்சொல்லில் இருந்து பிறந்ததாகும். ஐயாம் என்பது மிக நீண்ட கால இடைவெளியை குறிக்கும் சொல்லாகும். எனவே அல்குர்ஆனிய சொல்லாடல் அறிவியல் நிறுவும் ஆய்வு முடிவிற்கு ஒத்தமைகின்றது.
அவ்வாறாயின் மனிதன் எவ்வாறு தோற்றம் பெற்றான்....
முதல் அல்குர்ஆன் பேசுகையில் அவன் இறைவனால் படைக்கப்பட்டு பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.
"உங்களுக்கு பூமியில் தங்குமிடம் இருக்கிறது; அதில் ஒரு (குறிப்பிட்ட) காலம் வரை நீங்கள் சுகம் அனுபவித்தலும் உண்டு" (அல்-குர்ஆன் 7:24, 2:36, 40:64)
"(மனிதர்களே!) நிச்சயமாக நாம் உங்களை பூமியில் வசிக்கச் செய்தோம்; அதில் உங்களுக்கு வாழ்க்கை வசதிகளையும் ஆக்கித்தந்தோம்" (அல்-குர்ஆன் 7:10)
மேற்படி வசனங்களை கொண்டு ஒப்பாய்வு செய்கையில் மனிதன் என்பவன் ஏற்கனவே தயாராகிய நிலையில் இருந்தபோதே தான் வாழவிருக்கும் இருப்பிடமான பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளான் என்று புலனாகின்றது. இதன் காரணமாகவே நவீன உயிரியல் ஆய்வினால் உயிரின் கூர்ப்பு பற்றி பேசும் இடங்களில் மனித கூர்ப்பு பற்றிய எண்ணக்கருவை நிறுவிட முடியாது போனது. இது பற்றி மேலும் வாசிக்க
http://www.mutur-jmi.com/2018/04/blog-post_21.html தொடரவும்.
அந்தவகையில் உயிரியல் கூர்ப்பை ஏற்கும் அல்குர்ஆன் மானிட கூர்ப்பை மட்டும் மறுப்பதாய் அமைகிறது. இது இறைவனின் அத்தாட்சிக்கு ஓர் எடுத்துக்காட்டு.

ஏற்கனவே தயார் நிலையில் உள்ள பூமியில் அழியவுற்ற உயிரினங்கள் ஏன் தோற்றம் பெறவேண்டும்? என்று உங்களுக்கும் சந்தேகம் எழலாம்....
பரிணாம வளர்ச்சியின் கருப்பொருளை புரிந்துகொண்டால் இலகுவாக தீர்வு காணமுடியும் மேற்படி கேள்விக்கு. அதாவது பூமியின் வெவ்வேறு காலப்பகுதிதியில் வெல்வேறு உயிரினங்கள் ஆட்சிமிகு உயிரினமாக தன்னை பிரதிபலித்தது. அவ்வகையில் மனிதன் பூமிக்கு வருவதற்கு முன்னர் அழிவுற்ற பல்வேறு ஆட்சியான இனங்களில் டைனோசர் முக்கியமான ஒன்றாகும். டைனோசர் ஒரு ஊர்வன இனத்தை சார்ந்து. இவை வாழ்ந்த காலத்தை நாம் Triassic காலம் என்று அழைப்போம். இக்காலப்பகுதியில் முலையூட்டிகள் (Mammalia) சூழலில் ஒதுக்கப்பட்டு வாழ்ந்து வந்தது. டைனோசர் அழிவின் பிற்பாடு முலையூட்டிகள் காலம் செழிப்புற்றது. ஆனால் மனிதன் பூமிக்கு வந்த பிற்பாடு மனிதன் ஆட்சியான இனமாக தலைதூக்கினான்.
கூர்ப்பின் போது குறித்த அங்கியின் பயன்பாடு கூடிய பாகம் மேலும் விருத்தியாகும் அதேவேளை பயன்பாடு மந்தமான பாகம் இழக்கப்படும் நிலைப்பாட்டை காணமுடியும். அந்தவகையில் இந்நிலைப்பாடு ஏனைய உயிர்களில் இருந்தபோதும் மனிதனிலும் இதனை அவதானிக்க முடியும். மனிதனை பொறுத்தவரையில் அவனின் செயற்பாடு கூடிய பாகமாக அவனது மூளையினை குறிப்பிட்டு காட்டமுடியும்.
அறிவு சார் பரிணாமம்
பரிணாம வளர்ச்சிக்கொள்கை, கூர்ப்பு தொடர்பாக இஸ்லாமிய கண்ணோட்டம் வேறு விதமாக உள்ளது. இஸ்லாம் இதை முற்று முழுதாக மறுக்கிறது் ஆனால் இஸ்லாம் அறிவுசார் பரிணாமத்தை மறுக்கவில்லை என்பதாகவே எனக்குத்தோன்றுகிறது. குர்ஆனில் உள்ள வரலாறுகளை ஆராயும்போது ஓவ்வொரு கால கட்டத்திலும் வாழ்ந்த மனிதர்கள் அறிவியலில் சார் விடயங்களில் முரண்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. மேலும் குர்ஆனில் உள்ள விஞ்ஞான ரீதிலான கருத்துக்கள் இதற்கு முந்தய எந்தவொரு சமுதாயத்தினருக்கும் வழங்கப்பட்டிருக்கவில்லை.
மேலும் பைபிளில் பின்வருமாறு கூறுகிறது.
" உங்களுக்கு இன்னும் பல விடயங்கள் கூறவேண்டியுள்ளது ஆனால் அதை நீங்கள் இப்போது தாங்கிக்கொள்ள மாட்டீர்கள், நித்திய ஜீவனாகிய அவர் வரும்போது, அதை உங்களுக்கு அறிவிப்பார்"
இந்த முன்னறிவிப்பை பல இஸ்லாமிய அறிஞர்கள் முகம்மது நபி அவர்களின் வருகையையும், அவரூடாக அருளப்பட்ட விஞ்ஞான கருத்துக்களையும் குறிப்பதாக கூறுகின்றனர். இதன்படி "நீங்கள் தாங்கிக்கொள்ள மாட்டீர்கள்" என்பது இந்த விஞ்ஞான விடயங்களை அவர்கள் சிந்திக்குமளவுக்கு அறிவாற்றலில் பின்தங்கியிருந்தனர் என்பதை எடுத்தியம்புகிறது. ஆகவே வரலாற்று நெடுகிலும் அறிவியல் படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கிறது அல்லது பெற வைக்கப்பட்டிருக்கிறது. எனவே எனது பார்வையில் இஸ்லாம் அறிவியல் தொடர்பான பரிணாம வளர்ச்சியை மறுக்கவில்லை போல உள்ளது.
தேடல் வலைத்தளங்கள்
No comments:
Post a Comment