
ஆசான் என்றால் யார் என்ற கேள்விக்கான பதில்களை இன்றுள்ள நவீனத்துவ சமூகம் மறந்துவிட்டதோ என்று எண்ணத்தோன்றுகின்றது சமகால ஆசிரியர் மற்றும் மாணவர் இடைத்தொடர்பு பற்றி பரிசீலனை செய்கையில்.
மிலேனியம் ஆண்டு உதயமாக முன்னர் குருகுல முறைமை பகுதியளவில் நடைமுறையில் காணப்பட்டது. அந்த காலத்தில் வாழ்ந்த மாணவர்கள்தான் இன்று ஆசான்களாக பணியாற்றுகின்றார்கள் என்பது மட்டுமன்றி இன்றுள்ள மாணவர் சமுதாயத்தின் பெற்றோராகவும் காணப்படுகின்றார்கள். ஆனால் அவர்களினாலேயே அநேக பிரச்சினைகள் தோற்றம் பெறுவது ஏன் என்றுதான் தெரியவில்லை. ஒருவேளை மிலேனியம் ஆண்டின் உதயத்தின் பின்னர் உரிமைகளும் சலுமைகளும் அளவிற்கு அதிகமாக வழங்கப்பட்டு வழக்கில் இருக்கின்றமையோ????
பெற்றோர் பிள்ளை உறவுமுறை
"பெற்றோர் மீதும், (பெற்ற) சந்ததியின் மீதும் சத்தியமாக, திடமாக, நாம் மனிதனைக் கஷ்டத்தில் (உள்ளவனாகப்) படைத்தோம்" (அல்குர்ஆன் 90:3,4)
குழந்தை வளர்ப்பு ஒரு கலை. இதனை பெற்றோர் கற்கவேண்டும். சமகாலங்களில் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து எவ்வாறு வெற்றிகொண்டு நடைபோட வேண்டும் என்று. இதுபற்றிய விழிப்புணர்வுகள் கூட சமூக மட்டத்தில் பொதுப்படையாக அறிமுகம் செய்யப்படுவதும் இல்லை. இவ்வாறான தாக்கங்களுக்கு மேலாக பண்பாடுகள் அற்ற வெறும் ஏட்டுக் கல்வியை மட்டும் சுமந்த ஒருவகை இயந்திர மனித இனம் தோற்றம் பெற்றுவருகின்றது. இதன் விளைவே அடுத்த தலைமுறைக்கான அழிவாக அமையும் நோயாக தொற்றியுள்ளது எனலாம்.

பெற்றோர் குழந்தை உரையாடல் எவ்வாறு அமையவேண்டும் மற்றும் அறிவுரை கூறல் முறைமை எவ்வாறு அமையவேண்டும் அல்குர்ஆன் மொழிநடை ஒன்றே போதுமானது.
(லுஃக்மான் தம் புதல்வரிடம் என் அருமை மகனே!) (பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான். “உன் நடையில் (மிக வேகமோ, அதிக சாவதானமோ இல்லாமல்) நடுத்தரத்தை மேற்கொள்; உன் குரலையும் தாழ்த்திக் கொள்; குரல்களிலெல்லாம் வெறுக்கத்தக்கது நிச்சயமாக கழுதையின் குரலேயாகும். (அல்குர்ஆன் 31:18,19)
கண்டிப்பு, பாசம் கட்டுப்பாடு என்பன அளவு கடந்துவிடக் கூடாது என்பதையும் கவனத்தில்கொள்ள தவறி விடுகின்றார்கள் பெற்றோர் சமூகம். இன்னும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் இடத்தில் எவ்வாறு நடந்துகொண்டார்களோ அவ்வாறே குழந்தை பொது சூழலில் நடக்க எத்தனிக்கின்றது. இதனால் பல்வேறு எதிர்வினையை குழந்தை விரும்பியோ விரும்பாமலோ எதிர்நோக்குகின்றது.
துன்புறுத்தல்
இதனை இருவகைபடுத்த முடியும். உடலியல் ரீதியான துன்பம், உளவியல் ரீதியான துன்புறுத்தம். ஆனால் முறைப்பாடுகள் பெரும்பாலும் உடலியல் ரீதியானதற்கே பதிவாகின்றது எமது அறிவீனத்தை எடுத்து காட்டுகின்றது. காரணம் உடலியல் தாக்குதலை விட உளவியல் தாக்குதல் பாரதூரம் அதிகமானதுடன் ஆதாரங்கள் மற்றும் தடங்கள் இல்லாமலே தாக்குதலை தொடரமுடியும் என்பதனால். ஆனால் இவ்வாறான தாக்குதல்களுக்கு உரிமை பெற்று கொடுப்பதும் சற்று கடினமே. அவை பற்றி நாம் கவலைபடுவதும் இல்லை.
யார் ஆசான்



உதாரணமாக குழந்தைகள் செய்யும் தவறை நாம் முறையாக எடுத்துரைப்பதில் விடும் கவனக்குறைவு, குற்றத்தை கண்டிப்பதில் உள்ள நளினதன்மை மற்றும் குழந்தைகள் மேல் கொண்டுள்ள அளவு கடந்த நம்பிக்கை என்பன எமது குழந்தைக்கு நாங்களே வழிகெட்டுப்போக வழியமைத்து கொடுக்கிறோம். ஆனால் இதே வேலையை ஆசான் செய்வதையும் நாம் அனுமதிப்பதில்லை என்றால் எமது குழந்தையின் எதிர்காலம்தான் என்ன...
"ஆசான் என்பவன் வழிகாட்டி விரல்நுனி பிடித்து வழிநடத்துபவனே"
அவனும் மனிதன்தான்

மனிதன் என்ற வகையில் பொறுமை, கோபம், சூழ்நிலை கைதி ஆகும் நிலைப்பாடு ஆசான்களுக்கும் உண்டு. ஏன் குழந்தை தற்கொலை செய்யப்போகின்றது என்று அந்த குழந்தைக்கு அன்பாக பேசி அவன் மனநிலையை மாற்ற நினைத்தால் எம்மை முட்டாள் என்பார்கள். அவ்வாறான சூழ்நிலையின் போது ஆசான்கள் தங்கள் எல்லைக்குள்தான் இயங்குவேன் என்று எண்ணினால் பாதிக்கப்படப்போவது ஆசானா அல்லது எமது ஆசைகளும் கற்பனைகளும் நிரம்பிய ஆசை செல்வங்களா???
சிறுவர் உரிமைகள், மனித உரிமைகள் என்று உரிமைகள் பேசும் சமூகத்தை இன்றே நாம் காண்கின்றோம். இஸ்லாமிய சமூகம் சுமார் பதினான்கு நூற்றாண்டுகள் முன்னரே இதனை பற்றி எக்காலத்திற்கும் ஏற்ற உரிமையை வழங்கியுள்ளது. அதைவிட மனித உரிமை கொண்ட சரத்துக்களைய இன்றைய மனித உரிமை அறிக்கை கொண்டுள்ளது???? இல்லவே இல்லை...
முட்டாள்களாக இருப்பதனாலோ அல்லது மூடத்தனமான செயற்பாடுகலாலோ குழந்தைகள் தண்டிக்கப்பட காரணமாக அமைகிறது. இதனை நாம் குறை காண்பதை விடுத்து பிரச்சினைக்கான அடிப்படை காரணங்களை ஆராய்வதிலேயே எமது சிறார்களின் எதிர்காலம் தங்கியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் நீதி கோரல்கள்....
பலர் சிறுவர் உரிமை மீறல்களை பற்றி பேசுகிறார்கள், வாதாடுகிறார்கள். ஆனால் அவர்கள் தங்களுக்கென்று முறையான முறைமையை கைகொண்டு நடைமுறை சாத்தியமான கலந்துரையாடலை மேற்கொள்கின்றார்கள் என்றால் மிகக்குறைவான தரப்பே இதனை பயனுடையதாக அனுபவிக்குகின்றது என்று உறுதியாக கூறமுடியும். காரணம் ஒரு ஆசான் விடும் தவறினை முழு ஆசிரியர் சமூகத்தின் மீதும் குற்றம் சாடும் தரப்பினர் சமூக மட்டத்தில் அதிகம்.
ஆனால் குழந்தை விடுகின்ற தவறுகளை எங்காவது ஆசான்கள் இவ்வாறு செய்கின்றார்கள் என்றால் சற்று கிண்டிக்கிலறியே தேடவேண்டியுள்ளது ஆதரங்களை சமர்பிக்க. காரணம் அவனும் நாளொன்றில் பெரும்பாலான நேரம் பெற்றோனாக இருபதனால் குழந்தை பற்றி அவனுக்கு நன்கு தெரியும்.
வகுப்பறை ஒன்றில் சுமார் 3௦ வெவ்வேறு சிந்தனை செயல்திறன் கொண்டவர்களை வழிநடத்தி வழிகாட்டும் அவன் தாயை விடவும் தகுதிகள் கூடியவன் என்றே கூறவேண்டும்.....
No comments:
Post a Comment