
நமது அறிவியல் இதுவரை எவற்றையெல்லாம் கண்டறிந்து எமக்கு அடையாளம் காட்டியுள்ளதோ அவ்வாறான சடப்பொருள்/பருப்பொருள் (Matter), சக்தி (Energy) குறித்த இடத்தில் முழுமையாக காணப்படாத நிலையினை வெற்றிடம் என்று எளிமையான வடிவில் கூறலாம். இன்னும் இலகுவாக கூறுவதாயின் காற்று இல்லாத பகுதி.
பொதுவாக பிரபஞ்ச எல்லைக்குள் இவ்வாறான ஒரு இடம் இருக்கின்றதா என்றால் தூயவடிவ வெற்றிடம் என்ற ஒன்றை நாம் காணமுடியாது. சரி உருவாக்க முடியுமா என்றால் அதுவும் இல்லை என்றுதான் கூறவேண்டும்....
ஏன் உருவாக்க முடியாது?
நாம் அறிந்த ஒன்றை இல்லாமல் ஆக்குகின்றோம் என்று வைத்துக்கொண்டால் அறியாத பல அம்சங்கள் அங்கே இருக்க வாய்ப்புக்கள் உண்டல்லவா என்ற கேள்வி எழுகின்றது தானே...

குறை வெற்றிடத்தின் உபயோகங்கள் எண்ணிலடங்காது. குறை வெற்றிடம் என்று கூறும்போது அவற்றில் புற அமுக்கத்தை காட்டிலும் தாழ்வான அக அமுக்கம் நிலவும். இதனால் பல்வேறு பயன்பாடுகள் எமது அன்றாட வாழ்வில் அனுபவிக்குகின்றோம். உதாரணமாக அமுக்க மாணியின் பயன்பாடு, திரவ மோட்டார் இயந்திர இயக்கம், வெக்கியும் கிளீனர் தொழிற்பாடு மற்றும் சில பொருட்களை பதப்படுத்தல் போன்ற செயற்பாடுகளை மேகொள்ள முடிகிறது.

ஆனால் திண்மம் (Solid), திரவம் (liquid), வாயு (gas) என்ற நிலைக்கு அப்பால் பிளாஸ்மா (Plasma) என்ற பருப்பொருளின் நான்காவது வகை பிரபஞ்சம் எங்கும் நிரம்பியுள்ளது. இவற்றுக்கு மேலாக காஸ்மிக் கதிர்கள் (Cosmic rays), கரும்பொருட்கள் (Dark Matter), கருஞ்சக்தி (Dark Energy) என்ற வேறுவகை காரணிகள் பிரபஞ்சத்தை வியாபித்து உள்ளன. அதாவது, நம் பிரபஞ்சப் பொருட்கள் 4.9%, கரும்பொருட்கள் 26.8%, கருஞ்சக்தி 68.3% உள்ளடக்கிய மொத்த தொகுதியையே பிரபஞ்சம் என்று அழைக்கின்றோம்.

வெற்றிடம் என்று நாம் வரைவிலக்கனப்படுத்தும் எல்லைக்குள் வெற்றிடம் காண்பது கடினம். இருந்தபோதும் ஒருபடி மேலே இவ்வாறானதொரு இடத்தில் வெற்றிடம் காண வாய்ப்புண்டு. ஆனால் ஊர்ஜிதமாக கூற முடியாது.
பிரபஞ்சம் தோற்றம் பெற முன்னர் வெற்றிடம் இருந்ததாகவே நம்பப்படுகின்றது. பெருவெடிப்பு தோற்ற நிகழ்வின் பின்னர் பிரபஞ்சம் விரிவடைய ஆரம்பமானது. சுமார் 13.8 billion வருடங்கள் முன்னர் நடைபெற தொடங்கிய பிரபஞ்ச விரிவு இன்றளவும் நடைபெற்ற வண்ணமே உள்ளது. அதாவது பிரபஞ்ச விரிவானது மணிக்கு பல்லாயிரம் கிலோமீட்டர் தூரம் வியாபிக்கின்றது.
வெற்றிடம் என்ற ஒன்றை நாம் பிரபஞ்ச எல்லைக்கு அப்பால் இருந்தால் ஒருவேளை காணமுடியுமோ என்னமோ????
“மனு, ஜின் கூட்டத்தார்களே! வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள்" (அல்குர்ஆன் 55:33)
No comments:
Post a Comment