
உதாரணமாக சமகாலத்தில் ஊடகம் என்பது இன்றியமையாத ஒன்று,இலங்கை முஸ்லிம்களிடம் ஊடக்கத்துறை வளர்ச்சி அடையாமல் இருந்ததற்கான காரணங்களில் முக்கியமான ஒன்றாக புகைப்படம் ஹராம்,வீடியோ ஹராம்,தொலைக்காட்ச்சி சைத்தான் பெட்டி என்பன போன்ற பத்வாக்கள் ஒரு அடிப்படைக்காரணம் என சொல்லலாம்.
அன்று இப்பகுதி மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டதாலும்,ஓரங்க்கட்டப்பட்டதாலும் முஸ்லிம்கள் இப்பகுதியில் கவனம் செலுத்தவில்லை.அதன் விளைவை இன்று அனுபவிக்கின்றோம்.
இன்று எமக்கென ஒரு ஊடகம் இல்லாததன் காரணமாக சிரச,சக்தி,போன்ற ஊடகங்களிடம் கையேந்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம்.எமது பிரச்சினைகளை கலந்துறையாடுவதற்கோ,சர்வதேச ரீதியாக கொண்டு செல்வதற்கோ அதிகம் சிரமப் படுகின்றோம்.
அரபுலகில் உருவான அல்ஜஸிராவுக்குமுன்னால் எதிரிகள் தடுமாறுவதைப்பார்க்கும்போது ஊடகம் எவ்வளவு சக்திவாய்ந்தது என்பதை உணர முடிகின்றது.
அதுபோல்தான் இலக்கியம்.
பாரம்பரிய சிந்தனை இலக்கியத்தின் பலமுக்கிய அம்சங்களை ஹராம் என சொல்வதன் காரணமாக இன்று இலக்கியம் சைத்தானின் கையிலிக்கின்றது.அவன் அதனூடாக ஆபாசத்தையும்,வன்முறையயையும் உலகம் பூராகவும் பரப்பியிருக்கின்றான்.

இஸ்லாமிய வரையரைக்குள் நின்று நவீன இஸ்லாமிய சிந்தனையாளர்கள் சொல்வதுபோல் இதனை இன்று பயன்படுத்துவோமாக இருந்தால் கண்டிப்பாக இந்தசமூகத்தையும் பாதுகாக்கலாம்,இந்தமார்க்கத்தையும் பரவலாக்கலாம்.
ஆனால் பாரம்பரிய இஸ்லாமிய சிந்தனையை முன்வைப்பவர்கள் இக்கருத்தை கடுமையாக எதிர்ப்பதனால் இப்பகுதி எம்மிடம் புறக்கணிக்கப்பட்டே காணப்படுகின்றது.இப்பகுதியில் எம்மால் ஆக்கபூர்வமான எதனையும் செய்யமுடியவில்லை.சிறந்த இஸ்லாமிய பிறதியீடுகளையும் வழங்க முடியவில்லை.
பாரம்பரிய இஸ்லாமிய சிந்தனையின் அடுத்த மிகப்பெரிய ஆபத்து முஸ்லிம் அல்லாதவர்களோடு உறவாடும் விடயத்தில் கடைபிடிக்கும் இறுக்கமான சட்டங்கள்.இதன் விளைவு முஸ்லிம்களுக்கும்,முஸ்லிமல்லாதோருக்குமிடையிலான மார்க்கரீதியான,சமூக ரீதியான உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன என்று சொல்லலாம்.
முஸ்லிமல்லாதோருக்கு சலாம் சொல்லலாமா?அவர்கள் எமது பள்ளிவாயலுக்குள் வரமுடியுமா? குர்ஆனை அவர்களுக்கு கொடுக்கலாமா? அவர்களுக்கு புதுவருட வாழ்த்துக்கள்.பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கலாமா? என்பன போன்ற விடயங்களில் நவீன இஸ்லாமிய சிந்தனையாளர்களின் வழிகாட்டல்களை பெற்றுக்கொள்ளவேண்டும்.முஸ்லிமல்லாதவர்களோடு எவ்வாறு உறவாடவேண்டும் என்பதற்கான அழகிய வழிகாட்டல்களை அவர்கள் தந்திருக்கின்றார்கள்.இவற்றை நாம் உள்வாங்கிக்கொள்வோமாயின் கண்டிப்பாக அது எமக்கு நன்மையையே கொண்டுவந்து சேர்க்கும்.

எமது நாட்டில் நவீன இஸ்லாமிய சிந்தனையை ஆழமாகக் கற்று அதனைமிகச்சரியாகவும்,மிக எளிமையாகவும் சமூகத்திற்கு கொண்டு செல்கின்ற திறமைசாலிகள் மிக மிகக் குறைவு என்பதனாலும்.எமது சமூகம் ஒரு அறிவார்ந்த சமூகமாக,சிந்தனைரீதியாக,தூரநோக்கோடு விடயங்களை அணுகும் சமூகமல்லாது,உணர்ச்சி வசப்பட்டு,குறுகிய வட்டத்திற்குள் உணர்வுபூர்வமாக சிந்திப்பதனால் நவீன இஸ்லாமிய சிந்தனையும்,நவீன இஸ்லாமிய சிந்தனையாளர்களும் இஸ்லாத்திற்கு எதிரானவர்களாகவும்,குழப்பவாதிகளாகவுமே பார்க்கப்படுகின்றார்கள்.
நவீன இஸ்லாமிய சிந்தனை இங்கு புறக்கணிக்கப்படுமாக இருந்தால்,வெற்றியடையாமலிருக்குமாக இருந்தால் காலம் கடந்து கைசேதப்படுவதென்பது இலங்கை முஸ்லிம் சமூகத்தின் தலைவிதியாகவே ஆகிப்போகுமென்பதில் சந்தேகமில்லை.
உண்மையில் பாரம்பரிய இஸ்லாமிய சிந்தனையுடன் முரண்படாமல்,அதனுடன் உறவாடி செல்வதுதான் சிறந்தது எனினும் எமது இன்றைய நிலமையை கவனத்திற்கொண்டு நவீன இஸ்லாமிய சிந்தனை பாரம்பரிய இஸ்லாமிய சிந்தனையையை வெற்றிகொண்டு அதனைத்தாண்டிச்செல்லவேண்டியுள்ளது என்பதனையும் குறிப்பிட விரும்புகின்றேன்.
No comments:
Post a Comment