நவீன கல்வித்துறையில் பல்வேறு புதிய புதிய திட்டங்களை
அறிமுகம் செய்து பரிசீலனை செய்து சாத்தியப்பாடுகளை ஒப்பாய்வு செய்வது ஒன்றும்
இன்று நேற்று தோற்றம் பெற்ற காரணியல்ல. காலா காலமாக ஈ அடிச்சான் கொப்பி என்ற
பெயரில் மேலைத்தேய கல்விமுறைக்கு ஒப்பான திட்டங்கள் நடைமுறைகளை அறிமுகம் செய்யும்
சமகால கீழைத்தேய கல்வி முறை எந்த அளவிற்கு தங்கள் நோக்கங்களில் வெற்றி காண்கின்றது
என்பது சற்று சங்கடமான முடிவுகளை ஆழ்ந்து ஆராய்கையில் எமக்கு முடிவுகளை அள்ளி
அளிக்கின்றது.
பொதுவாக காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுபட்ட பல நாடுகள்
பெரும்பாலும் வளர்முக நாடுகளாக பிரதிபலிக்கின்றது. இதற்கு அடிப்படை காரணமாக
அமைந்தது அந்த நாட்டின் அரசியல் பொருளாதார கொள்கை மற்றும் வளர்ச்சியுற்ற வல்லரசு
நாடுகளின் மறைமுக ஆதிக்கமும். சரி அது விரிவாக பேசவேண்டிய தலைப்பு சுருக்கமாக
முன்வைத்துளேன்.
இலங்கையில் மிக அண்மையில் நாடளாவிய ரீதியில் அதிகம்
அறிமுகம் செய்யப்பட்டு பல்வேறு முன்னெடுப்புக்கள் மூலம் பரவலாக்கம் செய்யப்படும்
ஒரு இணைபாடவிதான கல்வி முறையே சிறுவர் சந்தை. குறிப்பாக முன்பள்ளி சிறார்கள்
மற்றும் ஆரம்பப்பிரிவு சிறார்களை அடிப்படையாக்கொண்டு நகர்த்தப்படும் இத்திட்டம்
அடிப்படை நோக்கங்கள் பலவற்றை கொண்டு முன்னெடுக்கப்படுவது பலர் அறியாத ஒரு விடயம். அவற்றில்
1.
நாணயப் பயன்பாடும் அதன் பெறுமானமும் பற்றி அறிமுகம் செய்தல்.
– பெரும்பாலும் இன்றைய சிறார்கள் நாணயப் புழக்கத்தை அதிகம் நாட்டம்
கொண்டுள்ளபோதும் அதனை எவ்வாறு கையாள்வது பற்றிய அறிவை இங்கே வளர்த்து கொள்ளவேண்டும்.
2 .
எண் கணிதவியல் பற்றிய அடிப்படை தகமை ஊட்டப்படல் – பணத்தின்
பெறுமானம் அதற்கான பொருளின் எண்ணிக்கை பற்றிய அறிவு பெறவேண்டும்.
3.
மானிடவியல் தொடர்புடமை – பல்வேறு சிந்தனை, தோற்றம், மனோநிலை, தேவைப்பாடு உடைய பல மனிதர்களை விற்பனையாளர்
ஒருவர் சந்திக்கவேண்டும். இதனூடாக வியாபார சகிப்புத்தன்மை, பேச்சாற்றல், வியாபார நேர்மை, வியாபார
தந்திரம் மற்றும் விளம்பரம் பற்றிய அறிவை பெறவேண்டும்.
4.
பகுப்பாயும் திறன் விருத்தி – இலாபம், நஷ்டம், கொள்முதல் விற்பனை பெறுமானம் பற்றியும் ஏனைய சம தளங்களில்
விற்பனை பங்கு பெறுமானம் மற்றும் விற்பனை பொருளின் தேவைப்பாடு பற்றிய அறிவை
பெறவேண்டும்.
5.
தர நிர்ணயம் – ஒரே பொருட்கள் வெவ்வேறு தளங்களில் விற்பனை
ஆகும் போது விலை, தரம், இயல்பு, எண்ணிக்கை பற்றிய அறிவை பெறல்.
6.
சமூக வாழ்வின் இடர்பாடு – சூழல் தாக்கம்(சூடு, குளிர்), உழைப்பின் பெறுமானம்
7.
நேர முகாமைத்துவம் – குறித்த நேரத்தில் தனது நோக்கத்தை
நிறைவு செய்ய சிந்தனை ஒருமைப்பாடு அதனுடன் நேர முகாமைத்துவம் மேற்கொள்ளும் திறன்.
8.
உளவியல் தோற்றப்பாடு – ஒரே பொருட்கள் வெவ்வேறு தளங்களில்
விற்பனையாகும் போது ஏன் எதற்கு தன்னுடையது விற்பனை அதிகம் குறைவு பற்றிய நேர்மறை
எண்ணப்பாடு.
9.
விளம்பர முறை – கவர்ச்சி, அடிப்படைத் தேவைப்பாடு, மற்றும் நவீன கட்சிபடுத்தும் சிந்தனை திறன் போன்றவற்றை
அதிகரித்தல்.
10.
இயற்கை உற்பத்தியை வலுவூட்டல் – வீட்டு தோட்ட உற்பத்தி, சில மூலிகை, பழங்கள், ஜூஸ், கைவினை உற்பத்தி, ஆரோக்கிய உணவு விளம்பரம் பற்றிய
எண்ணப்பாடு.
11.
சூழல்
முகாமைத்துவம் – கழிவகற்றல், பொலுத்தீன் பாவனை, சூழல் மாசாக்கிகள் பற்றிய அடிப்படை அறிவை பெறல்.
12. ஆளுமை விருத்தி – சுய கட்டுப்பாடு (கோபம், மகிழ்ச்சி, சோர்வு, பொறாமை) விருத்தி, முகாமைத்துவ ஆளுமை, வெற்றி தோல்வி பற்றி ஆயும் திறன், புலன் விருத்தி (பார்வை, கேட்டல், பேச்சு, சமிஞ்சை) போன்றவற்றின் மூலமாக தனிநபர் ஆளுமை விருத்தியை
மேம்படுத்தல்.
மேற்படி சிறுவர் சந்தை மூலமாக எதிர்காலத்தில் பல்வேறு
துறைகளில் (கல்வி, வியாபாரம், மானிட முகாமைத்துவம், தொழில்நுட்பவியல்) இங்கு
பெற்ற அனுபவங்களை பிரயோகம் செய்யும் அடிப்படை தகமை பெறவேண்டும் என்பது ஒட்டுமொத்த
எதிர்பார்ப்பாகும்.
(குறிப்பு – மேற்படி காரணங்கள் எனது தனிப்பட்ட சிந்தனையில்
வெளிப்பட்டதே. மாறாக இவற்றுக்கு மேலாகவும் இருக்க வாய்ப்புண்டு)
ஆனாலும் நோக்கங்கள் பல முறையாக இருக்க முரணாக நடைபெறும்
சித்தாந்த நிலைப்பாட்டை சமூக அரங்கில் காண முடிகிறது.
1.
பெற்றோர் வழிகாட்டி வழிநடத்தல்
2.
இயற்கை உற்பத்தி மற்றும் பயனுடைய விற்பனை பொருட்கள்
புறந்தள்ளப்டுகின்றமை - இதனால் நவீன உற்பத்திகள் மீதான மோகத்தை வலுவூட்டுகின்றோம்.
குழந்தைகள் மீது இயற்கை உற்பத்திகளில் அவநம்பிக்கையை உண்டாக்குகிறது.
3.
ஆடம்பர மோகத்தை விளம்பரப்படுத்தல் – சில விற்பனை பொருளின்
கட்சி
4.
போட்டி, பொறாமைகளை விதைக்கப்படுகின்றது – குழந்தைகள் ஆளுமைகளை ஒப்பீடு
செய்து பொதுத்தளத்தில் அவமானப்படுத்தும் நிலைப்பாடு.
5.
அரசியல், சமூக பிரபலங்கள் தேடும் இடம் - ???????????????
6 6.
ஊக்கபடுத்தும் நிலைப்பாடு மங்கியமை – களியாட்ட நிகழ்வு
மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகளில் உள்ள அக்கறை ஆர்வம் இவ்வாறான நிகழ்வுகளில்
உண்டாகாமை. இதனால் ஒருவகை மாயை நிலை உண்டாக்கம்.
7.
திருப்திப்படுத்த முயற்சிகின்றமை – தங்கள் குழந்தைகளை
திருப்திபடுத்த முயற்சிக்கும் நிலை (பொருட்களை உறவினர்கள் கொள்வனவு செய்தல்)
காரணமாக தோல்விகளை அனுபவிக்கும் நிலைப்பாட்டை பெற்றோர் உண்டாக்க தவறி
விடுகின்றார்கள். இதனால் முடிவெடுக்கம் திறன், தோல்வி ஒப்புக்கொள்ளும் திறன்
மற்றும் தோல்விகள் பின்னரான தோல்விக்கான காரணங்கள் பற்றிய ஆயும் திறனை உளவியல்
ரீதியாக மழுங்கடுகின்றோம்.
அநேக
சந்தர்பங்களில் நோக்கங்கள் நிறைவேறாத சிறார்களின் சந்தை நிறைவு பெருகின்றமையை
நாடளாவிய ரீதியில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் காணமுடிகின்றது. இதன் ஆனால்
பெரும்பான்மை சமூகத்தில் மேற்படி செயல்திட்டம் பாரிய வெற்றி கண்டுள்ளது.
மேலும்
சடங்கு சம்ரதாயத்திற்கு நடைபெறும் சிறுவர் சந்தைகள் இங்கே ஏராளம் என்பது மட்டும் மறுக்க
முடியாத உண்மை.....
No comments:
Post a Comment