ஆய்வின் முடிவில் வெளியிட்ட அறிக்கையில் “இரு சமுத்திரங்கள் ஒன்றோடொன்று சந்தித்தும் அவைகள் கலப்பதில்லை. காரணம் என்ன வெனில் அவற்றுக்கிடையே ஒருவகையான கண்ணுக்கு புலப் படாத தடுப்பு காணப்படுகின்றது” என்பதாகும்.
இக்குறித்த விஞ்ஞான உண்மையானது 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கண்டறியப்பட்ட நவீன புவியியல் மற்றும் கடலியல் சார்ந்ததான அறிவியல் உண்மையாகும்.இது சம்மந்தமாக பின்வரும் அல்-குர்ஆன் வசனம் எமக்கு தெளிவாக விளக்குகின்றது.

இங்கு அல்-குர்ஆன் “பர்ஸக்” எனும் அரபிய வார்த்தையினை கையாள்கின்றது. இதன் பொருள் “தடுப்பு” அல்லது “இடைபிரிப்பு” என்பதாகும். மேலும் இவ்வசனத்தில் “மரஜா” - சந்தித்து ஒன்றோடு ஒன்று கலத்தல் எனப்படும் அரபு வார்த்தையும் இங்கு பயன் படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான அராபிய வார்த்தைகளுக்கு ஆரம்ப காலத்தில் அல்-குர்ஆனிய விரிவுரையாளர்கள் மற்றும் அறிஞர்களினால் முறையான விளக்கமளிக்க முடியாது போனாலும் இன்று இதற்கான தீர்வு கிடைத்துள்ளது.
இன்னும் 1978 இல் அமெரிக்காவின் பிரபல்ய நில அமைப்பியல் வல்லுனர் மற்றும் கடலாய்வு விஞ்ஞானியும், கொலரடோ பல்கலைக்கழகத்தின் மண்ணியல் பேராசிரியருமான வில்லியம் விண் ஹே என்பவர் மேற்கொண்ட ஆராய்ச்சி நான் மேற்கூறிய அல்-குர்ஆன் வசனத்திற்கு மேலும் வலுவூட்டுகிறது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த புகழ் பெற்ற கடலியல் விஞ்ஞானி கேப்டன் ஜாகியூஸ் என்பவர் மூலமாக செய்யப்பட ஆய்வும் இதற்கு சான்றாகவுள்ளது. இன்னும் இங்கே தடுப்பு எனப்படுவது; ஒரு குறித்த நீரினது வெப்பநிலை, உப்புச் செறிமானம், அடர்த்தி என்பன மற்றையதிலிருந்து மாறுபட்டதாக காணப்படுதலாகும்.
இதனால் இவை நேரடியாக கலப்பதில்லை. மாறாக இவை ஒரு குறித்த இயல்பு கொண்ட மற்று மொரு நிலைக்கு (இயல்புகள், கூறுகள், தன்மைகள்) முற்றிலுமாக மாற்றப்பட்டதன் பின்னரே இவை கலப்படமடைகின்றது. உதாரணமாக கூறினால் மத்திய தரைக்கடல் மற்றும் அத்திலாந்திக் சமுத்திரம்.
நான் இங்கு குறிப்பிட்ட நிலைமாற்றத்தினை தற்போதைய நவீன அறிவியல் “பைக்னோகிளைன்” (Pycnocline) என்றழைக்கின்றது. இங்கு குறிப்பிட்ட இச்செயற்பாடானது “பைக்னோகிளைன் எல்லை” (Pycnocline Zone) எனப்படும் இரு கடல் சங்கமிக்கும் எல்லையில்தான் இது நடைபெறுகிறது. இக்குறித்த எல்லையினை புனித அல்-குர்ஆன் மேற்கூறப்பட்ட வசனத்தில் “ஹிஜ்ரம் மஹ்ஜூரா” என்ற வார்த்தைப் பிரயோகத்தை கையாள்கின்றது. இவ்வார்த்தையின் கருத்தானது “பிரிவினை மண்டலம்” என்பதாகும்.

அல்-குர்ஆனில்; கடலுடன் நன்னீர் ஆறுகள் சங்கமிக்கும் இடங்களில் (கழிமுகத்தில் - Estuary) உண்டாகும் பைக்னோகிளைன் எல்லையினைக் குறித்தும் மேற்கூறப்பட்ட வசனங்கள் பேசுகின்றது. அக்குறித்த எல்லையில் (பிரிவினை மண்டலம்) வேறு பிரிக்கும் எல்லை (Zone of Separation) எனப்படும் பகுதியில் நிலைமாற்றும் செயற்பாடு நிகழ்கின்றது.
No comments:
Post a Comment