நிலை II - நுகத்திலிருந்து (கலப்பு இந்திரியம்) மனித உருவாக்கம்

“(பின்னர் ஆண், பெண்) கலந்த ஓர் இந்திரியத் துளியைக் கொண்டு நிச்சயமாக நாம்தான் மனிதனை படைத்தோம். அவனை நாம் சோதிப்பதற்காகவே, செவியுடையவனாகவும் பார்வையுடையவனாகவும் நாமே ஆக்கினோம்” (அல்-குர்ஆன் 76:2)

நுகத்தின் கலப்பிரிவு காரணமாக தனிக்கல அமைப்பு பல் கலம் கொண்ட அமைப்பாக மாறும். இதனை நாம் முசுவுரு (Morula) என்றழைக்கின்றோம். இந்நிலையில் காணப்படும் முசுவுரு தொடர்ச்சியாக கலப்பெருக்கம் அடைந்து வளர்ச்சியுருவதன் மூலமாக கருவளர்ச்சியின் அடுத்தகட்ட படிநிலையை எட்டும். முசுவுரு நிலை கருவுற்ற நான்காம் நாள் (Day 4) இல் தோற்றம் பெரும் ஓர் கலக்கட்டமைப்பாகும்.
நிலை III - “அலக்” நிலையிலிருந்து தோற்றம்பெறல்
அலக் நிலை எனப்படுவது கருவளர்ச்சியின் மூன்றாவது படிநிலையாகும். மானிடக் கரு வளர்ச்சி சம்மந்தமாக நவீனகால மருத்துவம் மிக அண்மையில் இதுபற்றிய கருத்தை வெளியிட்டுள்ளது.
“அலக்” எனப்படும் அரபிய வார்த்தையினை நிலை IIIஆம் கட்டத்தில் குர்ஆன் பயன்படுத்துகின்றது. அலக் என்பது அரபியில் முவ்வகை வெவ்வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டதாக அமைந்துள்ளது.
I. இரத்தக் கட்டி (Blood clot)
II. அட்டை (Leech)
III. தொங்கக் கூடிய ஒரு வகையான பொருள் (Suspended thing)
இரத்தக் கட்டி (Blood clot)
மனித கரு வளர்ச்சிக் கட்டத்தில் இந்நிலைமை கருவுற்ற பின்னர் ஆறாம் தினத்தில் (Day 6) தோற்றம் பெறுகின்ற கட்டமைப்பாகும். கருவளர்ச்சியின் போது இக்காலப்பகுதியில் கலங்களின் எண்ணிக்கை சற்று இழக்கப்பட்ட பாயி நிறைந்த ஒரு கட்டமைப்பாக காட்சியளிக்கும்.

தொடர்ந்தும் கருப்பையினை நோக்கி நகரும் பிளாஸ்டோசிஸ்ட் ஆனது தாயின் கருப்பை உட்சுவரில் தன்னைப் பதித்துக்கொள்கின்றது. இது முளைய உட்பதித்தல் (Implantation) எனப்படும். இச்செயன் முறைகள் யாவும் கருவுற்ற ஆறாம் தினம் தொடங்கி 10 முதல் 14 நாட்களுக்குள் நிறைவு பெறுகின்றது.
அட்டை (Leech)


கீத் மூர் அவர்களிடம் அல்-குர்ஆனிலிருந்து கொடுக்கப்பட்ட வசனங்களை வாசித்த பின்னர்; அவர் ஆய்வுகூடத்தில் கருவளர்ச்சியின் குறித்த கட்டத்தை ஆய்வுகூடக் கருவிகள் கொண்டு அவதானித்த போது மலைத்து நின்றுகொண்டு இருந்தார். காரணம் கடந்த முப்பது வருடங்களாக ஆய்வை மேற்கொண்டுவந்த அவரே இந்நிலை பற்றி தெளிவாக அறிந்திருக்கவில்லை. கீத் மூர் அவதானித்த மானிட முளையம் மற்றும் லீச் அட்டையின் அமைப்பு கீழ் உருவமைப்பில் காட்டப்பட்டுள்ளது.
மேலும் இக்காலப்பகுதியில் அட்டை மற்றும் மனித முளையத்தின் தலைப்பகுதிகள் இரண்டும் மிக வியப்புக்குரிய வகையில் பொருந்துகின்றதனையும் எம்மால் அவதானிக்க முடிகின்றது.
தொங்கும் பொருள் (Suspended thing)
இந்நிலைமை கருவளர்ச்சிக் கட்டத்தில் சுமார் 4~8 வார காலப்பகுதியில் காணப்படும் நிலையாகும். தொடர்ந்து கருப்பையில் பதிக்கப்பட்ட முளையத்தை சூழ்ந்து சூல்வித்தகம் (placenta) தோற்றுவிக்கப்படும்.

இக்காலப்பகுதியில் முளையத்தை சூழ்ந்தவாறு மூன்று படையில் முளைய மென்சவ்வுகள் (Embryonic membranes) தோற்றம் பெற்றுக்காணப்படும். உண்மையில் மனிதனின் முளைய விருத்திப் படியின் ஆரம்ப காலப்பகுதியில் தோற்றம் பெறும் புறத்தோற்றக் கட்டமைப்புக்களை பற்றி அல்-குர்ஆன் கூறும் நிலைகளை விபரிக்கும் அரபு வார்த்தையே “அலக்” என்பதாகும். குர்ஆனிய மொழிநடை மிகவும் ஆச்சரியமாக உங்களுக்குத் தோன்றவில்லையா?
மேற்கூறப்பட்ட “அலக்” என்ற அல்குர்ஆனிய சொல்லுக்கான அர்த்தம் கருவளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்துக்கும் மிகப்பொருத்தமாக பொருந்துவதை எம்மால் அவதானிக்க முடிகின்றது. அல்-குர்ஆன் பயன்படுத்திய வார்த்தை வர்ணனைகள் எமக்கு ஆச்சரியமானதாக தோன்றவில்லையா?
இதுபற்றி புனிதமிக்க திருமறை குர்ஆன் மிக எளியதொரு வசனத்தில் கீழ்வருமாறு கூறுகின்றது. “பின்னர் அலக் என்ற நிலையிலிருந்து மனிதனை (அல்லாஹ்தான்) படைத்தான்” (அல்-குர்ஆன் 96:2)
முன்னைய தொடர்
http://www.mutur-jmi.com/2018/07/stage-of-human-creation.html
No comments:
Post a Comment