Mutur JMI

𝙅𝙪𝙣𝙖𝙞𝙙 𝙈𝙤𝙝𝙖𝙢𝙚𝙙 𝙄𝙝𝙨𝙝𝙖𝙣 𝐀𝐮𝐭𝐡𝐨𝐫 | 𝐏𝐮𝐛𝐥𝐢𝐬𝐡𝐞𝐫 | 𝐖𝐫𝐢𝐭𝐞𝐫 | 𝐅𝐫𝐞𝐞𝐥𝐚𝐧𝐜𝐞 𝐉𝐨𝐮𝐫𝐧𝐚𝐥𝐢𝐬𝐭 👉 𝙒𝙚𝙗𝙨𝙞𝙩𝙚 – www.jmi-mutur.com 👉 𝙈𝙖𝙞𝙡 – ihshanjm@gmail.com 👉 𝙁𝙖𝙘𝙚𝙗𝙤𝙤𝙠 – Ihshan J.M.I Mohamed - www.facebook.com/JMI.Ihshan 👉 𝙁𝙗 𝙥𝙖𝙜𝙚 Professional - Mutur JMI – www.facebook.com/IhshanJMI Personal - Ihshan JMI – www.facebook.com/MuturJMI 👉 𝙄𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢 – Ihshan JMI - www.instagram.com/ihshan_jmi 👉 Contact 0771020030

Business

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, August 11, 2018

சிலந்தி (Spider)

Image result for Spider“அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்பவர்களுக்கு உதாரணம் சிலந்திப் பூச்சியின் உதாரணத்தினையே போன்றது; அது (தனக்காக) ஒரு வீட்டைக் கட்டியது; இருந்தபோதும் நிச்சயமாக வீடுகளிலெல்லாம் மிகவும் பலஹீனமானது சிலந்திப்பூச்சியின் வீடேயாகும். இதை அவர்கள் அறிந்து கொண்டிருப்பார்களாயின் (தாங்கள் இணையாக எடுத்துக் கொண்டவற்றின் பலஹீனத்தை அறிவார்கள்)” (அல்-குர்ஆன் 29:41)

புனித அல்-குர்ஆன் சிலந்திப் பூச்சி வீட்டினை இறைவனை ஏற்றுக்கொள்ளாது இருப்பவர்களுக்கு உவமையாக கூறுவதன் நோக்கம் பற்றி அல்-குர்ஆன் விரிவுரையாளர்கள் சமகாலத்தில் விஞ்ஞானிகளின் அறிவியல் அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு கீழ்வருமாறு விளக்குகின்றனர்.  

Related image

சிலந்தியின் கூட்டை உலகில் உள்ள மிகவும் பலவீனமானகூடு என்று புனித மிக்க வேதமான அல்-குர்ஆன் சுட்டிக்காட்டியதன் நோக்கம் உண்மையில் மாறுபட்டதாக காணப்படுகின்றது. 

இவ்வசனமானது வெளிப்படையான பொருளில் கூறப்பட்டதன்று. மாறாக “சிலந்தியின் வீடு” என்று சொல்வது சிலந்தியின் குடும்பவியல் வாழ்க்கையை சித்தரிப்பதாகும். காரணம் புனித அல்-குர்ஆன் இங்கே கையாளும் வார்த்தை அவ்வாறான ஒன்றாகும்.  

புனித அல்-குர்ஆனிய வசனமான 29:41 இல் பயன்படும் சொல் "அவ்ஹான்" என்பதாகும். இதன் உண்மைக் கருத்து “உடலியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் கடுமையான பலவீனம் மற்றும் உதவியற்ற நிலையினை குறிப்பதாகும்.” ஏன் அவ்ஹான் என்ற சொல்லை புனிதமிகு அல்-குர்ஆன் கையாளவேண்டும். இதற்கு தற்போதைய உயிரியல் ஆய்வுகள் ஆதாரங் களைத் முன்வைக்கின்றார்கள். 

Image result for female spider eat male spiderபொதுவாக அனேகமான சிலந்தி இனங்களில் பெண் சிலந்தியானது உடலியல், மனரீதியாக ஆண் சிலந்திகளை விட வலிமையானது. இன்னும் பெண் சிலந்திகள் ஆண் சிலந்திகளை இனச்சேர்க்கை செய்ய மாத்திரமே உபயோகிக்கின்றது. 

இனச்சேர்க்கை இடம்பெற்ற பின்னர் அதனை கொன்று சாப்பிடுகின்றது. அத்துடன் பெண் சிலந்தி முட்டையிட்டு குஞ்சுகள் வெளிவந்து வளர்ச்சியடைய ஆரம்பிக்கும்.

வளர்ச்சியடைந்த இளம் சிலந்திகள் பின்னர் தாயினை கொன்று உணவாக்கும், அத்துடன் சில பொழுதுகளில் தாய் சிலந்தியானது உணவு இல்லாது போகும் சமயம் தனது குஞ்சுகளை உண்டு பசியினை தீர்த்துக்கொள்ளும். (https://www.livescience.com/45066-virgin-female-spiders-eat-males.html)

இன்னும் பசி காரணமாக இளம் சிலந்திகள் சண்டையிட்டு ஒருவரையொருவர் உண்டு உயிர்வாழும் என்றும் இன்றையகால உயிரியல்சார் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 

2013 ஆம் ஆண்டில் செக் குடியரசில் மசார்ஸ்க் பல்கலைக்கழகத்தில் இருந்து ஆராய்ச்சியாளர்களான “லேன்கா செந்தேன்ஸ்கா மற்றும் ஷ்டனோ பேகர்” என்பவர்கள் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் மேற் குறிப்பிட்ட கண்டுபிடிப்பை வெளியிட்டனர்.  

எவ்வாறு ஒரு குடும்பம் அழிவடைகின்றதோ அதனையே அல்-குர்ஆன் பலம் குன்றிய வீடு என்று மறைமுகமாக பேசுகின்றது. மிக அண்மைக்காலத்து அறிவியல் இவ்வுண்மையினை எவ்வாறு மிகவும் சூசகமாக திருக்குர்ஆன் பேசுகின்றது என்பதனை பாருங்கள். 

சிலந்தி வலை குறித்து ஆய்வுகள் கூறும் தரவு மிக அற்புதமாக இருக்கின்றது. சிலந்திகளில் பெண் சிலந்திகளே அதனது கூட்டை அமைக்கின்றனவாம்.  மேலும் தான் அமைத்த கூட்டில் தான் மட்டும்தான் அதிகாரம் செலுத்தும் என்ற தோற்றப்பாட்டையும் இவை காண்பிக்கின்றன. இது ஒருவகை அகங்கார சிந்தனைக்கு ஒப்பாக அமைகின்றது. 

Image result for Spider webபுனிதமிக்க அல்-குர்ஆன் இதனைக் குறித்து பயன்படுத்துவதும் அரபு வார்த்தை “அன்கபூத்” என்பதாகும். இச்சொல் அரபு மொழியில் “பெண் சிலந்திப் பூச்சிக்கு” பயன்படுத்தப்படுவதாகும். இக்கருத்தையே தற்போதைய நவீன உயிரியல் ஆய்வுகளும் கூறுகின்றது. 

 சிலந்தி மூலமாக உருவாக்கப்படும் வலையின் மிகப்பெரும் அமைப்பினை அது உருவாக்கும் என்று இருந்தால் அது வேகமாக ஓடும் கார், மற்றும் ஆகாய விமானங்களை கூட சிறைப்பிடிக்கும் அளவிற்கு மிக  சக்தி வாய்ந்தது என்று கருதப்படுகிறது.

 சிலந்திகள் சுரக்கும் நூல்களை கொண்டு ஒரு பாதுகாப்பு மேலங்கி (Jacket) ஒன்று உருவாக்கப்படின் அதுவே உலகில் மிகச்சிறந்த பாதுகாப்பு உடையாக அமையும் என்று விஞ்ஞானம் கூறுகின்றது. எனவே அல்-குர்ஆன் வெளிப்பொருளில் பேசவில்லை என்று புலனாகின்றது.

1 comment:

Post Top Ad

Your Ad Spot

Pages