
நகரும் கற்கள் (The Sailing Stones) பற்றி எங்காவது நீங்கள் கேள்வியுற்று இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு உண்டான சந்தேகம் தீர்க்கப்படாமல் இருப்பின் கண்டிப்பாக இதை சற்று வாசியுங்கள்.
உயிரிகளுக்கு என்று சில இயல்புகள் இருக்கின்றது. அவையாவன சுவாசம், இனப்பெருக்கம், உருத்துனர்சியும் இயைபாக்கமும், வளர்ச்சி, அசைவு மற்றும் போசனை ஊட்டம் போன்றவற்றை குறிப்பிட்டு கூற முடியும். வைரஸ் பற்றி நீங்கள் கேள்விபட்டு இருப்பீர்கள். அதனை நாம் உயிரங்கி என்று கூறுவதில்லை. பெரும்பாலும் அவற்றை நாம் மூலக்கூற்று நிலை என்றுதான் வரையறை செய்வோம். இதற்கான காரணம் அது காட்டும் உயிரி மற்றும் உயிரியல்லாத நிலைப்பாடுகளே. உயிர் கற்கள் என்று அழைக்கப்படும் விசித்திரமான கற்களே நாம் இன்று பேசவுள்ள தலைப்பு.

Joseph Crook என்பாரால் நகரும் கற்கள் பற்றி 1915ல் கண்டறியப்பட்டது. Geologic Society of America என்ற சஞ்சிகையில் 1948ம் ஆண்டுதான் இது குறித்து முதல் பதிவு மேற்கொள்ளப்பட்டது. இதற்கு காரணமாக Joseph Crook என்பாரால் பெரும் வெளியில் உண்டாகும் காற்றே காரணம் என்று கூறப்பட்டது. அதாவது சேறு நிறைந்த மண் தரையில் இருக்கும் கற்களை பெருங்காற்றுத் தள்ளிச் செல்வதாக சொல்லப்பட்டது. மேலும் கற்களின் எடை மற்றும் அடிப்பகுதியின் தன்மையினை பொருத்து இரு கற்களின் நகர்வு வேகம் வித்தியாசப்படுகின்றது.

கற்களின் நகர்வு நேரானதாக இருந்தபோதும் திடீரென அதற்கு செங்குத்தாக திசை மாறி பயணிப்பது விநோதமாக இருந்தபோதும் சில கற்கள் மீண்டும் தான் பயணித்த பாதைவழியே மீண்டும் திரும்பி நகரும் காட்சி ஒருவகை புதினத்தை தோற்றுவித்தது. 1970 இல் Bob Sharp மற்றும் Dwight Carey ஆய்வுக்குழு 30 கற்களை கொண்டு ஏழு வருடங்கள் தொடர்ந்த ஆய்வில் கற்களின் நகர்வு குறித்தி ஒரு முன்மொழிவை வைக்கின்றார்கள். அதாவது கற்கள் குறிப்பாக பனிகாலத்தில் மாத்திரமே நகர்கின்றது மாறாக கோடை காலங்களில் அமைதியாக ஒய்வு எடுக்கின்றது. இன்னும் சில கற்கள் ஒருபோதுமே நகர்வதில்லை என்றும் கூறினார்கள்.
காற்று காரணம் என்று முன்வைக்கப்பட்ட கருதுகோளை George M. Stanley என்பவர் 1955ல் விரிவாக ஆராய்ந்து அறிவியல் முடிவு ஒன்றை தந்தார்.

பின்னர் மேலும் விரிவாக தொடர்ந்த ஆய்வு குறித்த நிலப்பகுதியை சூழ்ந்து காணப்படும் Racetrack மலைப்பகுதியில் இருந்து வடிந்து வரும் நீர் சமதளத்தில் படிந்து, சேற்றினை ஏற்படுத்தி, ஏற்கனவே பனித்தகடுகளால் சூழப்பட்ட கற்களுக்கு ஒரு மேல்நோக்கித் தள்ளு விசை கொடுத்து (buoyantly lift) குறைந்த காற்று கூட எளிதில் நகர்த்திச் செல்லும் சக்தி கிடைப்பதாக முடிவு செய்யப்பட்டது.
https://www.livescience.com/37492-sailing-stones-death-valley-moving-rocks.html
https://en.wikipedia.org/wiki/Sailing_stones
https://www.nationalparks.org/connect/blog/sailing-stones-death-valley
No comments:
Post a Comment