
“நிச்சயமாக உங்களுக்கு ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகளிலும் படிப்பினை உள்ளது. அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும் இன்னும் இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இன்பகரமாக தாராளமாகப் புகட்டுகின்றோம்” (அல்-குர்ஆன் 16:66, 23:21)
மேற்கூறப்பட்ட வசனத்தில் வயிற்றில் உள்ள சாணத்திற்கும் இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப் படமற்ற பாலை உற்பத்தி செய்வதாக கூறுவதனை இன்றைய நவீன உயிரியல் மற்றும் உடலியல் ஆய்வு ஏற்றுக்கொண்டுள்ளது. அதாவது கால்நடைகளின் வயிறுகள் என்று குறிப்பிடப்படுவது இரைப்பையாகும். பொதுவாக உண்ணும் உணவுகள் இரைப்பையினை அடையு மாயின் அவை சாணம் என்று கருதப்படும்.

மேலும் இரைப்பையில் அகத்துறுஞ்சப்படும் போசணைக் கூறுகள் குருதியில் கலந்து அவை ஈரல் மற்றும் கல்லீரலுக்கு சென்று பின் ஏனைய பகுதிக்கும் அவற்றின் இயல்புகளைப் பொருத்து பாய்ச்சப்படும். இக்குறித்த செயன்முறையினை அல்-குர்ஆன் மிக எளிமையான வடிவில் விபரிக்கின்றது.
மேலும் கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இன்பகரமாக என்ற தொடர் எமக்கு பால் கொண்ட கூறுகளை விபரிக்கின்றது. பாலானது புரோட்டீன், கல்சியம், விட்டமின் A, B12, தைமின், இலிப்பிட்டு போன்ற கூறுகளைக் கொண்ட நிறையுணவாகும். மனித உடலுக்கு பயன்தரும் பல போசணைப் பதார்த்தங்களை உள்ளடக்கியும், உடலுக்கு கெடுதிதரும் பதார்த்தங்கள் அற்றதாகவும், உயிரியல் கிருமிநீக்கம் செய்யப்பட்டும் தூயநிலையில் அதாவது கலப்பற்றவாறு எமக்கு கிடைக்கப்பெறுகின்றது.
மேற்படி வசனத்தில் மற்றுமொரு கருத்தும் புதைந்துள்ளது. நாம் தாராளமாகப் புகட்டுகின்றோம். அதாவது தற்போதைய உணவு உற்பத்தியில் பால் உற்பத்தி சார்ந்த உணவுவகைகள் சந்தையில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

எதுவித நுணுக்குக்காட்டியோ அல்லது சத்திர சிகிச்சை முறையோ விருத்திபெறாத அக்காலத்தில் எவ்வாறு எழுதவோ, வாசிக்கவோ தெரியாத முஹம்மது (அவருக்கு சாந்தி உண்டாவதாக) என்ற தனி ஒருவரால் இவ்வாறான நுணுக்கமான அறிவியல் உண்மையை கூறியிருக்க வாய்ப்புண்டா? என்று ஒரு கணம் நாம் சிந்திக்கும் போது நிச்சயமாக பதில் கிடைக்கப்பெறும். அவ்வாறு இல்லையெனில் இதனைப்பற்றி யார் குர்ஆனில் கூறியிருப்பார்???????
No comments:
Post a Comment