
எப்போதுமே என்னிடம் ஒரு பழக்கம் இந்த உணவு விடயத்தில் இருந்து வந்தது. அதாவது புதிதாக ஒரு உணவை கண்டால் அதை எவ்வளவு விலைகொடுத்தும் வாங்கி உண்பது. அதுபோலவே seasonal food (சீஷன் உணவு வகை) வாங்கி உண்பேன். காரணம் ஒன்றே ஒன்றுதான். நாகரீகத்தில் சில உணவுகள் (கிளா பழம், அணிங்கி பழம், சொண்டாம் பழம், பணிச்சம் பழம்) இன்று எனது நாவை எட்ட முடியாமல் போய்விட்டது. அவைபோல இவையும் ஆகிவிடும் என்ற பயம்.
அவற்றில் ஒரு காயை எடுத்து தடவிப்பார்த்து முத்தல் கொட்டை (முதிர் விதை) எதுவென்று அனுபவத்தில் உணர்ந்து அதை தனியே காற்றிடைவெளி நிறைந்த வலைப்பின்னல் வடிவான காயின் உற்பகுதியில் இருந்து வேறுபிரித்து ஒன்றொன்றாக உரித்து வைத்த தாமரை விதையை எடுத்து அதன் தோலை அகற்ற அந்தங்களில் ஒரு கடி கடித்து பின்னர் விரல் நுனியால் தோலை அகற்றி உள்ளிருக்கும் வெண்மை சிறு பருக்கையை எடுத்து முன் பல்லினால் நடிவில் ஆரை சமச்சீர் வழியே மாத்திரம் கடித்து இரண்டாக பிளந்து பச்சை நிறமாக நடுமத்தியில் இருக்கும் முளையை அகற்றிய பின்னர் வாய்க்குளே இட்டு சாப்பிட்டால் மெய் மறந்து போவீர்கள்.







No comments:
Post a Comment