
நவரத்தினங்கள் என்று மாணிக்க வகைகளை பாகுபடுத்தி வைத்துள்ள போதும் அவற்றில் சில சிக்கல்கள் நிலவத்தான் செய்கின்றது.
நவரத்தினங்கள் என்று கூறும்போது பின்வருவனவற்றை உள்ளடக்க முடியும். உதாரணமாக வைரம் (Diamond), வைடூரியம் (Cat's eye ), முத்து (Pearl), மரகதம் (Emerald), மாணிக்கம் (Ruby), பவளம் (Coral), புட்பராகம் (Topaz), கோமேதகம் (Garnet), நீலம் (Sapphir).
பொதுவாக நவரத்தினங்கள் அழகு சாதனங்கள் உற்பத்தி, சில வகை பூஜை முறை, அணுவாயித சாதனங்கள் மற்றும் கடின பொருட்களை உடைக்கும் வேளைகளில் பயன்படுகின்றமை குறிப்பிடத்தகது.

பட்டை தீட்டுவதன் மூலமாக இவற்றின் தரம் அதிகரிக்கப்படுகின்றது. முறிவுச்சுட்டி அதிகூடிய பொருள் என்பதனால் உள்ளே நுழையும் ஒளிக்கற்றை மீண்டும் மீண்டும் கல்லின் அகத்தே முழு அகத்தெறிப்பு அடைவதன் காரணமாக கல் ஒளிர்வது போன்று தோற்றமளிக்கும். பட்டை தீட்டல் என்பது வைரத்தின் உள்ளே நுழையும் ஒளியின் தெறிப்பை அதிகரிக்க செய்யும் ஒருவகை அமைப்பு.
கண்ணாடி வெட்டுதல், சில உலோகங்களை உடைக்கவும் பயன்படும். அதுமட்டுமன்றி உயர் உருகுநிலை, கொதிநிலை கொண்ட பதார்த்தம் என்றால் இதுவே ஆகும்.
வைடூரியம் (Cat's eye ) - பழுப்பு மஞ்சள் நிறமுடைய கல். இதில் மெல்லிய வெண்ணிற கோடு காணப்படும். பார்பதற்கு பூனையின் கண்ணை ஒத்த அமைப்பாக காணப்படும். பொதுவாக இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளில் கிடைக்கபெறும். இவற்றில் பெரிலியம் அலுமினேட் சேர்மானம் கொண்டு காணப்படும். பெண்களின் அணிகலன் செய்ய அதிகம் பயன்படும்.
முத்து (Pearl) - சிப்பியின் உள்ளே உற்பத்தியாகும் ஒருவகை படிகம். குறிப்பாக சிப்பியின் மூலமாக சுரக்கப்படும் எனாமல் அல்லது மேற்றோல் படை சுரப்பு சிப்பியின் உடலில் தேங்கும் கழிவுகள் மற்றும் சிறு கற்கள் போன்றவற்றின் மீது படிவடைவதன் காரணமாக முத்துக்கள் தோற்றுவிக்கப்படும். முத்துக்கள் பொதுவாக அளவில் சிறியவையாக காணப்படும். பட்டை தீட்டுவதில்லை. இருந்தும் ஒளியை ஊடுபுக கூடியதாக இருக்கும். (மேலும் வாசிக்க http://www.mutur-jmi.com/2018/05/pearl.html)
மரகதம் (Emerald) - பச்சை நிறத்தை பெற்று காணப்படும் இது பெர்லியம், சிலிகேட், அலுமினியம் போன்ற சேர்மானங்களுக்கு மேலாக குரோமியம் காணப்படின் மாத்திரம் அவை மரகதம் என்ற நிலையை அடைகின்றது. கொலம்பியா நாட்டில் பெறப்படும் மரகதமே உலகில் மிக உயரிய மரகத வகையை சார்ந்ததாக காணப்படுகின்றது. ஆபிரிக்க நாடுகளில் அதிகம் இவை பெறப்படுகின்றன. அத்துடன் செயற்கை முறையிலும் மரகதம் போன்ற கற்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது.
மாணிக்கம் (Ruby) - இரத்தினக்கல் வகையில் உயர் ஜாதி இதுவாகும். சிவப்பு, இளம் சிவப்பு நிறத்தை பெற்றது. அலுமினியம் ஒக்சைட் சேர்மானத்தை கொண்டது. இலங்கை, மொசாம்பிக், மடகஸ்கார் போன்ற நாடுகளில் கிடைக்கப்பெறும். பொதுவாக பட்டை தீட்டுவதன் மூலமாக இதன் ஒளிக்கற்றை முறிவு செயற்பாடு விருத்தி செய்யப்படும்.

புட்பராகம் (Topaz) - மஞ்சள் நிறமுடையதாக பொதுவாக காணப்படும். நிறமற்ற, நீளம், சிவப்பு போன்ற நிறத்தை பெறுவது இவை கொண்டுள்ள தாதுக்களின் செறிவு மற்றும் சேர்க்கை காரணமாக. இருந்தபோதும் இவற்றில் தங்க நிறத்தை பெருபவற்றையே புஸ்பரகம் என்று அழைப்போம். குறிப்பாக இந்தியா, அவுஸ்டேரியா போன்ற நாடுகளில் கிடைக்கபெருகின்றது.
கோமேதகம் (Garnet) - பழங்கால தமிழ் வழக்கில் இடப்பட்ட பெயரே பிற்பட்ட காலப்பகுதியில் மருவியது எனலாம். அதாவது இந்த கல்லானது தேன் நிறத்தை அல்லது தேனீர் நிறத்தை ஒத்த சிவப்பு நிறமானது. இருந்தபோதும் இவற்றின் நிறம் பெருமளவு பசுவின் மூத்திரத்தை (சிறுநீர்) ஒத்த நிறமுடையதாக காணப்பட்டதனால் பழங்கால மக்கள் கோமூத்திரம் (கோமேதகம்) என்று அழைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தமிழ் இலக்கிய வரலாற்றில் இதனை காணமுடிகின்றது. பர்மா, இந்தியா போன்ற நாடுகளில் கிடைக்கபெறும்.

No comments:
Post a Comment