
“(நபியே!) ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா? (அல்லாஹ்வினால்) அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று” (அல்-குர்ஆன் 88:17)

பாலைவனத்தில் வாழும் ஒட்டகமானது சில விசேட சிறப்பியல்பை கொண்டமைந்துள்ளது. இது அங்கு உயிர்வாழ ஏற்ற வகையில் உடலியல் மற்றும் உளவியல் சிறப்பியல்புகளைக் கொண்டுள்ளது.
ஒட்டகத்தின் உட்குழிவு கால் பாதங்கள் - இது மணலில் புதையாத விதமாக தட்டை வடிவில் பிளவு கொண்டதாக காணப்படும்.

இதன் தோல் நீரை ஆவியாக விடுவதில்லை.
தோலின் கீழ் கொழுப்புப் படை காணப்படும். இது வெப்பம், குளிர் என்பவற்றைத் தாங்க உதவும்.
திமில்கள் எனப்படும் முதுகில் காணப்படும் பகுதியில் கொழுப்பு (Fat) சேமிக்கப்பட்டதாக காணப்படும். இதில் சுமார் 40kg கொழுப்பு காணப்படும். இங்கு காணப்படும் கொழுப்பின் பகுப்பு காரணமாக நீர் தட்டுப்பாட்டை அவை நிவர்த்தி செய்யும்.
50°C உடல் வெப்பநிலையில் நீர், உணவுகள் இன்றி சுமார் எட்டு நாட்கள் உயிர்வாழும். ஏனைய விலங் குகளினால் ஒரு நாள் கூட தாங்கமுடியாது.


இதன் கண், மூக்கு விசேட சிறப்பியல்பு கொண்டு ஆக்கப்பட்டுள்ளது - பாலைவன தூசுக்களில் இருந்து பாதுகாக்க கண் மூன்று வகை கண் மடல்களை கொண்டமைந்துள்ளது.
இதன் உதடுகள் மற்றும் பற்கள் விசேடமாக சில உணவுகளை உண்பதற்கென இசைவாக்கப்பட்டது. இவை இதனால் கடினமான பொருட்களைக் கூட மிக இலகுவாக உண்ணும் திறன் பெறுகின்றது.

இதன் பால், இறைச்சி என்பன மிக போசாக்கு மிக்க மனித உணவாக பயன்படும்.
ஒட்டகத்தின் இரைப்பை மூன்று அறைகளைக் கொண்டது. இதனால் இவை நீரை அதிகமாக சேமித்து தேவையான பொழுதுகளில் அதனை பயன்படுத்தும் இயல்புகொண்டது.
ஒட்டகத்தின் குருதிக் கலங்கள் (RBC) ஏனைய விலங்குகளைப் போல் அல்லாது நீள்வட்டமாக காணப்படும். இது நீர் பற்றாக்குறை மற்றும் உயர் நீர்செறிவு நிலைகளில் போது விறைப்புத் தன்மையை பேண உதவுகின்றது.
உருவமைப்பில் பெரியதாக இருந்தாலும் மிக மிருதுவான குணம் கொண்டதாக காணப்படும்.

இதுபற்றி குர்ஆன் இவ்வாறு கூறுகிறது.
“(அதுவும் அவசர அவசரமாக) தாகித்த ஒட்டகம் குடிப்பதைப் போல் நீங்கள் குடிப்பீர்கள்” (அல்-குர்ஆன் 56:55)
மேற்கூறப்பட்ட விசேட சிறப்பியல்புகளை கொண்ட ஒட்டகங்களை பற்றி குர்ஆன் வினவுவது சரியானதே.
No comments:
Post a Comment