Mutur JMI

𝙅𝙪𝙣𝙖𝙞𝙙 𝙈𝙤𝙝𝙖𝙢𝙚𝙙 𝙄𝙝𝙨𝙝𝙖𝙣 𝐀𝐮𝐭𝐡𝐨𝐫 | 𝐏𝐮𝐛𝐥𝐢𝐬𝐡𝐞𝐫 | 𝐖𝐫𝐢𝐭𝐞𝐫 | 𝐅𝐫𝐞𝐞𝐥𝐚𝐧𝐜𝐞 𝐉𝐨𝐮𝐫𝐧𝐚𝐥𝐢𝐬𝐭 👉 𝙒𝙚𝙗𝙨𝙞𝙩𝙚 – www.jmi-mutur.com 👉 𝙈𝙖𝙞𝙡 – ihshanjm@gmail.com 👉 𝙁𝙖𝙘𝙚𝙗𝙤𝙤𝙠 – Ihshan J.M.I Mohamed - www.facebook.com/JMI.Ihshan 👉 𝙁𝙗 𝙥𝙖𝙜𝙚 Professional - Mutur JMI – www.facebook.com/IhshanJMI Personal - Ihshan JMI – www.facebook.com/MuturJMI 👉 𝙄𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢 – Ihshan JMI - www.instagram.com/ihshan_jmi 👉 Contact 0771020030

Business

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, August 28, 2018

#பிச்சை_கேற்பதை_விடுத்து_தன்னிறைவு_காண்போம்....

Image may contain: tree, sky, outdoor and natureசமூகமட்டத்தில் காணும் பல பிரச்சினைகளுக்கு சமகாலத்தில் எழுந்துள்ள சித்தாந்த மாற்றுமறை சிந்தையே அடுத்தவன் இடத்தில் கையேந்தி தனது தேவையை நிறைவு செய்யும் தோற்றப்பாடு. எம் மூதாதையர் வரலாற்றில் காணா ஒரு காட்சி அண்மைய நவீனத்துவ நாகரகத்தில் நானும் உள்ளடங்கும் பிச்சைக்கார சமூகத்தில் எழுந்து வருவது ஒரு பலஹீனமான சமூககட்டமைப்பை எதிர்காலத்தில் தோற்றுவிக்கும் என்பதில் ஐயப்பாடில்லை.
பல குறைபாடுளும் தேவைகளும் இருந்தபோதும் எம்மிடம் அதற்கான #பொருளாதார மற்றும் #ஆலனித்துவ_வளங்கள்_தாரளமாக_காணப்பட்டும் அவைகள் எமது குருட்டு கண்களுக்கு புலப்படமால் வாக்கு வங்கி நிறைக்க நாக்கை தொங்கப்போட்டு அலையும் கூட்டத்திடம் கையேந்தி எத்தனை காலம் அடிமை சமூகமாக வாழ போகிறீர்கள். இடைநிலை சமூகம் செய்த தவறை நீங்களும் தொடராமல் அடுத்த தலைமுறையாவது முதுகெலும்போடு நடமாட வழிகாட்டுங்கள்.
Image may contain: sky, car, tree, cloud and outdoorமூதூர் போக்குவரத்து நெடுஞ்சாலையில் காணப்படும் முக்கியதத்துவம் வாய்ந்த ஒரு பயனப்பாதையே #பாலத்தோப்பூர்_சந்தியில்_அமைந்துள்ள_சிறிய_பாலமானது. இது கடந்த #இரு_தசாப்தங்களுக்கு மேலாக நீண்டகால சிந்தனையற்ற அன்றைய தேவைகளை மட்டும் நோக்கக்கொண்டு அமையபெற்ற சுமார் #18m_நீளமான_இரும்பு_பாலம் இன்றும் அதே பரிமாணத்தில் பயன்படுத்தப்படுவது ஒரு கவலைக்குரிய விடயமாகும். மேற்படி பாலத்தின் பிரச்சினை குறித்து பல்வேறு அரசியல் மட்டங்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தியும் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படும் மிகச்சிறிய ஒதுக்கீடு அரசியல் அதிகாரத்தையும் மக்களின் தேவைகளில் மீதுள்ள அரசியல்வாதிகளின் அசமந்த போக்கையும் அப்பட்டமாக வெளிக்காட்டுகிறது.
குறிப்பாக இலங்கையில் பிரசித்திபெற்ற #புனித_பூமிகளில்ஒன்றான #சேருவெல பிரதேசம் மற்றும் #வரலாற்று_தொடர்புமிக்க_இலங்கை_துறை_முகத்துவாரம்போன்ற பிரதேசங்களுக்கு செல்லும் பிரதான வீதியின் ஆரம்பத்தில் காணப்படுவதே பாலத்தோப்பூர் பாலம். சுற்றுலாக் காலங்கள் மாத்திரமன்றி ஏனைய காலங்களிலும் தனக்கென ஒரு போக்குவரத்து நெரிசலை கொண்டுள்ள குறித்த வீதியானது கொண்டுள்ள பாலத்தின் அகலம் ஒரு போக்குவரத்து அசவ்கரியத்தை உண்டாக்குகின்றது.
அதாவது இரு வாகனங்கள் எதிர் எதிரே மற்றும் சமாந்தரமாக வருகின்ற வேளையில் ஒரு வாகனம் மாத்திரமே பாலத்தை கடக்கவேண்டியதுடன் ஏனைய வாகனங்கள் கடப்பதற்கு தரித்தி நிற்கவேண்டிய அளவிற்கு மிக ஒடுக்கமாக இருப்பது மிகப்பெரும் குறைப்பதாக காணமுடிகிறது.
Image may contain: tree, sky, plant and outdoorமேற்படி பிரச்சினை குறித்து #மக்களே_ஏன்_முன்வந்து_தீர்க்க_முடியாது போனது இவ்வளவு காலங்களிற்கு என்பதே எனது அடிப்படை கேள்வியாக எழுந்துள்ளது.
1. சமூகத்தில் உள்ள ஒருசில நபர்களை உள்ளடக்கிய குழுவொன்று பாலத்தை மீள் பரிமானம் செய்ய #நிதி_திரட்டலை மூதூர், தோப்பூர், மற்றும் ஏனைய பிரதேசங்களில் மேற்கொள்ள முடியுமல்லவா?
2. #மக்களின்_மகஜர்களை ஒன்றினைத்து #அரசசேவைமட்டங்களில் முயற்சித்து இருக்கலாம் அல்லவா?
3. #விழிப்புணர்வை உண்டாக்கும் பதாகைகள் மற்றும் #செய்தி_பதிவுகளை இதுவரை காலங்களில் பொதுப்படையாக மேற்கொண்டு இருக்கலாம் அல்லவா?
4. சமூகத்தில் கிடைக்கப்பெறும் #சகாத்#சதகா மற்றும் #நன்கொடைகளை கொண்டு சேமிப்பு ஒன்றை மேற்கொண்டு இருக்கலாம் அல்லவா?
5. சமூகத்தில் காணப்படும் #தனவந்தர்கள்#வெளிநாட்டு_வேலைபார்ப்பவர்கள் தங்களால் இயன்ற சிறு தொகையை இதற்காக ஒதுக்கீடு செய்ய முன்வந்திருக்கலாம் அல்லவா?
6. #இளஞ்சர்_குழுக்கள் ஒன்றினது பாதசாரிகள், கால்நடைகள், மற்றும் சிறிய வாகனங்கள் செல்லும் சிறு #மரத்தினால்_ஆனா_பாலம் ஒன்றை அமைத்து இருக்கலாம் அல்லவா?
7. பிரதேச சபை ஒதிக்கீடு ஒதுக்கப்பட்டு இருக்கலாம் அல்லவா?
8. தனியார் நிறுவங்கள், #வெளிநாட்டு_உதவிகள்,#என்ஜியோநிறுவங்கள் ஊடாக உதவிகளை பெற்று இருக்கலாம் அல்லவா?
9. மாற்றுமத (பெளத்த, இந்துக்கள்) #மதஸ்தல_நிதி உதவிகளை பெற்றுகொண்டு இருந்து இருக்கலாம்?
10. #அரசியல்_வாதிகளை_எதிர்பார்க்காமல் இருந்து இருக்கலாம் அல்லவா?
தன்னிறைவை நோக்கிய பயணத்திற்கு ஒருகுழு முன்வரட்டும்.................

video இணைப்பையும் காண 

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages