
ஒவ்வொரு ஊருக்கும் என்று தனித்துவ சில பாரம்பரிய உணவுகள் இருக்கின்றது. அவ்வுணவுகளை வேறு ஊறிய காண்பது கடினம். அத்துடன் அந்த உணவு தயாரிப்பு முறையில் அந்த குறித்த ஊராரே தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பது ஒரு விசேட அம்சமாகும். முதூர் பணியம் என்று விசேட பெயர் கொண்டும் இது அழைக்கப்படுகின்றது.
அவ்வாறான மூதூரின் மண்வாசனை உணவுகளில் பணியம் என்று அழைக்கப்படும் முட்டை, கோதுமை அல்லது அரிசி மா, சீனி கலந்து தயாரிக்கப்படும் ஒரு இனிப்பு உணவாகும்.

பணியத்தை உற்பத்தி செய்யவே என்று விசேடமாக தயாரிக்கப்பட்ட கிண்ணி (அச்சு- mould) அமைக்கப்படுவதே இந்த உணவிற்கு பலவேறுவகை புறத்தோற்ற வடிவத்தை அளிக்கின்றது. கிண்ணிகள் தயாரிப்பில் சிக்கல்கள் உள்ளமையினால் வெளியூர்களில் இந்த உணவின் பரவலாக்கம் சற்று மந்தமாகவே கணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சுடப்பட்ட பணியம் மேல் புறம் ஓடு தோற்றம் பெரும். இது மிகவும் உறுதியற்ற மேற்போர்வை என்பதனால் அதிர்வுகளிற்கு உடைவுற வாய்ப்புண்டு. இதனை உடையாது பாதுகாப்பது ஒருவகை கலையென்றும் கூறலாம்.
#தயாரிப்பு_முறை (எளிய ரெசிப்பி)
குறிப்பாக 4 ஊர் கோழி (நாட்டுக்கோழி) முட்டையை முழுமையாக மஞ்சள் கருவும் வெண்கருவும் கலந்து ஒரே நிறமாக மாறும் வரை கடைதால் (Beating). பின்னர் 250g சீனியை இட்டு சீனி கரையும் வரை கடைதல் பின்னர் 250g அரிக்கப்பட்ட அரிசி மாவை இட்டு கடைந்து உரிய பருவம் பெறப்பட்டதும் கிண்ணியில் ஊற்றி வெப்பக்காற்று வழங்குதல். பழைய முறையில் பணியச் சட்டி, போறனை பேக்கறியில் வைப்பார்கள். தற்போது அவன் (oven) பாவனை செய்யப்படுகிறது.

👉 மத்து - மூலப்பொருட்கள் (மா, சீனி, முட்டை) கடைய (பீடிங்) செய்ய பயன்படும் அடி பருத்த மரத்தினால் ஆனா பொருள்.
👉 கிண்ணி - கடையப்பட்ட பாவை ஊற்றி வடிவம் கொடுக்கும் அச்சு
👉 பணியச்சட்டி - பானை ஒன்றில் மேல் கீழ் தேங்காய் கோம்பை (coconut outer cover) தீ வைத்து பற்றவைக்கப்படும் பெரிய மண் பானை
#விசேட_பண்புகள்
சுடச்சுட உண்பது என்பது எழுத்துக்களால் வர்ணிக்க முடியாத அனுபவம். ஒன்றோடு ஒப்பிட்டு சொல்லும் அளவிற்கு இதன் சுவை அதற்கு மட்டுமே உரித்தானது என்ற உயரிய தரத்தை பெறுகின்றது. அதிலும் உடன் உண்பதற்கு ஒரு நாள் இருநாள் மற்றும் பல நாள் சென்று உண்பதற்கு வெவ்வேறு சுவையை அளிக்கும் தன்மை இதற்குண்டு.

மற்றும் வெவ்வேறு அளவுகள் மற்றும் வடிவங்களில் இதனை பெறமுடியும். சாதாரண சூழல் நிபந்தனையை நீண்டநாள் பழுதடையாமல் பாதுகாப்பாக இருக்கும் உணவு.
#கலாச்சார_பண்பாட்டு_பாரம்பரியம்
பெருநாள் காலங்கள், திருமண ஒப்பந்தங்கள், வெளியூர்களின் பயண அன்பளிப்பு போன்றவற்றிற்கு பணியம் குறிப்பாக தயாரிக்கப்படுவது இந்த ஊரின் கலாச்சார பண்பாட்டு பாரம்பரியம் ஆகும்.
#குறிப்பு -
பல்கலைக்கழக கற்கையில் இறுதியாண்டில் வழங்கப்படும் Product Development projects ஒன்றில் மேற்படி காரணங்கள் அடிப்படையில் எனது நண்பன் ஒருவன் பணியம் தேர்வு செய்து தயாரிப்பு, பாதுகாப்பு ஆய்வு மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment